தோல் தொழிற் சாலைகளுக்கும், பிரியாணிக் கும் பெயர்பெற்ற ஆம்பூர் நகரத்தில் ஒரு லட்சத்துக்   கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அதில் 50% முஸ்லிம்கள், 45% இந்துக் கள், 3%  கிறிஸ்துவர்கள். பட்டியலின சமூகத்தினர் அதிகம் வசிக்கும் நகரமிது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆம்பூரில் கிறிஸ்துவ கல்வி சங்கமும், முஸ்லிம் கல்வி சங்கமும், இந்து கல்வி சங்கமும் கல்விக்காக போட்டி போட்டுக்கொண்டு பள்ளிகளைத் தொடங்கின. இந்தப் பள்ளிகளில் ஆயிரக் கணக்கான மாணவ- மாணவிகள் படித்துவரு கின்றனர். 

Advertisment

ஆம்பூர் கல்வி வட் டத்தில் 87 தொடக்கப்பள்ளிகள், 32 நடு நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 29 பள்ளிகள் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள். இதில் நகராட்சி எல்லையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 24 பள்ளிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத்தின்கீழ் 5 தொடக்கப்பள்ளி, 4 நடுநிலைப்பள்ளி, 1 உயர்நிலைப்பள்ளி உள்ளன. தனியார் பள்ளிகளாக 2 தொடக்கப்பள்ளி, 2 உயர் நிலைப்பள்ளி, 7 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் இரண்டு. அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றுகூட இல்லை. 

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த நகரமன்ற முன்னாள் உறுப்பினர் ராமஸ்ரீனி வாசன், “"இந்நகரத்தில் 36 வார்டுகள் உள்ளன, அரசுப்பள்ளிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இங்கு அரசு மேல் நிலைப்பள்ளியே கிடை யாது, ஒரே ஒரு உயர் நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது, அதுவும் மகளிருக்கு மட்டுமே. அப்பள்ளியும் ஊரின் ஒதுக்குப்புறமாக             உள்ளது. அரசின் நடுநிலைப்பள்ளியில் படித்துமுடிக்கும் மாணவ- மாணவிகள் 9-வது சேரவேண்டுமென்றால் ஒன்று தனியார் பள்ளியில் சேரவேண்டும் அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சேரவேண்டும். இல்லையேல் வெளியூர்தான் செல்லவேண்டும். அதேபோல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 10-வது முடிக்கும் மாணவிகளும், 11-வது, 12-வது படிக்க தனியார் பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளியிலேயே சேரவேண்டிய கட்டாயம். ஆம்பூர் நகரத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உருவாக்கவேண்டும் என பலமுறை பலரிடம் மனு தந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை''’ என்றார்.

ஆம்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், கல்வியாளர் மங்கையர்க்கரசியிடம் பேசியபோது, “"ஆம்பூர் நகரம் சிறுபான்மை மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. கிறிஸ்துவ கல்வி சங்கமும், முஸ்லிம் சங்கமும் நடத்திய பள்ளிகளில் இந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை தரவில்லை என்பதால் இந்து கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்பள்ளிகளில் ஆசிரியர் களுக்கு சம்பளம் தருவது, பாடப்புத்தகங்கள் தருவது அரசு. அப்படியிருக்க எதற்கு தனியாக ஒரு பள்ளி தொடங்கவேண்டுமென அரசு தொடங்கவில்லை, அதற்கான தேவையும் ஏற்படவில்லை. 

Advertisment

govtschool1

அதன்பின் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு தொடக் கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங் கப்படவேண்டுமென முடிவானபின், ஆம்பூர் ஏகஸ்பாவில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. இப்போது நகரில் அரசுப் பள்ளிகள் இல்லாததால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அதாவது நீட், பொறியியல் உட்பட பல உயர்படிப்புகளில் சேர, அரசுப்பள்ளிகளில் படித்தவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு தரப்படுகிறது. இவர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் உட்பட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அதனைப்பெற 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம்   வகுப்பு வரை அரசுப்பள்ளியில் மட்டுமே படித்திருக்கவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்திருந்தால்கூட இடஒதுக்கீடு கிடைக்காது. ஆம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளியே  கிடையாது. இதனால் ஒவ்வோராண்டும் ஆம்பூர் நகரைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணாக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதே போல் அரசுப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வித்துறை, கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்கிறது. அரசுப்பள்ளியே இல்லாததால் அந்த வாய்ப்பும் இப்பகுதி மாணவர்களுக்கு இல்லை. அதனால் அரசு இதற்கு மாற்றுவழி காணவேண்டும்''” என்றார். 

சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம், “"குறைந்தபட்ச ஃபீஸ்கூட கட்டமுடியாத, ஏழை எளிய மக்கள்தான் அரசுப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்து படிக்கவைப்பார்கள். சத்தான மதிய உணவு பிள்ளைகளுக்குக்    கிடைக்கும் என்பதால் ஏழைப் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்புவார்கள். ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள் அதிகம், இதற்கு ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தேவை. படித்துவிட்டால் கீழ்மட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் முதலாளிகள், முக்கிய பிரமுகர்கள் கூட்டுச்சேர்ந்து இங்கு அரசுப்பள்ளிகள் தொடங்கவிடாமல் செய்துவிட்டார்கள். இதற்கு முன்பு ஆம்பூர் நகரம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள் இருந்தது. வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர்களே எம்.எல். ஏ.வாக தேர்வுசெய்யப் பட்டனர், அவர்கள் அப்பகுதிக்கே முக்கியத்துவம் தந்தனர். 2009-ல் ஆம்பூர் தாலுகாவும், 2011-ல் ஆம்பூர் தொகுதியும் உருவானது. 2019-ல் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்புதான் ஆம்பூருக்கான முக்கிய அரசு அலுவலகங்களே வந்துள்ளன. இப்போதுவரை அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி என எதுவும் இங்கில்லை. திருப்பத்தூர், வேலூர் என்றே எங்கள் பிள்ளைகள் பயணம்செய்து படிக்கிறார்கள்''’என வேதனையுடன் தெரிவித்தனர். 

ஆம்பூரில் அரசுப்பள்ளிகளில் சிலவற்றை உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தவேண்டும். அப்போதுதான் ஏழை எளிய மாணவ- மாணவிகள் உயர்கல்விக்குச் செல்வார்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?