Advertisment

அதானிக்கு மின்வாரியமா? அமைச்சருக்கு ஷாக் கொடுத்த தொழிலாளர் போராட்டம்!

eb

த்திய அரசின் கைப்பாவை என விமர்சிக்கப்படும் அ.தி.மு.க அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நடப்பதிலும் மத்திய அரசின் வழியையே கடைப்பிடிக்கிறது' என்கிறார்கள் மின்வாரியத்தினர். மோடி அரசின் நெருக்கடியால் "உதய்' மின்திட்டத்தில் அ.தி.மு.க. சேர்ந்தது. இதையடுத்து, .மின்துறையை தனியார்மயமாக்கும் திட் டத்தின் முதல் அடிவைப்பாக, 3 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் ஆட்களை நியமித்துக் கொள்ள அனுமதியளித்து இதற்காக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கவும் முன் வந்தது.

Advertisment

EB

தனியார் மூலம் நியமனமாகும் ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரத்து 360 ரூபாய் ஊதியம் என்றும், ஆண்டுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு என்றும் மின்வாரியத் தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் சமீபத்தில் தெரிவித்தார். மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறையாக இருந்தும், கடந்த 5 ஆண்டுகாலமாக நிரந்தரப் பணி வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஐ.டி.ஐ. படித்தவர்களையும் லைசென்ஸ் பெற்றவர்களையும் நியமித்தது.

Advertisment

2018-19ஆம் ஆண்டு ஐ.டி.ஐ.

2018-19ஆம் ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் 3,900-ம் பேருக்கு பணி நியமனத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியபோதும், அதனை மின்சாரவாரியம் கிடப்பில் போட்டது. தற்போது மின்சார வாரியத்தில் கம்பியாளர், கள உதவியாளர்கள் என 13,000 பேர் இருந்துவரும் நிலையில், ஆள்பற்றாக்குறையால் கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் தொழிற்சங்கம் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணிநியமனம் வழங்கக் கோரினர் தொழிலாளர்கள்.

வேலை முடியும்வரை தலையாட்டிய வாரியம், பேரிடர் காலம் முடிந்தவுடன் ஒப்பந்த ஊழியர்களுக்கு கொடுத்த கோரிக்கையை நிறைவேற்றாமல், காலியாக இருக்கும் 23,000 பணியிடங்களுக்கு 10 ஆயிரம் பேர் கேங்மேன் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் விண்ணப் பிக்கலாம் என ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கெதிராக தொழிற்சங்கங்கள் தரப்பிலிருந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெறப்பட்டது.

நியமனத்திற்கு தடை பெறப்பட் டாலும், "பணிக்கான தேர்வு மட்டும் நடத்தலாம்' என நீதிமன்றம் அறிவித்த நிலையில்... எழுத்துத் தேர்வு, உடல்கூறு தேர்வு நடத்தப்பட்டு 16,300 பேர் தேர்ச்சி பெற்று அதில் 10 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படும் நிலையில், இந்த வழக்கை சுட்டிக்காட்டி மீண்டும் தனியாருக்கே தாரைவார்க்க அரசு முனைப்புக் காட்டியது. இதற்கான பயிற்சி முகாம் நடத்த அதானி குழுமத்திற்கு அரசே உதவியது.

eb

அதுமட்டுமல்ல, ஒரு யூனிட் மின்சாரத்தை 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு 1.60 பைசாவுக்கு வழங்கி வருகிறது அரசு. மின்துறையில் தனியார் வரும்போது மக்கள் ஒரு யூனிட்டுக்கு 7.50 பைசா செலுத்தவேண்டிய நிலை உருவாகலாம். மேலும் டெண்டர் எடுக்கும் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள ஒரு நாள் கூலி 412 ரூபாயை முழுமையாக அளிக்குமா என்பது சந்தேகமே. குறைந்த ஊதியத்தில் பணிசெய்ய வட மாநிலத்திலிருந்து வேலை தேடி வரும் தொழிலாளர்கள் தயாராக இருப்பார்கள் என்பதால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும் நிலை உருவாகும். இந்த காரணத்தை முன்வைத்தே, இந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெறவேண்டுமென தமிழகம் முழுவதுமுள்ள மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

"தமிழக மின்சார வாரியத்தில் அதானி குழுமத்தின் செல்வாக்கு உள்ளது. இத்துறையில் மூன்றாவது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ள பங்கஜ்குமார் பன்சால் நியமனத்துக்கும், மின்வாரியத்தின் ஆணை எண் 82 மூலமாக மின்வாரியத்தின் கள உதவியாளர், கம்பியாளர் பணியை தனியாருக்கு தாரைவார்க்க முடிவுசெய்ததற்கும் அதானி நிறுவனத்தின் செல்வாக்கே காரணம்' என இத்துறையில் நீண்ட அனுபவமுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஓய்வுபெற்ற முன்னாள் மேற்பார்வை பொறியாளர் காந்தியோ, “""தமிழக மின்வாரியத்தையே முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க இது முதல்படி. அதற்காகத்தான் மின்வாரியத்தின் தலைவராக பங்கஜ்குமார் பன்சாலை நியமனம் செய்துள்ளனர். இதனை வாபஸ் பெறவேண்டும். மீண்டும் ஒப்பந்த ஊழியர்களே பணியில் அமர்த்தப்படவேண்டும்''’’ என்றார்.

tt

மின்வாரிய தலைவர், மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் நேரில் சென்றபோதும் பேசமறுத்துவிட்டார். துணை இயக்குனர் வினித்தோ, “""அதானி குழுமத்துக்கு பயிற்சி ஏதும் தரவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் செயல்படுத்துகிறோம்''’என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இந்நிலையில் மின்வாரியத்தைச் சேர்ந்த நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், “""நாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். அரசு அறிவித்தபடி கேங்மேன் தேர்வில் தேர்ச்சிபெற்ற 10 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யுங்கள். மீதமுள்ள காலி இடத்திற்கு எங்களை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்து ஒரு நாளைக்கு 380 ரூபாய் சம்பளம் என 481 நாள் பணி புரிந்திருந்தால், அவர்களை நிரந்தரம் செய்யுங்கள். அதேபோல துணை மின்நிலையத்தை 3 ஆண்டுகள் தனியாருக்கு விடும் ஒப்பந்தத்தைக் கைவிட்டால் நாங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்கிறோம்'' என அறிவித்து போராட்டத்தில் இறங்கினர்.

தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் அம்பலப்பட்ட துறை அமைச்சர் தங்கமணி ஷாக் ஆகி, மின்வாரியத்தில் ஊழியர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். முதல் கட்டத்தில் தொழிலாளர்கள் வென்றிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்குமோ?

-அ.அருண்பாண்டியன்

படம்: அசோக்

nkn261220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe