கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக்கோரி திருத்தொண்டர் அறக்கட்டளை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்த விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை, அவற்றில் உழுது விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு 1948ஆம் ஆண்டு தமிழ்நாடு எஸ்டேட் அபாலிசன் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு மேஜர் மற்றும் மைனர் இனாம் அபாலிசன் சட்டங்கள் போன்ற சட்டங்களின் கீழ் வெண்ணெய்மலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தொண்டர் அறக்கட்டளை தொடர்ந் துள்ள பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, கரூர் மாவட்டத்திலுள்ள 64 கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக் களை மீட்க உத்தரவிட்ட நிலையில், வெண்ணெய்மலை கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை தீவிரம் காட்டிவருகிறது. இதை எதிர்த்து கடந்த 17ஆம் தேதி வெண்ணெய்மலை கோவில் முன்பு மக்கள் திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி யினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி. ஜோதிமணி, முன் னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொ டர்பாக விசாரித்தபோது, ""சேலம் மாவட்டம் வீரா ணம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற சரித்திரப்பதிவேடு குற்ற வாளி, திருத்தொண்டர் படை என்ற பெயரில் இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதாகக்கூறி பொதுநல வழக்கு தொடர்ந்து, நிலத்தை பயன்படுத்துவோரிடமிருந்து பணம் பறித்து வழக்கை நிறுத்தி வைப்பதான செய லில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவ்விவகாரத்தில் இவருக்கு ஒரு முக்கிய வழக்கறிஞரும், கோவிலின் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி கந்தனும் உடந்தையாகச் செயல்படு வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் இவர் சிலைக்கடத்தல் கும்பலோடு தொடர்பிலிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ராதாகிருஷ் ணன், வெவ்வேறு விலா சங்களைப் பயன்படுத்தி தகவறியும் உரிமைச் சட்டத் தின் மூலம் தகவல்களைப் பெற்று, சம்பந்தப்பட்டவர் களிடம் பணம்பறிக்கும் சட்டவிரோத நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார். மேலும், பொதுநல வழக் கில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து, டி.ஜி.பி., துறை செயலாளர் என்று உயரதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/vennaikovil1-2025-12-06-02-35-45.jpg)
ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் பணியாற்றும் இரண்டு நீதிபதிகள் இருப்பதாகவும், அவர்களால் மட்டுமே ராதாகிருஷ்ணன் தொடர்பான வழக்குகள் விசா ரிக்கப்படுமென்றும் கூறப்படுகிறது. ராதா கிருஷ்ணனை போலீசார் விசாரிக்கக்கூடா தென்றும், மக்களின் போராட்டத்தால் ராதா கிருஷ்ணனுக்கு சிறுகீறல்கூட விழாதபடி போலீசார் பாதுகாப் பளிக்க வேண்டுமென் றும் வாய்மொழி உத் தரவு போடப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
இந்த ராதாகிருஷ் ணனின் பொது நல மனுவை எதிர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் வரை சென்று தடையாணை பெறப்பட்டுள்ளது. மேலும், ராதாகிருஷ்ணனின் மனுக்கள் பொய்யானவை என்றும், பத்துவிதமான முகவரிகளை பயன்படுத்தி நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், கரூர் மாவட்ட காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத் தில், ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசு மற் றும் தனியார் நிலங்களை, அரசு ஊழியர்களைக் கொண்டு சட்டவிரோதமாக அளவீடு செய்து வருவதைத் தடுக்கவும், அவர் ஏற்கனவே இரண்டு வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ளதற் கான ஆவணங்கள் இருப்பதால் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ராதாகிருஷ்ணன் மீது மாவட்ட காவல்துறை உடனடியாக விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் வாங்கிய இனோவா கார், சேலத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற த.வெ.க. நிர்வாகி, அரசுக்கு எதிராகச் செயல்படக்கோரி பரிசாக அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவில் நிலம் தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி, அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள், கோயில் இனாம் நிலத்திலுள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றத் திட்டமிட்டிருந்தனர். அதற்கு கண்டனம் தெரிவித்து பல கட்சியினரும் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிகமாக கோவில் நிலங்களை மீட்கும் பணியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிறுத்தி வைத்துள்ளனர்.
திருத்தொண்டர் படை என்ற பெயரில் கோவில் நிலங்களைக் கண்டறிந்து அதன்மூலம் பலருடைய வாழ்வாரதாரத்திலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை உருவாக்கிவரும் ராதாகிருஷ்ணன் மீது தமிழக அரசு விசாரணை நடத்தினால் பல பிரச்சனை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதே சமயம், நீதிபதிகள் தனக்கு ஆதரவானவர்கள் என்று கூறிக்கொண்டு அதிகாரிகளை மிரட்டி வரும் இவர்மீது நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முன்வந்து, நீதிபதிகளின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/vennaikovil-2025-12-06-02-35-28.jpg)