அப்ப... சன்னிலியோன் இப்ப மல்லிகா ஷெராவத்! பலே கூட்டணியில் பாம்பாட்டம்!

cinema

வெற்றியோ, தோல்வியோ தங்களது பேனரில் வரிசையாக படங்கள் எடுத்து தியேட்டர்களில் ரிலீஸ்பண்ணி, சினிமா சீன்கள் போடும் நிரந்தர மான, தரமான தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் உண்டு. ஆனால் படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சினிமா வுக்கே சீன்கள் காட்டும் ‘பலே’ தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ஹீரோக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களும் நன்கு முகம் தெரிந்த ஹீரோக்கள், ஹீரோயின்களை வைத்துத்தான் படம் எடுப்பார்கள், ரிலீஸ்பண்ணுவார்கள். ஆனால் அவர்களின் கேஷ்பாக்ஸ் ஃபுல்லாகும் ரகசியங்கள்தான் பரமரகசியமாக இருக்கும்.

cinema

அப்படிப்பட்ட ஒரு ‘பலே’ கூட்டணிதான் கடந்த வாரம் ‘"பாம்பாட்டம்'’என்ற படத்திற்கு பூஜை போட்டுள் ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகப் போகும் இந்தப் படத்தில் டபுள் ரோலில் ஜீவன் ஹீரோவாகவும் ‘"டகால்டி'’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடி போட்ட ரித்திகா சென் மெயின் ஹீரோயின

வெற்றியோ, தோல்வியோ தங்களது பேனரில் வரிசையாக படங்கள் எடுத்து தியேட்டர்களில் ரிலீஸ்பண்ணி, சினிமா சீன்கள் போடும் நிரந்தர மான, தரமான தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் உண்டு. ஆனால் படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சினிமா வுக்கே சீன்கள் காட்டும் ‘பலே’ தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ஹீரோக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களும் நன்கு முகம் தெரிந்த ஹீரோக்கள், ஹீரோயின்களை வைத்துத்தான் படம் எடுப்பார்கள், ரிலீஸ்பண்ணுவார்கள். ஆனால் அவர்களின் கேஷ்பாக்ஸ் ஃபுல்லாகும் ரகசியங்கள்தான் பரமரகசியமாக இருக்கும்.

cinema

அப்படிப்பட்ட ஒரு ‘பலே’ கூட்டணிதான் கடந்த வாரம் ‘"பாம்பாட்டம்'’என்ற படத்திற்கு பூஜை போட்டுள் ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகப் போகும் இந்தப் படத்தில் டபுள் ரோலில் ஜீவன் ஹீரோவாகவும் ‘"டகால்டி'’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடி போட்ட ரித்திகா சென் மெயின் ஹீரோயினாகவும் ஃபோட்டோஷூட் ஸ்பெஷலிஸ்ட் யாஷிகா ஆனந்த் செகண்ட் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளனர்.

"வைத்தியநாதன் பிலிம் கார்டன்' என்ற பேனரில் வி.பழனிவேல் தயாரிக்கும் இப்படத்தின் டைரக்டர் வி.சி.வடிவுடையான். ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய் இவர்களெல்லாம் இப்படத்தில் நடிக்கி றார்கள் என்பது சாதாரண செய்தி. ஆனால் "படத்தில் வரும் முக்கியமான இளவரசி கேரக்டரில் இந்தி சினிமாவின் கிளாமர் பாம் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்' என வி.சி.வடிவுடையான் சொல்லியிருப்பதுதான் ஹாட் சங்கதி. சரி, இப்ப கூட்டணியின் சீன்கள் மேட்டருக்கு வருவோம்.

"வைத்தியநாதன் பிலிம் கார்டன்' என்ற பேனரை இப்போது ஆரம்பித்திருக்கும் வி.பழனிவேல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தன் என்பவருடன் சேர்ந்து "ஏ.பி. பிலிம் கார்டன்' என்ற பேனரில் ‘"ஓரம்போ', ‘"வாத்தியார்',’ ‘"6.2'’ போன்ற படங்களை எடுத்தார். ஆர்யா, அர்ஜுன், சத்யராஜ் என பெரிய ஹீரோக்கள்தான் அந்தந்தப் படங்களில் நடித்தார்கள். அந்த ஆனந்தனும் இந்த பழனிவேலும் அப்போது சென்னை மற்றும் சில முக்கிய நகரங்களில் ஃப்ளாட்டுகள் கட்டி விற்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துவதாகச் சொல்லித்தான் தேசியமயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகளில் கடன் வாங்கினார்கள். ஆனால் பேருக்கு சில வீடுகளை மட்டும் கட்டி, யாருக்கும் விற்காமல் சினிமாவில் முதலீடு செய்தார்கள்.

ஆனந்தனின் சினிமா ஆட்டத்தால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்காமல் டிமிக்கி கொடுத் தது ஏ.பி. பிலிம் கார்டன். வங்கியின் எச்சரிக்கை நோட்டீசுக்குப் பிறகுதான், சென்னை சாலிக்கிராமத் தில் இருந்த வீட்டை விற்று ஓரளவு கடனை அடைத்து தப்பித்தார்கள். அந்த ஆனந்தன் என்ன ஆனார் எனத் தெரியாத நிலையில், இப்போது வைத்தியநாதன் மட்டும் மீண்டும் சினிமா எடுக்க ஆரம்பித்துள்ளார்.

அடுத்து டைரக்டர் வி.சி.வடிவுடையானின் சினிமா ஆட்டம் பற்றிய சேதிகள். கரண் -அஞ்சலி ஜோடி போட்ட "தம்பி வெட்டோத்தி சுந்தரம்'தான் வடிவுடையா னின் முதல் படம். ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி காம்பினேஷ னில் ‘"சௌகார்பேட்டை'’, பரத் -நமீதா -சிருஷ்டி டாங்கே -இனியா என ஜம்போ காம்பி னேஷனில் ‘"பொட்டு'’ என்ற படத்தினை எடுத்தார் வடிவுடையான்.

பிரபு சாலமனுடன் சேர்ந்து ‘"மைனா'’ ஹிட் படத்தை தயாரித்த ஜான்மேக்ஸ் என்பரை தனியாக கூட்டி வந்து வடிவுடையான் எடுத்த ‘‘"பொட்டு'’ படம் அட்டர்ஃப்ளாப் ஆனது. அடுத்து பொன் ஸ்டீபன் என்ற மலேசியா பார்ட்டி ஒருவரை அமுக்கி, போர்னோ பிலிம் ஸ்பெஷலிஸ்டான சன்னிலியோனுக்கு ராணி வேஷம் போட்டு, 100 கோடி பட்ஜெட்டில் ‘"வீரமாதேவி'’ என்ற படத்தை ஆரம் பித்தார் வடிவுடையான்.

இந்தப் படத் திற்காக சன்னி லியோன் குதிரையேற்றம், யானை யேற்றம், வாள் சண்டைப் பயிற்சி எடுப்பதாக நியூஸ் கிளம்பியது. ஐந்து மொழி களில் ரிலீஸ் செய்யப்போவ தாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந் தப் படத்தின் கதி என்னவா னது என்பது வடிவுடையா னுக்கு மட்டும் தான் தெரியும். இதற்கிடையே ‘பொட்டு’ ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு படத்திற்கு பூஜை போட்டதுடன் ஆஃப்பாகிவிட்ட வடிவுடை யான் இப்போது மல்லிகா ஷெராவத்தை, கமலின் ‘"தசாவதாரம்'’ படத்திற்குப் பின் தமிழுக்கு அழைத்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.

அடுத்து ஹீரோ ஜீவனின் சினிமா ஆட்டம்.

"காக்க காக்க'’ படம் மூலம் சூப்பர் வில்லனாக அறிமுகமாகி, ‘நான் அவன் இல்லை', ‘"திருட்டுப் பயலே'’ மூலமாக ஆண்ட்டி ஹீரோ வாக ஹிட் ஆனார். ஆனால் அதன்பின் சினிமாவில் சொதப்புவது எப்படின்னு புத்தகம் எழுதும் அளவுக்கு ஆளானார். கே.பாலசந்தர் உயிருடன் இருந்தபோது கவிதாலயா பேனரில் ‘"கிருஷ்ண லீலை'’ என்ற டைட்டிலில் ஜீவன் ஹீரோவாக நடிக்கும் படம் ஆரம்பமானது. அதுக்குப் பிறகு என்னவானது எனத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட பலே கூட்டணியில்தான் இப்போது ‘"பாம்பாட்டம்'’ ஆரம்பமாகியுள்ளது.

-ஈ.பா.பரமேஷ்வரன்

nkn191220
இதையும் படியுங்கள்
Subscribe