Advertisment

கொடூரன் விஜய் கதறும் மனைவி!

vijay

"என் கணவர் ஜோசப் விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதால் உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னை புறக்கணித்துள்ளார். அந்த நடிகையோடு பயணிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்று வதைப் பார்த்து, குழந்தைகள் அவமானத்தை சந்தித்தனர். ஆகையால் விவாகரத்து கோரு கின்றேன்'' என செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா.

Advertisment

செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சிறப்பு திருமணச் சட்டம், 1954, பிரிவு 27(1)(ஹ), (க்ஷ), (க்) மற்றும் பிரிவுகள் 36 & 37-ன்படி, விஜய் மனைவி சங்கீதாவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலோ, "லண்டனில் குடியுரிமை பெற்ற சங்கீதாவிற்கு 25.08.1999 அன்று எழும்பூர்  ராஜா முத்தையா மன்றத்தில் விஜய்யுடன் திருமணமானது. ஆரம்பத்தில் சாலிகிராமத்திலும், பின்னர் கஸ்தூரிபா நகரில் அடையாறிலும், இறுதியாக எண்.36, காசுவாரினா டிரைவ், ஸ்ரீ கபாலீஸ்வர் நகர்,  நீலாங்கரை, சென்னை-600 115 என்ற முகவரியிலும் வசித்துவந்தனர். திருமணத்தின் பலனாக விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். தொடக்க ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் விஜய், சங்கீதாவுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு செல்வதும், குறிப்பாக லண்டனிலுள்ள சங்கீதாவின் பெற்றோர்களை பார்த்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்தது. அதுபோக, திரைப்படம் தொடர்பான விழாக்கள் மற்றும் ஏனைய சமூக விழாக்களுக்கும் சங்கீதாவை அழைத்துச் சென்றுள்ளார் விஜய்.

Advertisment

சுமுகமாக குடும்பம் இயங்கிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நடிகையுடனான "திருமணத்தை மீறிய உறவு' இவர்களின் குடும்ப ஒற்றுமையை சிதைத்தது. 2021ஆம் ஆண்டு, அந்த நடிகை யோடான உறவு உறுதியாக நிரூபிக்கப்பட்டது. இது சங்கீதாவிற்கு மிகுந்த வலியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. இது, திருமண பந்த நம்பிக்கையை மீறுவதற்கும்,

"என் கணவர் ஜோசப் விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதால் உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னை புறக்கணித்துள்ளார். அந்த நடிகையோடு பயணிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்று வதைப் பார்த்து, குழந்தைகள் அவமானத்தை சந்தித்தனர். ஆகையால் விவாகரத்து கோரு கின்றேன்'' என செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா.

Advertisment

செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சிறப்பு திருமணச் சட்டம், 1954, பிரிவு 27(1)(ஹ), (க்ஷ), (க்) மற்றும் பிரிவுகள் 36 & 37-ன்படி, விஜய் மனைவி சங்கீதாவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலோ, "லண்டனில் குடியுரிமை பெற்ற சங்கீதாவிற்கு 25.08.1999 அன்று எழும்பூர்  ராஜா முத்தையா மன்றத்தில் விஜய்யுடன் திருமணமானது. ஆரம்பத்தில் சாலிகிராமத்திலும், பின்னர் கஸ்தூரிபா நகரில் அடையாறிலும், இறுதியாக எண்.36, காசுவாரினா டிரைவ், ஸ்ரீ கபாலீஸ்வர் நகர்,  நீலாங்கரை, சென்னை-600 115 என்ற முகவரியிலும் வசித்துவந்தனர். திருமணத்தின் பலனாக விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். தொடக்க ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் விஜய், சங்கீதாவுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு செல்வதும், குறிப்பாக லண்டனிலுள்ள சங்கீதாவின் பெற்றோர்களை பார்த்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்தது. அதுபோக, திரைப்படம் தொடர்பான விழாக்கள் மற்றும் ஏனைய சமூக விழாக்களுக்கும் சங்கீதாவை அழைத்துச் சென்றுள்ளார் விஜய்.

Advertisment

சுமுகமாக குடும்பம் இயங்கிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நடிகையுடனான "திருமணத்தை மீறிய உறவு' இவர்களின் குடும்ப ஒற்றுமையை சிதைத்தது. 2021ஆம் ஆண்டு, அந்த நடிகை யோடான உறவு உறுதியாக நிரூபிக்கப்பட்டது. இது சங்கீதாவிற்கு மிகுந்த வலியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. இது, திருமண பந்த நம்பிக்கையை மீறுவதற்கும், துரோகத்துக்கும் சமமானது. ஆரம்பத்தில் அந்த நடிகையோடான உறவை முறித்துக்கொள்வதாக உறுதியளித்த விஜய், அதன்பின் எவ்வித வருத்தமுமின்றி அந்த நடிகையோடான உறவைத் தொடர்ந்தார். செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடையில், சொந்தபந்தங்கள் மற்றும் மனுதாரர்கள் மூலம் பிரச்சினையை இணக்கமாகத் தீர்க்க முயற்சி செய்யப்பட்டது. இருப்பினும், எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. சங்கீதாவை உணர்வுரீதியாகவும், மனரீதியாகவும், உடல்ரீதி யாகவும் விஜய் புறக்கணித்திருக்கிறார். 2021 முதல், சங்கீதா-விஜய் ஒரே  வீட்டிற்குள் வசித்தபோதும், விஜய் சங்கீதாவை ஒதுக்கிவைத்ததால் இருவரும்  தனித்தனியாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின், அந்த நடிகையுடன் வெளிநாடு செல்வது, ஒன்றாக விழாக்களுக்கு செல்வது, சென்று புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் சங்கீதாவையும், சங்கீதாவின் குழந்தைகளையும் அவமானத்திற்கு உள்ளாக்கினர். 

ஆகஸ்ட் 2024, மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில், ஏதாவது நல்ல முடிவு கிடைக்குமென்று வழக்கறிஞர்கள் மூலமாகக் கடிதங்கள் விஜய்க்கு அனுப்பி வைக்கப்பட, தீர்வு காணப்படுவதற்கு பதிலாக, சங்கீதாவின் வாழ்க்கைக்கான அத்தியாவசி யத் தேவைகளையும் அவரது கணவர் விஜய் நிறுத்தியிருக்கிறார். அதுபோக, வீட்டுக்கு இவ்வ ளவு ரூபாய் மட்டுமே கொடுக்க முடியுமென்று கட்டுப்பாடுகளையும் விதித்தார். சங்கீதாவை இது மேலும் அவமானப்படுத்தியுள்ளது. தற்போது, திருமண பந்தம்  இல்லாமல் போய்விட்டது. அது வெறுமனே காகிதத்தில் மட்டுமே உள்ளது. 

vijay1

திருமண உறவு மீட்டெடுக்க முடியாமல் முறிந்துவிட்டது, அதனை மீண்டும் உயிர்ப்பிக்க இயலாது. மன வேதனை, அவமானம், துன்பகரமாக மாறிய உறவில் சங்கீதாவால் தொடர்ந்து வாழ இயலாது. நடிகையோடு விஜய்யின் திருமணம் தாண்டிய தொடர்பால், சமூக ஊடக அவமானத்திற்கு ஆளான போதிலும், விஜய்யின் நற்பெயர் மற்றும் புகழைக் கருத்தில்கொண்டு, மனுதாரர், இந்த விவகாரத்தை இணக்கமாகத் தீர்க்க, உண்மையான மற்றும் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடர்பாகக் கடைசி முயற்சி 09.11.2025 அன்று நடந்தது. இருப்பினும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் இணக்கமான தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, திரு மணத்தை ரத்து செய்யக்கோரி இந்த நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர சங்கீதாவிற்கு வேறு வழியில்லை. அதன்காரணமாகவே இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது' என்கிறது.

கூடுதலாக, விவாகரத்து  மனுவை இறுதி செய்யும்வரை அல்லது விஜய்யின்  நிலைக்கு ஏற்ப சமமான மாற்று தங்குமிடம், விஜய்யால் சங்கீதா விற்கு  வழங்கப்படும்வரை, எண்.36, காசுவாரினா டிரைவ், ஸ்ரீகபாலீஸ்வர் நகர், நீலாங்கரை, சென்னை - 600 115 என்ற முகவரியில் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் உரிமையை சங்கீதாவிற்கு  வழங்கவும், விஜய்யின்  வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப, நியாயமான மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடவும், நடவடிக்கைகளின் செலவுகளை பிரதிவாதி ஏற்க உத்தரவிடவும் வேண்டுகின்றது அந்த மனு. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வருகிற ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டதால், அன் றைய தினம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய்யின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவரது சைக்கோ மனநிலையை காட்டுவதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மது போதைப் பழக்கத்தால் மனைவியை தொடர்ச்சியாக டார்ச்சர் செய்துவந்திருக்கிறார். இரவானால் தன்னிலை மறந்த நிலையில் விஜய் இருப்பார் என்பதால் தான் அவரது பொதுக்கூட்டங்களைக்கூட பகலிலேயே நடத்துவதாகக் கூறப்படுகிறது. நாமக்கல், கரூர் கூட்டத்துக்கு 7 மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து கிளம்பியதற்கும் அதுவே காரணமென்று கூறப்படுகிறது. அதேபோல், கேரவனிலும் அந்த நடிகை இருந்ததாகவும், அதனால்தான் கேரவனின் சி.சி.டி.வி. காட்சிகளை கொடுக்க அவர் தரப்பில் தயங்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக தன் மனைவி, வயதுவந்த பிள்ளைகளைப் பற்றி கொஞ்சங்கூட நினைத்துப்பார்க்காமல், பொறுப்பற்ற தகப்பனாக இன்னொரு நடிகையோடு சுற்றுவதே தனது வழக்கமாக வாழ்ந்திருக்கிறார். ஐயா நல்லகண்ணு வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கூட மது போதையில்தான் விஜய் இருந்திருக்கிறார். அவர் அங்கு வந்ததுமே மது போதை குமட்டிக்கொண்டு வந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இப்படி எந்நேரமும் பெண் சகவாசம், மதுபோதையென இருந்ததால் சைக்கோ மனநிலையில்தான் குடும்பம் நடத்தியிருக்கிறார். கரூர் சம்பவத்தின்போது அத்தனை உயிர்கள் கண்முன் இறந்துவிழும் நிலையிலும் கண்டு கொள்ளாமல் சென்னைக்கு செல்லும் மனநிலை சைக்கோவுக்குத்தானே இருக்கும்?

சைக்கோ என்பதைக்காட்டிலும் ஈழ்ன்ங்ப்-ம்ண்ய்க்ங்க்ல் விஜய் இருக்கின்றார் என்கின்றது சங்கீதாவின் விவாகரத்து மனு. அது உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம் என்கின்றனர் விபரமறிந்தவரகள். குறிப்பாக, "லியோ' படத்தில் தங்கையை நரபலி கொடுத்தார் தந்தை என அந்த கதாபாத்திரத்தை கட்டமைத்ததை ஒப்புக்கொண்டது ஏன்? அதுபோக, அந்த படத்தில் தந்தையை கொலை செய்வது எப்படி? இந்தப் படம்தான் இப்படி என்றால், ஏஞஆப திரைப்படத்தில் மகனை, தந்தை கொல்வதாக கட்டமைத்தது எவ்வாறு? இது ஒருவகையான ஈழ்ன்ங்ப்-ம்ண்ய்க்ங்க் என்கின்றனர்.

