சென்னை -சேலம் தேசிய நெடுஞ் சாலையில் கள்ளக்குறிச்சி டோல்கேட் அருகே வீரசோழபுரம் பகுதியில் 39.81 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 139.41, கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, டிசம்பர் 26-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு ஜில்லாவாக இருந்து, பிறகு தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் மாவட்டம் என்று உருவானது. 1991-96 ஆட்சிக் காலத்தில் கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டமும், 2019-ல் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும் உருவாயின.
கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஏற்கனவே 2,302 கோடி மதிப்பில் தைவான் நாட்டின் பவுசன் குழுமத்தின் தோல் இல்லா காலணித் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்துவருவதை முதலமைச்சர் நேரில்சென்று பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி புறப்பட்ட முதல்வர், ஏமப்பேர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் முழு திருஉருவச் சிலையை மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் புவனேஸ்வரி முன்னிலையில் திறந்துவைத்தார். 12 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகமருகே அமைக்கப் பட்டிருந்த விழா மேடையில் அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முதல்வர், 1773.63 கோடி மதிப்பில், மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப் பணிகளை துவக்கிவைத்தார். 2,16,056 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார். 341.71 கோடி மதிப்பில் 62 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல்நாட்டினார்.
விழாவில் முதல்வர் பேசும்போது, “"திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு. சிலர் வாயாலேயே வடைசுடுகிறார்கள். மக்களை நேரடியாகச் சந்திக்கின்ற திறன்கொண்ட அரசு இது. ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் நம்முடைய திட்டங்களைப் பின்பற்றி செயல்படுத்துகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் 3,18,376 சகோதரிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் திட்டத்தை பல மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. அதேபோல் தாயுமானவர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், இப்படி பல்வேறு திட்டங்கள்மூலம் மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகிறார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நாமக்கல் லைச் சேர்ந்த கமலி என்பவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாளராக தேர்வுபெற்றிருக்கிறார். அவரது தந்தை நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் திட்டத்தின்கீழ் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3,834 நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது.
இப்படி திராவிட மாடல் அரசு செயல்படுத்திவருகின்ற அத்தனை திட்டங்களிலும் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தியிருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 11.19% பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் உற்பத்தி, தோல் இல்லாத காலணிகள் உற்பத்தி, ஸ்டார்ட் அப் தரவரிசை என்று எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடராகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகளவில் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். வறுமை, பட்டினிச் சாவு, இல்லாத மாநிலம் தமிழ்நாடு.
ஒன்றிய அரசின் தரவுகளின்படி இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமும் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே சிறந்த பொதுப்போக்கு வரத்தை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. எந்த அரசும் செய்யாத சாதனையாக கடந்த நாலு ஆண்டுகளில் நாலாயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சிறு பான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்றியிருக்கிறோம். மதவெறிக் கும்பலுக்குப் பயப்படாமல் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ்கின்ற சூழ்நிலையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறோம்.
இப்படி எம்மதமும் சம்மதம் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் இந்த ஒற்றுமையை, நல்லிணக்கத்தை அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்த நினைக்கின்றது பாரதிய ஜனதா. அந்தர்பல்டி அடித்தாலும் ஒற்றுமை யாக வாழ்கின்ற தமிழ்நாட்டு மக்க ளிடம் மதவெறியைத் தூண்டமுடி யாது. இந்த ஸ்டாலின் இருக்கின்ற வரைக்கும், எங்கள் திராவிட மாடல் அரசு இருக்கின்ற வரைக்கும், உங்க ளுடைய மதவெறியாட்டத்திற்கு இங்கே இடமில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணி களை செய்ய, போதிய கால அவ காசம் வேண்டும் என்று சொன்னோம், அவர்கள் கேட்கவில்லை. எனவே வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் உடனே உங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரின் வாக்குரிமையும் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும். 2026-ஆம் ஆண்டில் நாம் வெற்றி பெற்று தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த கட் டத்தை தொடங்கப்போகிறோம்''’என்றார் முதல்வர்.
விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ. வேலு, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப் பினர்கள் உதயசூரியன், மணிக்கண்ணன், லட்சுமணன், கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்பராயலு உட்பட கட்சியின் பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுசெய்திருந்தனர்.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/kalakuruchi-2025-12-29-17-42-58.jpg)