கீழடி அகழாய்வுகள், சிவகளை, ஆதிச்சநல் லூர், கொற்கை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் வெளிப்பட்ட, தமிழர்களின் தொன்மையான காலத்தை ஏற்க மறுத்த ஒன்றிய அரசுக்கு அந்த அரிதானவைகளை அருங்காட்சி யகப்படுத்தி உறைக்க வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Advertisment

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 20 அன்று முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தவரை, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து நெல்லை வந்தவர், கிறிஸ்துமஸ் பெருவிழா, பாளை சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் நுழைவுவாயில் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண் டார். அதன்பின்னர், நெல்லை ரெட்டியார்பட்டி யின் ரம்மியமான மலைச்சாலையில், 13 ஏக்கரில், 67.25 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

தாமிரபரணிக் கரையோரம் தோன்றிய தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தின் அடையாளமாக, அவர்கள் புழங்கிய முதுமக்கள் தாழி, நாணயம், பானை, ஏடுகள் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இவை, 5 ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமெரிக் காவில் புளோரிடா மாகாணத்திலும் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. 

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வின்போது கண்டறியப்பட்ட பொருட்கள், 3 பகுதிகளாக அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆதிச்சநல் லூர் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில், மிக வயதான காலத்தில் புதைக்கப்பட்டவர்களின் உடலோடு நெல் உமியும் சேர்க்கப்பட்டிருந்ததன் மூலம், அக்காலத்திலேயே நெல் விவசாயம் நடந்திருப்பது தெரியவருகிறது. அடுத்து, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு, 5300 ஆண்டுகட்கு முன்பு புழக்கத்திலிருந்த பொருள். அந்த இரும்பை உருக்கி ஆயுதங்களும், அன்றைய தமிழர்களின் வாழ்வியலுக்குத் தேவையான பொருட்களும் உருவாக்கப்பட்டது கண்டறியப் பட்டுள்ளது.

Advertisment

exhibition1

கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம், கொற்கை தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கடல் தாண்டி வணிகம் நடத்தியது, முத்துக்குளிப்பு நடத்தியதற் கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய் வில், ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த ஆயிரத்திற் கும் மேற்பட்ட தடயப் பொருட்கள், 3 வெவ்வேறு கட்டடங்களில் அருங்காட்சியமாக ரெட்டியார் பட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல் வர் மு.க.ஸ்டாலின்,  "பொருநை ஆற்றங்கரையில் கிடைத்த வரலாற்றுத் தடயங்களில், இரும்பை உருக்கி கலன்கள் செய்த சிவகளை கண்டுபிடிப்பு மிகவும் தொன்மையானது. கீழடி நமது தாய்மடி, பொருநை தமிழர்களின் பெருமை. அதனை ஜென் சி  (GEN Z) தலைமுறைக்கும் கொண்டு செல்கிற நடவடிக்கை இது'' என்றார் பெருமிதமாக.

நம்மிடம் பேசிய தொல்லியல் ஆர்வலரும் எழுத்தாளருமான காமராஜ், "ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் பண்டையகாலத் தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, போர்க்கலன்கள் உள்ளிட்ட எண்ணற்ற அரிய பொருட்கள் கிடைத்தன. அவற்றை ஆதிச்சநல்லூரி லேயே காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக் கப்படவேண்டுமென்று அப்போது கோரிக்கைகள் வலுத்தன. அதுசமயம் மத்திய அரசு ஆதிச்சநல்லூரி லேயே அருங்காட்சியகத்தை அமைத்து அகழாய்வுப் பொருட்களை காட்சிப்படுத்தியது. ஆனால் அதன்பிறகு அந்த அருங்காட்சியகம் பராமரிக்கப்படாமலேயே போனது.

exhibition2பின்னர், 2022, ஆகஸ்ட் எட்டாம் தேதி, ஆதிச்சநல்லூர் வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சி யகம் அமைக்கப்படும் என்றவர், அதற்கான அடிக்கல் நாட்டிவிட் டுச் சென்றார். ஆனால் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 

இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரையடுத்து சிவகளை, கொற்கையில் அகழாய்வில் கிடைத்தவை பேசுபொருளானது. குறிப்பாக, சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்பு 5,300 ஆண்டுகட்கு முற்பட்டது. அப்போது வாழ்ந்த தமிழர்களால் இரும்பு உருக்கப்பட்டு பல்வேறு பொருட்கள் உருவாக்கப்பட்டிருக் கின்றன. ஆக, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க்குடி வாழ்ந்ததற்கான தடயங்கள் வெளிப்பட்டதன் மூலம், தமிழர்கள், கற்பனைக்கு எட்டாத காலந்தொட்டே வாழ்ந்தவர்கள் என்று தெரியவரும் உண்மையை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவில்லை. 

இதையடுத்தே தமிழக முதல்வர், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய 3 பகுதிகளின் அகழாய்வில் கிடைத்தவற்றை அருங்காட்சி யகப்படுத்துகிற நோக்கில், 2023-ல் நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அப்போதைய நிலையில் 35 கோடி என்று திட்டமிட்டு, தற்போது 67 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு பொருநை அருங்காட்சியகம் முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரங்கள், வாழ்ந்த தடயங்கள், அடுத்த தலைமுறைக்காக காட்சியகப்படுத்தியுள்ளது முதல்வரின்        மகத்தான சாதனை என்றுதான் பார்க்கவேண்டும்'' என்றார்.