உண்மையாக இருக்கலாமோ? என்றால், நடிகையுடன் திருமணம் தாண்டிய தொடர்பில் இருக்கின்றார் விஜய். ஆகையால் விவாகரத்து வேண்டுமென்கிறார் சங்கீதா. ஆனால் அணில் குஞ்சுகளோ, "அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கை. தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்றிணைந்து இந்த வேலையை பார்க்கின்றனர்'' என்கின்றனர். "இன்னொரு நடிகைக்காக கட்டிய மனைவி, குழந்தைகளை ஒதுக்கியவர் எப்படி மக்களை காப்பார்? அந்த நடிகைக் காக மக்களை ஒதுக்கி வைக்க மாட்டாரா? திருமண பந்தம் என்றால் எதுவென்று அணில் குஞ்சுகளுக்கு தெரியாமலா இருக்கும்?'' என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுகின்றன.

vijayson

இது இப்படி யிருக்க, விஜய்-சங்கீதா விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக டிவீட் செய்தால் ஒரு டிவீட்டிற்கு  ரூ.25 கொடுப்போம் என பி.ஆர். நிர்வாகிகள் பேசிய ஆடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அந்த ஆடியோவில், "ஹலோ கவி, ஸ்ரீராம் பேசுகிறேன்.. தெரியுதுல எமர்ஜென்சி விவகாரம், செய்தி பார்த்தீங்களா?! விவாகரத்து விவகாரம்தானே'' என எதிர்முனை பதிலளித்த வேளையில், "கொஞ்சம் பிரச்சனை நம்முடைய கையை மீறிப்போவது போல் உள்ளது. டூல் கிட் ஒன்று இருக்கு. அதில் என்ன இருக்கிறது என்றால், கரூர் விவகாரத்தை வைத்து முடக்கப் பார்த்தீங்க, ஜனநாயகனை முடக்கிட்டீங்க, பா.ஜ.க.வும், தி.மு.க.வும் கூட்டு சேர்ந்து அண்ணனை 2 நாட்கள் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தீர்கள். கூட்டணிக்காக, எஸ்.ஓ.பி. போட்டு மக்களை பார்க்கவிடாமல் அண்ணனை முடக்கினீர்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார்கள் என்று தி.மு.க.விற்கு எதிராக ஹேஸ்டேக் சென்ட் பண்ணப்போகிறோம். கரூர் விவகாரத்தில் என்ன வேலை செய்தோமோ அதைத்தான் செய்யணும். ரொம்ப குடும்பத்தையெல்லாம் அட்டாக் பண்ண வேண்டாம், சங்கீதா மேடத்தையும் ரொம்ப அட்டாக் பண்ணவேண்டாம். இதற்கு பின்னாடி தி.மு.க.தான் இருக்கிறது என்றும், மக்களிடம் இது எடுபடாது, அண்ணன் ஜெயிப்பதற்குத்தான் வழிவகை பண்ணியிருக்கிறீர்கள் என்று பதிவிடுங்கள்'' என்று சொல்-, விஜய்க்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பொய்யும் புரட்டுமாகப் பேசி, சரிந்த இமேஜை பில்டப் செய்யப் பார்க்கிறார்கள்.

இந்நிலையில் விஜய்யை அவரது மகன் சஞ்சய், தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் அன்-பாலோ செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய் குடும்பமே அந்த நடிகையால் துண்டு துண்டாக சிதறி, மனைவி சங்கீதா லண்டனிலும், மகன் சஞ்சய், சென்னை அசோக் நகரில் வீடு வாடகைக்கு பிடித்தும் தங்கியிருக்க... மகளோ, தி.நகர் அருகில் ஓர் இல்லத்தில் பேயிங் கெஸ்ட்டாகவும் தங்கியுள்ளனர்.

வருகின்ற நாட்களில் சங்கீதா செய்தியாளர் களைச் சந்திக்கும்பட்சத்தில், இதுவரை குறிப்பிடாத நடிகையின் பெயரும், விஜய்யின் பவுடர் கதைகளும் வெளிவந்துவிடும் என்பது அணில்குஞ்சுகளுக்குத் தெரியாமலாயிருக்கும்?

nkn040326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe