Advertisment

எதையும் கடைபிடிக்காத த.வெ.க!

TVK

ரூரில் விஜய் பரப்புரை செய்வதற்காக, த.வெ.க. கட்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை  நிபந்தனைகள் அடங்கிய நெறி முறைகளை வழங்கியுள்ளது. அதை கீழே பிரசுரித்துள்ளோம்.

Advertisment

அதன் முழு விபரம் வருமாறு:

மாலை 15.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பரப்புரை நடத்த அனுமதி கோரிய மனு விற்கு கீழ்க்கண்ட நிபந்தனை களின்படி நடந்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisment

1. நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் கூடாது. மேலும் தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக

ரூரில் விஜய் பரப்புரை செய்வதற்காக, த.வெ.க. கட்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை  நிபந்தனைகள் அடங்கிய நெறி முறைகளை வழங்கியுள்ளது. அதை கீழே பிரசுரித்துள்ளோம்.

Advertisment

அதன் முழு விபரம் வருமாறு:

மாலை 15.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பரப்புரை நடத்த அனுமதி கோரிய மனு விற்கு கீழ்க்கண்ட நிபந்தனை களின்படி நடந்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisment

1. நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் கூடாது. மேலும் தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது. இவற்றை முறையாகக் கூட்டம் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.

2. நிகழ்ச்சி நடைபெறும் போது தங்களது தொண்டர்கள் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை நடத்த காவல் துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

3. வாகனங்கள் நிறுத்தும் இடங்களை முன்கூட்டியே அறிந்து, நிகழ்ச்சிக்கு அழைத்துவரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று முறையாக வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

4. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்சார வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

5. நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது ஏதேனும் அவசர ஊர்தி வரும் பட்சத்தில் தொண்டர்கள் மேற்படி வாகனத்திற்கு வழிவிட வேண்டும்.

6. நிகழ்ச்சி நடத்தும் இடத்தின் அருகில் வணிக வளாகங்கள் மற்றும் ஒப நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்துசெல்லும் பகுதி என்பதாலும், மேலும் அதிகப்படியான தொண்டர்கள் கலந்துகொள்வதால் முதல் உதவி சிகிச்சை செய்வதற்கு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.

7. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முறையாக தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்கவேண்டும்.

8. கூட்டத்திற்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று இருக்கவேண்டும்.

9. பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் திருக்காம்பு-யூர் ரவுண்டானாவானது தேசிய நெடுஞ்சாலையில், பிற மாவட்டங்களின் முக்கிய இணைப்பு சாலை என்பதால் எக்காரணம் கொண்டும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை.

10. பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள், பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

11. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் கஊஉ திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

மேற்படி நிபந்தனைகளை மீறாமல் அனுமதிக்கப் பட்ட இடத்தில் கூட்டத்தின் நிகழ்ச்சியை நடத்தவும், அனுமதித்த பின்னரும், மேலும் உரிய அனுமதி பெறாமல் பதாகைகள் வைப்பதும் அவசர சேவை வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தினாலோ தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இது எதையுமே த.வெ.க. கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம்!

-கீரன்

nkn111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe