கடந்த வாரத்தில், "என்னிடமிருந்து ரூ.10 லட்சம், ஒரு பி.எம்.டபிள்யூ கார், ஐந்து சவரன் தங்கம் ஆகியவற்றை சீரியல் நடிகையும், அவரது கணவர் உள்ளிட்டோரும் ஏமாற்றி அபகரித்துச் சென்றுவிட்டனர். திரும்பக் கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கின்றனர். ஆகவே அவர்களிடமிருந்து பணம், நகை, காரை மீட்டுத்தரவேண்டும் என, கரூர் டவுன் காவல் நிலையத்தில் ஆஜராகி புகார்கொடுத்தார் கரூர், கோவை சாலை தெற்குப் பகுதியிலுள்ள ஹோட்டல் அதிபரொருவர்.
யார் அந்த சீரியல் நடிகை.? என்ன மோசடி..?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.ஹெச்.பி. காலனி மேற்கைச் சேர்ந்தவர் தினேஷ் ராஜ். இவர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி, "கரூர் மாநகரில் கோவை சாலை தெற்குப் பகுதியில் என்.டி.எஸ். பேலஸ் என்னும் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனக்கு தொழில்ரீதியாக பணத் தேவை இருந்த காரணத்தால் நன்கு தெரிந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியனிடம் "நான் வைத்துள்ள ஹோட்டலை குத்தகை விடுவதற்கு யாரையாவது ஏற்பாடு செய்ய முடியுமா?' என கடந்த பிப்ரவரி 2025-ல் கேட்டிருந்தேன்.
அவர் என்னிடம், அவருக்கு நன்கு தெரிந்த சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசிக்கும் மகேந்திரவர்மனின் மகன் பாலாஜி என்கிற பாலமுருகனை அறிமுகம் செய்துவைத்தார். பாலமுருகனோ, கரூரில் வடிவேலு என ஒரு நபரை அறிமுகம் செய்துவைத்தார். வடிவேலு வின் நண்பர் ஆறுமுகம் எனது ஹோட்டலை குத்தகைக்கு எடுக்க முன்வந்து அதற்கு முன் பணமாக ரூபாய் பத்து லட்சத்தை கொடுத்து ஹோட்டலை நடத்துவதாகத் தெரிவித்தார். மேலும் வடிவேலு முன்னிலையில் ஆறுமுகம் என்பவர் எங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, மேற்படி முன்பணத் தொகையை ஆறுமுகம், பாலாஜி என்கின்ற பாலமுருகனிடம் கடந்த 01.05.2025 மதியம் 3.00 மணியளவில் கொடுத் தார். அதாவது, அவர் மூலம் வந்ததால் அவரிடம் பணம் கொடுக்கப்பட்டது. இதேவேளையில் என்னுடைய பொருளாதார பிரச்சனையும் அவருக்குத் தெரியுமென்பதால் அவர் எனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இந்நிலையில் ரூ.10 லட்சம் பணம், பி.எம்.டபிள்யூ கார் (இஙர ல3 பச 34 ழ 0550), ஐந்து சவரன் தங்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றவர் கொடுக்கவேயில்லை. அவரைத் தேடி கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்'' என புகாரளித்தார்.
அதனடிப்படையில், சென்னை வளசர வாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற பால முருகன், அவரது மனைவி சீரியல் நடிகை ராணி, பாலாஜியின் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது பி.என்.எஸ். 296 (க்ஷ), 115(2), 316(5), 318(4), 351(3) உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அது எப்படி? ரூ.10 லட்சம் பணம், ஒரு பி.எம்.டபிள்யூ கார், ஐந்து சவரன் தங்கத்தை யாராவது வெறுமனே கையில் கொடுத்து அனுப்புவார்களா? இதில் எப்படி சீரியல் நடிகை ராணி உள்ளே வந்திருக்கிறார்?
"சீரியலில் வில்லியாக நடிக்கும் ராணிக்கு மூன்றாவது கணவராக இருப்பவர் வளசரவாக் கம் பாலமுருகன். இவர்களது தொழிலே பணத் தேவைகள் யாருக்கு இருக்கின்றதோ? புரோக்கர்கள் மூலம் அவர்களை அணுகி அவர் களின் பணத்தேவையை தாங்கள் தீர்ப்பதாகக் கூறி முடிந்தவரை ஆட்டையப் போட்டுவிட்டு நடையைக் கட்டுவதே. ஆனால் கரூர் தினேஷ் ராஜ் விஷயத்தில் வகையாக சிக்கியுள்ளார்கள் இவர்கள்'' என்கின்றார் தினேஷ்ராஜுவுக்கு நடந்த உண்மைகளைக் கூறிய பாலமுருகனின் முன்னாள் டிரைவர்.
தொடக்கத்தில் குத்தகைக்கு ஹோட்டலை எடுத்துக்கொள்கிறேன் என்றுதான் பாலமுருகன் வந்திருக்கிறார். அதன்பின் தினேஷ்ராஜுவிற்கு இருந்த பணக்கஷ்டத்தைப் பார்த்து தூண்டிலை வீசியிருக்கின்றார். "எங்களுக்கு பணத்தை வைத் துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமலிருக்கும் பல கோடீஸ்வரர்களைத் தெரியும். குறிப்பாக என்னுடைய மனைவிக்கு வேண்டப் பட்ட செட்டியார் இருக்கிறார். என்னுடைய மனைவி சொல்வதை அப்படியே கேட்பார். மிகப்பெரிய கோடீஸ்வரர். வட்டிக்கு விடுவது அவரது தொழிலல்ல. உன்னுடைய பணத் தேவையை அவர்தான் பூர்த்தி செய்யமுடியும். 50 பைசாதான் வட்டி வரும். டாக்கு மெண்டிற்கு பணம் கட்டணும். அதற்கப்புறம் வட்டியை மட்டும் கட்டினால் போதும்'' என தினேஷ்ராஜிற்கும், பால முருகனுக்கும் நடந்த உரையாடல்கள் 40-க்கும் மேல் உள் ளது. அத்துடன், சி.சி.டி.வி. காட்சிகள், பணப் பரிவர்த் தனை, சீரியல் நடிகை கரூரில் தங்கி யது உள்ளிட்ட அடிப்படை ஆதா ரங்களும் தினேஷ் ராஜ் வசமுள்ளன.
"சீரியல் நடிகை ராணியே கரூருக்கும், திருச்செங்கோடுக்கும் நேரடியாக வந்து தினேஷ்ராஜின் சொத்துக்களை ஆய்வு செய்வதுபோல் நடித்திருக்கிறார். அதன்பின்னரே இவர்களே ஆறுமுகத்தை வைத்து ஹோட்டலை குத்தகைக்கு எடுப்பதுபோல் எடுத்து, அந்த பணத்தையும், கூடுதலாக 5 பவுன் நகையையும், பி.எம்.டபிள்யு காரையும் எடுத்துச் சென்றுள்ள னர். கூறியதுபோல் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்காததால் நடிகை, கணவர் அவரது நண்பர் உள்ளிட்டோர் மீது புகார் கொடுக்கப் பட்டிருக்கின்றது'' என்கின்றது வழக்கினை விசாரிக்கும் போலீஸ்.
சீரியலில் வில்லி, சீட்டிங்கிலும் வில்லி என்பதனை நிரூபித்துள்ளார் ராணி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/actress-2026-01-02-13-15-06.jpg)