றைந்த ஜெயலலிதா திடீரென அசரீரி போல தோன்றுவார், பேசுவார். உடனே தமிழக மீடியாக்கள் பரபரப்பாக அதைப் பற்றி மட்டும் அதிகமாக பேசும்.

jayalalitha

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த 26ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஆஜரான ஜெ.வின் பர்சனல் டாக்டர் சிவகுமார் கொடுத்ததாக விசாரணைக் கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி தனது செயலர் மூலம் நான்கு ஆவணங்களை 2.45-க்கு வெளியிட்டார். அதில் இரண்டு ஜெ. மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் முன்பு செப்டம்பர் 2-ல் போயஸ் கார்டனில் உட்கொண்ட உணவு பற்றிய பட்டியல். காலை 5 மணிக்கு ஜெ.வின் இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது. அது உணவுக்கு முன் 190 எனவும், உணவுக்குப் பின் 175 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஜெ.வின் காலை சிற்றுண்டியாக காலை 5.35 மணிக்கு ஒன்றரை இட்லி, 4 ப்ரெட் துண்டுகள், 400 மி.லி. காபி, 250 மி.லி இளநீர் அளிக்கப்படுகிறது. 15 நிமிடம் கழித்து கிரீன் டீ அருந்துகிறார். காலை 8.55 மணிக்கு ஆப்பிள் ஒன்றை சாப்பிடுகிறார். 9.40 மணிக்கு காபியும் பிஸ்கட்டும் சாப்பிடுகிறார். மதிய உணவாக ஒன்றரை கப் பாசுமதி அரிசி சாதம், ஒரு கப் தயிர், பழங்கள், காபி என சாப்பிடுகிறார். இரவு இட்லி, தோசை, ப்ரெட், பால் என போகிறது. ஜெ.வின் உணவு லிஸ்ட்டில் உணவுடன் இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்கிறார் என குறிப்பிடப்படுகிறது.

opsஇவை அனைத்தும் ஜெ. தன் கைப்பட எழுதிய உணவுக் குறிப்புகள் என்கிற விளக்க உரையுடன் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் என விசாரணை ஆணையம் வெளியிட்டது.

Advertisment

அதனுடன் மருத்துவ சிகிச்சையின் போது ஜெ. பேசும் ஆடியோ ஒன்றையும் டாக்டர் சிவகுமார் தாக்கல் செய்திருந்தார். அதில் டாக்டர் சிவகுமாரை தனது மூச்சுக்குழாயில் இருந்து ஆஸ்துமா காரணமாக வரும் விசில் சத்தத்தை ரெக்கார்டு செய்ய கூப்பிட்டபோது நீங்கள் ஏன் வரவில்லை என ஜெ. கேட்கிறார். அதற்கு டாக்டர் சிவகுமார் அதற்கான சாப்ட்வேரை டவுன்லோட் செய்ய முடியவில்லை என்கிறார். நீங்களும் சரி ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்யுறீங்க என அவரை திட்டுகிறார். தியேட்டர்ல முன்சீட்டில் உட்கார்ந்து விசிலடிப்பது போல சத்தம் வருகிறது என ஜெ. கிண்டலடிக்கிறார். அத்துடன் தனது ரத்த அழுத்தம் எவ்வளவு என கேட்கிறார். உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது என்கிற டாக்டரிடம், எவ்வளவு என ஜெ. மறுபடியும் கேட்கிறார். 140 என்கிறார். குறைந்த அளவு எவ்வளவு என ஜெ. கேட்கிறார். 80 என டாக்டர் சொல்ல, உயர் ரத்த அழுத்த நோய் கொண்ட எனக்கு இது நார்மல்தான் என சொல்கிறார் ஜெ.

விசாரணைக் கமிஷன் அவசரமாக வெளியிட்ட இந்த ஆவணங்கள் பெரிய விவாதத்தை உருவாக்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில், ஜெ. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவர் கட்டிலில் படுத்தபடியே ஒரு பானத்தைக் குடித்தபடி ஜெயா டி.வி.யில் ஜெய் அனுமான் சீரியலை பார்த்தார் என்பது போன்ற ஒரு சி.டி.யை தினகரன் அணியை சேர்ந்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் வெளியிட்டார். ஜெ. மர்ம மரணத்திற்கு சசிகலா காரணம் என்கிற எதிர்த்தரப்பு பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் தினகரன் தரப்பு இதனை வெளியிட்டது. அந்த வீடியோவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சீரியஸாக எடுத்துக் கொண்டது.

ஜெ.வின் மர்ம மரணத்தை பற்றி விசாரிக்க அமைத்துள்ள ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய வீடியோவை வெற்றிவேல் மீடியாக்களில் வெளியிட்டது தவறு என நீதிபதி ஆறுமுகசாமி, வெற்றிவேல் மீது சென்னை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ பற்றி கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். போன்றவர்கள் அதன் உண்மைத்தன்மை பற்றி கண்டறிய வேண்டும் என்றனர். விசாரணைக் கமிஷனும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி ஆராயப்படும் என்றது. ஆனால் டாக்டர் சிவகுமார் மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெறும் போது எடுத்த ஆடியோ ஒன்றை சமர்ப்பிக்க, அதனை விசாரணைக் கமிஷனே முக்கால் மணி நேரத்தில் வெளியிடுகிறது. அந்த ஆடியோ டேப்பின் உண்மைத் தன்மையை விசாரணைக் கமிஷன் எப்படி கண்டுபிடித்தது என கேள்வி எழுப்புகிறார்கள் வழக்கறிஞர்கள்.

Advertisment

judge-arumugasamyஅதேபோல் ஜெ. திட்டமிட்ட உணவு பழக்கத்துடன் இருந்தார், உணவோடு மருந்துகளை சேர்த்து உட்கொண்டார் என ஜெ.வே தனது கைப்பட எழுதிய உணவுச் சீட்டு என டாக்டர் சிவகுமார் சமர்ப்பித்த பேப்பர்களில் இடம்பெற்றது. ஜெ.வின் உண்மையான கையெழுத்து என விசாரணைக் கமிஷன் ஆய்வு எதுவும் செய்யாமல் எப்படி முடிவுக்கு வந்தது? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

""டாக்டர் சிவகுமார் கடந்த டிசம்பர் மாதமே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்பொழுது அவரது கையில் ஆவணங்களும் டேப்பும் இருந்தது. மார்ச் மாதம் இதைப்பற்றி சிவகுமார் நீதிபதியிடம் குறிப்பிட்டார். அந்த டேப்புகளை கேட்கக்கூடிய அளவுக்கு ஸ்பீக்கர் இல்லை என நீதிபதி ஆறுமுகசாமி ஏற்க மறுத்துவிட்டார். டாக்டர் சிவகுமார் அளித்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய நான் தான் 26-ம் தேதி அவரை வரவழைத்தேன். வந்தவுடன் டாக்டர் சிவகுமாரிடம் அந்த டேப்புகளை பற்றி நீதிபதி கேட்டார். அந்த டேப்புகளை ஒலிபரப்பும் ஸ்பீக்கரும் இருக்கிறது என டாக்டர் சிவகுமார் சொல்ல அந்த டேப்பை ஸ்பீக்கரில் கேட்ட நீதிபதி அதை உடனடியாக மீடியாக்களில் ரிலீஸ் செய்துவிட்டார்.

ஜெ. மருத்துவ சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட நான்கு வீடியோக்கள் விசாரணைக் கமிஷன் வசம் வெற்றிவேல் ஒப்படைத்துள்ளார். அதில் ஒன்றைத்தான் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். மற்ற மூன்று வீடியோக்களும் கமிஷன் வசம்தான் உள்ளன. அதையெல்லாம் வெளியிடாமல் டாக்டர் சிவகுமார் கொடுத்த ஆடியோவை மட்டும் வெளியிடுவதற்கு நிச்சயமாக அரசியல் காரணம் உள்ளது. மருத்துவமனையில் ஜெ. நல்ல உடல்நிலையில்தான் இருந்தார் என டாக்டர் சிவகுமார் கொடுத்த ஆடியோவை வெளியிடும் ஆறுமுகசாமி ஆணையம், அதையே இடைக்கால அறிக்கையாக தருமா?'' என கேள்வி கேட்கிறார் சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன்.

செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.வுக்கு அக்டோபர் 7-ம் தேதிதான் ட்ராக்கியோஸ்டமி எனப்படும் தொண்டையில் துளை போட்டு அவரது நுரையீரலை ஆக்சிஜன் சிலிண்டரோடு இணைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 22-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை ஜெ.வுக்கு சுயநினைவு மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தது. பலமுறை அவர் சைகையாலும் ஓரிரு வார்த்தைகளாலும் பேசினார் என மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து கிடைத்த செய்திகளை நக்கீரன் பதிவு செய்து கொண்டே வந்துள்ளது. 7-ம் தேதிக்கு பிறகு அவரால் பேச முடியவில்லை.

doctors

டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்த ஜெ.வுக்கு நவம்பர் 22-ம் தேதி ரசகுல்லா, குலோப் ஜாமூன் போன்ற இனிப்பு வகைகளை அப்பல்லோ நிர்வாகம் கொடுத்திருப்பது மருத்துவக் குறிப்பின் மூலம் தெரிகிறது. அதேபோல் மரணத்திற்கு முந்தைய தினங்களான டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மற்றும் மில்க்ஷேக் வகைகளை ஜெ. சாப்பிட்டார் என ஆணையத்தில் அப்பல்லோ சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நீண்டநாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெ.வுக்கு இனிப்பு வகைகளை அளித்தது. அவரது மரணத்திற்கு காரணமாகி விட்டதா? என விசாரிக்கிறோம் என ஆணையம் அறிவித்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அப்பல்லோ மருத்துவர்கள், ""ஜெ.வுக்கு கொடுக்கப்பட்ட பழங்கள் இயற்கையான இனிப்புகள் கொண்டவை. அவருக்கு அளிக்கப்பட்ட இனிப்புகள் எல்லாம் சுகர் ப்ரீ எனப்படும் இனிப்பு கலக்கப்படாத இனிப்புகள்'' என்கிறார்கள்.

கடந்த மாதத்தில் நீதிபதி ஆறுமுகசாமி பத்துநாள் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். விடுமுறை முடிந்து, திரும்பி வந்தவுடன் பரபரப்பாக அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் என்னவென தினகரன் அணி பிரமுகர் ஒருவர் தெளிவாக கூறினார். ""ஜெ.வின் மரணம்... மர்ம மரணம் என சொல்லி தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்.

அவரை விசாரணைக் கமிஷனுக்கு அழைத்து வர வேண்டுமென முதல்வர் எடப்பாடியும், சசிகலாவும் விரும்புகிறார்கள். அதனால்தான் பரபரப்பான அறிக்கைகளை விசாரணைக் கமிஷன் வெளியிடுகிறது. இந்த பரபரப்பு வெளியீடுகளால் ஒரு பக்கம் தூத்துக்குடி சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டத்தை திசை திருப்ப முடியும். அதேநேரம் ஓ.பி.எஸ்.சை வம்புக்கு இழுக்க முடியும் என்கிறார்.

அவர் சொன்னது சரி என்பதை போல ஓ.பி.எஸ்.சுக்கு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

-தாமோதரன் பிரகாஷ்