""ஏண்டா கனவுன்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?''ன்னு "கோவில்'’ படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி சீன் ஒண்ணு வரும். அது மாதிரிதான் "புகழ்ச்சின்னாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா'ன்னு கேக்குற அளவுக்கு கோலிவுட்டில் அவ்வப்போது சில சீன்கள் கிரியேட் ஆகும். கடந்தவாரம் அப்படிப்பட்ட கிரியேட் சீன்களின் சீக்வென்ஸ் பலபேரை கிறுகிறுக்க வைத்தது, சிலரை புல்லரிக்க வைத்தது.

சீ.சீ.-01

"பிக்பாஸ்' மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஆவரேஜ் ஹீரோக்களுடன் கூட இதுவரை ஜோடி போடாட்டாலும் ஐஸ்வர்யா தத்தாவின் கால்ஷீட்டும் மார்க்கெட்டும் செம பிஸியாகத்தான் இருக்கும். விஜய்ஸ்ரீஜி என்பவரின் "பொல்லாத உலகில் பயங்கரம்'’என்ற படம், பிக்பாஸின் லேட்டஸ்ட் வின்னரான ஆரியுடன் ஒரு படம், அப்படி... இப்படி என ஏழெட்டு படங்களை கையில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. இப்ப லேட்டஸ்ட்டா ஆந்தாலஜி படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார்.

dd

Advertisment

சினிமாவின் மீது தீவிர காதலும் அர்ப்பணிப்பும் கொண்டவர் (இம்புட்டு நாளா நமக்கு இது தெரியாமப் போச்சே) ஐஸ்வர்யா தத்தா. கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையைக் குறைப்பதையும் கூட்டுவதையும் பார்த்திருக்கிறோம்.

"ஷ்ஷ்ஷ்' என்ற ஆந்தாலஜி படத்திற்காக 13 கிலோ உடல் எடையைக் குறைத்து புத்தம்புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. இவரின் கையில் இருக்கும் படங்கள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம், திரைவாழ்வின் திருப்புமுனைப் படங்கள்’’

இதுக்கு முந்தைய இரண்டு பேராகிராப்பில் இருக்கும் வார்த்தைகள் எல்லாமே ஐஸ்வர்யா தத்தாவின் பி.ஆர்.ஓ. ரேகா சொன்னதுதான்.

ஷ்ஷ்ஷ்ப்பா முடியல.

சீ.சீ.-02

என்.முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் துணைத் தலைவராக இருப்பவர் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ். இவர் ஹீரோவாக நடிக்கும் "வேட்டை நாய்'’என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் கடந்தவாரம் நடந்தது. படத்தின் ஹீரோயின் சுபிக்ஷா, வெயிட்டான கேரக்டரில் நடிக்கும் ராம்கி, கவுன்சில் தலைவர் முரளி, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் உட்பட பல வி.ஐ.பி.க்கள் இந்த ஃபங்ஷனில் ஆஜராகியிருந்தனர்.

மைக்கைப் பிடித்த எல்லாருமே குந்தாங்கூறாகப் பேசி, ஃபங்ஷனையே டரியலாக்கினார்கள்.

c

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,’""சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போலவே ஆர்.கே.சுரேஷ் இருக்கிறார். ’"பைரவி'’ படத்தின் ரைட்சை கலைஞானத்திடமிருந்து வாங்கி வந்தால், ஆர்.கே.சுரேஷை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க நான் தயார். வருங்கால ரஜினிகாந்த் ஆர்.கே.சுரேஷ்தான்'' என்றார்.

டைரக்டர் பவித்ரனோ, ""ஆர்.கே.சுரேஷைப் பார்த்தால் அந்தக் காலத்து விஜயகாந்தைப் பார்க்குற மாதிரியே இருக்கு''’எனச் சொல்லி கிறுகிறுக்க வைத்தார்.

அந்த ரெண்டு பேராவது பரவாயில்ல, என்.முரளி போட்டாரே ஒரு போடு... கொரோனாவே கொலை வெறியாகிருக்கும். “’""சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அப்புறம் வெள்ளைத் தாடி கச்சிதமா பொருந்துவது ராம்கிக்குத்தான்''’என்றாரே பார்க்கலாம்.

இந்த ரணகளத்துல யும் ஒரு கிளுகிளுப்பு என்னன்னா... ‘கோலிசோடா-2வில் ஹீரோயினாக அறிமுகமான சுபிக்ஷாவுக்கு "வேட்டை நாய்'’’ இரண்டாவது படம். அவரைப் பத்தி ஆர்.வி. உதயகுமார் பேசும்போது, ""சென்னையிலேயே இப்படி ஒரு அன்னக் கிளி இருக்கும்போது, வேற மாநிலத்துக்கு ஏன் போகணும்?''னு பேசுனது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களான ஜோதிமுருகன், விஜய்கார்த்திக் என்ற இரண்டுபேரின் தைரியத்தைப் பத்தி யாருமே பேசல.

ஸ்ஸ்ஸ்ஸப்பா ஓவரா கண்ணக்கட்டுதே.

சீ.சீ.-03

"வலிமை'’ படத்தின் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் போனிகபூரையும் டைரக்டர் எச்.வினோத்தையும் சோஷியல் மீடியாவில் ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள் தல அஜீத்தின் ரசிகர்கள். இதனால் சற்றே டென்ஷனான அஜீத், ""இந்த பாருங்க, சினிமாங்குறது உங்களுக்கு பொழுது போக்கு, எனக்கு தொழில். "வலிமை' படத்தின் அப்டேட் வரவேண்டிய நேரத்துல வரும். அதுவரைக்கும் என்னை சோதிக்காதீங்கய்யா''’என்ற அறிக்கையைவிட்டு ரசிகர்களை ஆஃப் பண்ணினார் அஜீத்.

Advertisment

cc

இப்ப என்னடான்னா ரசிகர்களை நினைத்து அஜீத் ஃபீல்பண்ணிருப்பாரோ என்னவோ, 2007-ல் ரிலீசான ‘"பில்லா'’’ படத்தை வர்ற மார்ச் 12-ஆம் தேதி மறுபடியும் ரிலீஸ் பண்ணப் போறாகளாம்.