Advertisment

திருட்டு, ஏமாற்று, உடல் வியபாரம்! -சிறார்களை நாசமாக்கும் வடமாநில கும்பல்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி...)

nn

சிறார்களுக்கு க்ரைம் வகுப்பெடுத்து அவர்களை தமிழகத் திலும் களமிறக்கி வருகிறார்கள் டேஞ்சரஸ் புரோக்கர்கள். சிறார் களை எப்படி கிரிமினல் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்துகிறார்கள் என்று பார்த்தால், உடலின் ஒட்டுமொத்த ரத்தமும் நம் கண்களுக்கு வந்துவிடும்.

Advertisment

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகளவு நடக்கும் மாநிலங் கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரத் தின் படி, முதலிடத்தில் இருப்பது மத்தியபிரதேசம். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றா வது இடத்தில் உத்திரபிரதேசமும் இருக்கின்றன.

இந்தியாவில் காணாமல்போன குழந்தை களில் 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுமிகள் என்று பயமுறுத்துகிறது புள்ளிவிபரம். மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காணாமல் போன ஆண் குழந்தைகளை விட சிறுமிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

nn

Advertisment

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளான நீமூச் -மன்சூர் சாலை மற்றும் அதன் தலைநகர் போபாலில் இருந்து 370 கி.மீ தொலைவில் உள

சிறார்களுக்கு க்ரைம் வகுப்பெடுத்து அவர்களை தமிழகத் திலும் களமிறக்கி வருகிறார்கள் டேஞ்சரஸ் புரோக்கர்கள். சிறார் களை எப்படி கிரிமினல் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்துகிறார்கள் என்று பார்த்தால், உடலின் ஒட்டுமொத்த ரத்தமும் நம் கண்களுக்கு வந்துவிடும்.

Advertisment

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகளவு நடக்கும் மாநிலங் கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரத் தின் படி, முதலிடத்தில் இருப்பது மத்தியபிரதேசம். இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றா வது இடத்தில் உத்திரபிரதேசமும் இருக்கின்றன.

இந்தியாவில் காணாமல்போன குழந்தை களில் 83 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுமிகள் என்று பயமுறுத்துகிறது புள்ளிவிபரம். மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காணாமல் போன ஆண் குழந்தைகளை விட சிறுமிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

nn

Advertisment

மத்தியப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளான நீமூச் -மன்சூர் சாலை மற்றும் அதன் தலைநகர் போபாலில் இருந்து 370 கி.மீ தொலைவில் உள்ள நவளி நெடுஞ்சாலை ஆகியற்றில் பயணிக்கும் லாரி, டிரக் ஓட்டுநர்களில் பலரும் வண்டியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கே கட்டில் போட்டு உட்கார்ந்திருக்கும் சிறுமிகளிடமும், பெண்களிடமும் பேரம் பேசுவதை பகிரங்கமாகவே பார்க்க முடியும். மேலும் பட்டப்பகலிலும் அங்கே வெளிப்படையாகவே பாலியல் தொழில் நடக்கும். ரேட் மிகவும் குறைவு என்பதால் ஆண்கள் அங்கே மொய்ப்பார்கள். பச்சாடா என்கிற பழங்குடியின சமூகம்தான் இந்த தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப் படுகிறார்களாம்.

இந்த சமூக மக்கள், மேற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகம் வசிக்கின்றனர்.

ஒருகாலத்தில் போர்ச்சமூகமாக இருந்த மக்கள் வறுமையால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பாலியல் தொழி லில் ஈடுபடத் தொடங்கினார்களாம். சுதந்திரத்துக்குப் பின்பும் இவர் களை அதிலிருந்து மீட்க எந்த அரசும் முயற்சிக்கவில்லையாம். ஆர்.டி.ஐ. ஆர்வலரும் சமூக செயல் பாட்டாளருமான வழக்கறிஞர் அமித்ஷர்மா, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு இது தொடர்பாக ஒரு மனு அனுப்பினார்.

அதில், ’பச்சாடா இனமக்கள் மாநிலம் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெண் குழந்தைகளை பணம்கொடுத்து வாங்கி வந்து, வளர்த்து, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்’ என்று பகீர் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். காவல்துறை செய்த சோதனையில் ஒரு பாலியல் தொழிலாளி, பிறந்து சிலமாதங்களே ஆன ஒரு பெண் குழந்தையை வாங்கிவந்தது தெரியவர, அவர் கைது செய்யப்பட்டாராம். இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பெண் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுவது தெரியவந்திருக்கிறது.

இதேபோல் டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலிஸ் டீம் டெல்லி, அரியானா மாநிலங்களில் இயங்கும் பேண்ட்-பாஜா-பராத் கும்பலை கண்டுபிடித்தது. இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருடுவது எப்படி என கற்றுத் தந்து பழக்கப் படுத்துகிறார்களாம். பின்னர் பயிற்சி பெற்ற சிறு வர்களை 1 வருடம், 2 வருடத்துக்கு குத்தகைக்கு அனுப்புகின்றனராம். சிறுவன் அல்லது சிறுமிக்கு ஓராண்டு குத்தகைத் தொகை 5 லட்சம்வரை கொடுக்கவேண்டுமாம். திறமையான சிறுவர்க்கு 10 லட்சம் வரை தருவார்களாம். ஒப்பந்த காலம் முடிந்ததும் குழந்தைகளை திரும்ப ஒப்படைத்து விடவேண்டும். மீண்டும் அதே குழந்தைகள் வேண்டுமென்றால் மீண்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தக் குழந்தைகளுக்கு பணக்காரர்கள் போல் உடை அணிவித்து பெரும் தொழிலதிபர் கள், பணக்காரர்கள் வீட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு அனுப்பி திருடிக்கொண்டு வரச்செய்வதே பேண்ட்-பாஜா-பராத் கும்பலின் வேலை என்கிறார்கள்.

சிக்கிய குழந்தைகளின் பெற்றோர் களைச் தேடிச்சென்ற டெல்லி க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகள் மத்தியப்பிரதேசத் துக்கு நேரில் சென்று விசாரித்தபோது, “"இதுவும் ஒரு தொழில்தானே. நாங்கள் ஏழைகளிடம் திருடுவதில்லை, பணக்காரர்களிடம்தான் திருடு கிறோம். இதில் என்ன தவறு?''’ என்று வாதிட்டார்களாம்.

சிறார்களை வைத்து திருடிய கும்பல்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ் டீம். தமிழ்நாட் டில் நடைபெறும் எந்த திருவிழாவாக இருக்கட்டும், அங்கு சின்னச் சின்ன பொருட்கள் விற்கும் சிறு வர்கள், ஆட்கள் என்று எடுத்துக்கொண்டால்... அவர்களில் 80 சதவீதம் பேர் நம் மாநிலத்தவர்கள் கிடையாது. எல்லாமே வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதேபோல் திருட்டுக்களில் ஈடு படுத்தப்படும் சிறார்களும் பெரும்பாலும் அங்கிருந்து வந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 18 வயதுக்குக் கீழானவர்கள் என்பதுதான் மிகுந்த கவலைக்குரிய செய்தி. இவர் கள் பெற்றோர்கள் எனச் சொல்பவர்களை விசா ரித்தால், அவர்கள் உண்மையான பெற்றோர்களாக இருப்பதில்லை. இவர்கள் குறிப்பிட்ட நாள்வரை யில் இங்கு இருக்கிறார்கள். காரியம் முடிந்ததும் இங்கிருந்து சிறார்களையும் அழைத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இதுதான் இப்போது திருவண்ணாமலையிலும் நடக்கிறது.

குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களைத் திருடவும், ஏமாற்றவும், உடல் வியா பாரத்தில் ஈடுபடவும் வைக்கிற வக்கிரம் பிடித்த கிரிமினல்களை அரசும் காவல்துறையும் உடனடி யாக ஒடுக்கவேண்டும். அவர்களிடம் சிக்கியுள்ள குழந்தைகளை உடனடியாக மீட்டு, அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையேல், எதிர்காலம் குற்ற சாம்ராஜ்யமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

nkn081123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe