"ஹலோ தலைவரே,…பிரதமர் மோடியின் மலேசிய பயணத்துல அவர் அப்செட்டுன்னு பா.ஜ.க. தரப்புலேயே சொல்றாங்களே?''”
"ஆமாம்,… நானும் கேள்விப்பட்டேன். மலேசிய அரசாங்கம் சார்புல விமர்சையான வரவேற்பெல்லாம் கொடுத்தாங்க. அப்புறம் ஏன் அப்செட்?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/rang-2026-02-09-17-00-23.jpg)
"தலைவரே.. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் இணைஞ்சு பல்வேறு நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டாரு மோடி. மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர்களில் தமிழர்கள்தான் அதிகம். தமிழர்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியை மலேசிய அரசு ஏற்பாடு செஞ்சிருந்தது. அதுல கலந்துக்கிட்டு தமிழ் மொழியின் சிறப்புகளை பெருமையோடு மோடி பேசினாரு. ஆனால், 25,000 பேர் கூடுவாங்கன்னு மோடிகிட்டே மலேசிய அரசாங்கம் சொல்லியிருந்த நிலையில, வெறும் 5,000 பேருதான் அந்த நிகழ்ச்சியில இருந்தாங்களாம். அதுதான் மோடியை அப்-செட்டாக்கியிருக்குன்னு பா.ஜ.க. தரப்புல கிசுகிசுக்கிறாங்க! இருந்தாலும், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகிய விசயங்கள் குறித்து மலேசிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததில் மோடிக்கு திருப்தியாம்.''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/rang1-2026-02-09-16-58-39.jpg)
"அ.தி.மு.க. மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குஷியா இருக்காராமே?''’
"அவரது குஷிக்கு காரணம் மோடிதான். சமீபத்துல மதுராந்தகத்துக்கு வந்த மோடியை வேலுமணி சந்திச்சாரு. அப்போ, விரைவில் நான் கோவைக்கு வரப்போறேன். அந்த சமயத்துல உங்ககிட்டே தனியா நிறைய அரசியல் பேசணும். கொங்கு மண்டலமே வியக்கிறமாதிரி கோவை நிகழ்ச்சியை நீங்க பார்த்துக்குங்க. எல்லோரையும் ஒருங்கிணைக்கிற வேலை உங்களோடதுன்னு சொல்லியிருக்காரு. மோடி, இந்த மாசக் கடைசியில தமிழகத்துக்கு வரப் போறாரு. அவரது வருகையை மோடி தரப்பி லிருந்து உறுதிப்படுத்தி, வேலுமணிக்கு தகவல் தந்திருக்காங்க. அதனால்தான் குஷியா இருக் காராம் வேலுமணி. எடப்பாடியைத் தவிர்த்துட்டு, வேலுமணிக்கு ஏன் முக்கியத்துவம் தரணும்? என அ.தி.மு.க.வுல பட்டிமன்றம் நடக்குது''”
"தமிழக பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை கட்சியி லிருந்து நயினார் நாகேந்திரன் நீக்கியிருக்காரமே?''”
"அதுவா தலைவரே! பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக இருக்கும் கரு.நாகராஜனின் வலதுகரமாக இருப்பதோடு, வட்டித் தொழிலும் நடத்தி வருபவர் சி.ராஜா. இவர் பா.ஜ.க.வின் மத் திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாநில அமைப் பாளரா இருக்கிறாரு. இந்த பிரிவுக்கு மாநில மற் றும் மாவட்ட அளவுல புதிய நிர்வாகிகள் நியமிக் கிறதில், பல பேரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருக்காரு. இந்த வில்லங்கத்தைத் தெரிஞ்சுக் கிட்ட பலர், டெல்லி மேலிடத்துக்கு புகார்களைத் தட்டிவிட்டிருக்காங்க. அந்த புகார்களின் உண் மைத்தன்மையை விசாரித்து தெரிந்துகொண்ட கட்சி மேலிடம், நயினாரைத் தொடர்புகொண்டு கண்டித்திருக்கிறது. இதனால, கட்சிப் பொறுப்பி லிருந்து சி.ராஜாவை நீக்கியிருக்கிறாரு நயினார். இந்த சம்பவம், பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்த, ராஜாவுக்குப் பின்னணியிலிருக்கும் கரு.நாகராஜன் மீது ஆக்ஷன் எடுங்கன்னு நயினாருக்கு நெருக்கடி உருவாகியிருக்கிறதாம்!''”
"தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியில தினம் தினம் சர்ச்சைகள் வெடிச்சபடி இருக்கு. என்னதான்பா பிரச்சனை?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/rang4-2026-02-09-16-59-04.jpg)
"காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் ஷோடங்கர்தான் பிரச்சனை தலைவரே! தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ள 2 மாசத்துக்கு முன்பே ராகுல் திட்டமிட்டாரு. அதுக் கேத்த மாதிரி, கிரீஷ் ஷோடங்கர் தலைமையில ஐவர் குழுவை அமைச்சாரு. அந்த ஐவர் குழுவும், ஸ்டாலினைச் சந்திச்சி தொகுதி உடன்பாடு பத்தி பேசியது. தி.மு.க. தரப்புல குழு அமைச்சதும் சொல்றோம்னு சொல்லி அவங்களை அனுப்பிவெச்சாரு ஸ்டாலின். ஆனா, இவ்வளவு நாளாகியும் பேச்சுவார்த்தைக் குழுவை தி.மு.க. அமைக்கலை. இது ராகுலை எரிச்சல்படுத்தி யிருக்கு. இந்த நிலையில, "கிரீஷ் ஷோடங்கரிடம் பேச்சு வார்த்தை நடத்தமுடியாது. அகில இந்திய காங்கிரஸில் பொறுப்புல இருக்கிற வேறொ ருத்தரை அனுப்புங்க; பேச லாம்'னு தி.மு.க. தரப்புல சொல்லப்பட்டிருக்கு. ஆனா, "கிரீஷ் ஷோடங்கரை மாத்த முடியாது. அவரிடம் தான் தி.மு.க. பேசணும்; விவாதிக் கணும்'னு ராகுல்காந்தி பிடி வாதமா இருக்காரு. அதான் இந்த இழுபறி.''”
"இந்த விசயத்துல ராகுல் ஏன் பிடிவாதமா இருக்காரு?''”
"இதுக்கு முன்னாடி பல விசயங்கள்ல காங்கிரஸ் தலை மையை கலந்துக்காம தி.மு.க.வே முடிவெடுத்ததுல ராகுலுக்கு கோபம். அதுதான் இப்போ வெளிப் படுது. தி.மு.க. ஆட்சிக்குவந்ததும், தமிழ்நாடு சிறு பான்மை நல வாரியத்தின் சேர்மனா பீட்டர் அல்ஃபோன்ஸை நியமிச்சாரு ஸ்டாலின். பீட் டரை நியமிக்கிறோம்னு ஒரு வார்த்தைகூட ராகுல்கிட்டே சொல்லலையாம். நியமிச்சபிறகு, பீட்டரை நியமியுங்கள்னு ஒரு சிபாரிசு கடிதத்தை தி.மு.க.வுக்கு அனுப்புங்கன்னு அன்னைக்கு காங்கிரஸ் தலைவரா இருந்த கே.எஸ்.அழகிரியிடம் தி.மு.க. சொல்லியிருக்கு. ஆனா, ராகுல் இதுக்கு ஒத்துக்காததால அந்த சிபாரிசு கடிதத்தை காங் கிரஸ் தரலை. அதேமாதிரி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறந்துபோனதால, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்துச்சு. அது, காங்கிரஸ் தொகுதியா இருந்தும், காங்கிரஸ்கிட்டே யோசனை கேட்காம தி.மு.க. போட்டியிடும்னு அறிவிச்சிடுச்சி அறிவா லயம். இதிலும் ராகுலுக்கு வருத்தம். அப்புறம், 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல குறிப்பிட்ட 3 சிட்டிங் எம்.பி.க்களுக்கு எந்த தொகுதியிலயும் சீட் கொடுக் கக்கூடாதுன்னு நிபந்தனை போட்டிருக்கிறது தி.மு.க. அதுவும் ராகுலுக்கு அதிருப்தி யை உருவாக்கியிருக்கு. அப்படி உருவான அதிருப்தி, இப்போ கிரீஷ் ஷோடங்கரை மாத்துங்கன்னு தி.மு.க. சொல்றதினால கூடுதலாகியிருக்கு. இப்படி நிறைய விசயங்கள்ல தி.மு.க. மீது ராகுலுக்குக் கோபமாம். அதனால்தான் இந்த தேர் தல்ல, காங்கிரஸ் வேட்பாளர்கள் விச யத்துல தி.மு.க. தலையிடக் கூடாதுங் கிறதுக்காக, தொகுதிகளை முன் கூட்டியே முடிவுசெய்து அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ள வேண்டும்னு ராகுல் பிடிவாதமா இருக்கார்.''”
"ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காம இழுத்தடிப்பு நடக்கிறதினால நொந்துபோயிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய், தனது நெருங்கிய நண்பர் விஷ்ணுரெட்டியை டெல்லிக்கு அனுப்பிவெச்சிருக்காராமே?''”
"உண்மைதான் தலைவரே, விஜய்க்கு நெருக்கமான நண்பர் விஷ்ணுரெட்டி. த.வெ.க.விலிருக்கும் அந்த விஷ்ணு ரெட்டி, டெல்லிக்குச் சென்று அமித்ஷாவுக்கு நெருக்கமான ஒரு அதிகாரியைச் சந்திச்சிருக்காரு. அதுல, ஜனநாயகன் படம், சென்சார் சிக்கல், அரசியல்னு நிறைய விசயம் பேசியிருக்காங்க. அப்போ, தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வந்தா, காங்கிரஸை விஜய் ஆதரிக்கக் கூடாதுன்னு அமித்ஷா தரப்புல கண்டிசன் போடப் பட்டதாம். அதை விஜய்யிடம் சொல்லியிருக்காரு விஷ்ணு ரெட்டி. கலந்து பேசிட்டு சொல்றேன்னு விஜய் சொல்ல, அதை அப்படியே அமித்ஷா தரப்புக்கு பாஸ் பண்ணிட்டு சென்னைக்கு விஷ்ணுரெட்டி திரும்பிட்டாருன்னு விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்டேயிருந்து தகவல் கிடைக்குது.''”
"பா.ஜ.க.வின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சென்னைக்கு வந்திருக்காரே… ஏதும் விஷேசமா?''”
"தேர்தல் தேதி அறிவிப்பு இந்தமாசக் கடைசியில அல்லது மார்ச் முதல் வாரத்துல வரப்போவுது. இந்த முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுற நிர்வாகிகளின் எதிர்பார்ப்புகளை மேலிடம் நிறைவேத்தணும்ங்கிற குரல் கமலாலயத்துல அதிகம் கேட்குது. குறிப்பா, தொகுதிக்கு எவ்வளவு செலவாகும்னு ஒரு கணக்கு ஏற்கனவே டெல்லிக்கு அனுப்பிவெச்சிருக்காங்க. அதையெல்லாம் கூட்டிக்கழிச்சிப் பார்த்துட்டுத்தான் சென்னைக்கு வந்திருக்காரு சந்தோஷ். தமிழக தலைவர்களோட இதுபத்தி விவாதிப்பதோடு, கூட்டணிக் கட்சிகளோடு எப்படி இணைஞ்சி பணியாற்றனும்கிற வகுப்பையும் அவர் எடுக்கப்போறாராம். அதுமட்டுமல்ல, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் இணைத்து என்.டி.ஏ. ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்றை உருவாக்கும் யோசனையில் இருக்கிறாரு. அதப்பத்தியும் விரிவா பேசறதுக்காகவும்தான் இந்த விசிட்னு கமலாலயத்தில் பேச்சு.''”
"தேனி மாவட்டத்தில் நா.த.க.வும் த.வெ.க.வும் உரசல், அடிதடியில இறங்கி யிருக்காங்களே என்ன விவரம்?''”
"தேனி மாவட்டத்தில் த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் பாண்டி (எ) லெப்ட் பாண்டி. த,வெ.க. கட்சி ஆரம்பித்த நாளிலிருந்தே வீடியோக்களில் விஜய்க்கு எதிரான விமர்சனங்களை, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வைத்துவருகிறார். இந்நிலையில், "வீடியோவில் பேசுவதை விட்டுவிட்டு, முடிந்தால் தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு. தேனியில் கால்வைக்க முடியாது'’என பகிரங்கமாக மிரட்டல் விட்டார் த.வெ.க.வின் லெப்ட் பாண்டி. சாட்டை துரைமுருகன் கலந்துகொள்ளும் நாம் தமிழர் பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற வேளையில், த.வெ.க. கொடி கட்டிய மீசை முளைக்காத ரசிகர்கள், தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் கும்பலாக வந்து, போக்கு காட்டினர். இருசக்கர வாகனத்தை உறுமவிடுவது, முகப்பு லைட்டை ஆப் செய்து, ஆன் செய்வது என வம்பிழுக்க ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் இரு தரப்பும் நிதானமிழந்து கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். கல் வீசி கார்கண்ணாடி உடைக்கும் முயற்சியில் நாம் தமிழர் முன்னேறவே, தேனி போலீஸார் அங்குவந்து சமாதானப்படுத்தினர். அதையடுத்து த.வெ.க.வின் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் ஐவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதேசமயம், நாம் தமிழர் கட்சியினர் மீது எந்தவொரு வழக்கையும் பதியவில்லை என த.வெ.க.வினர் கொந்தளிக்கின்றனர்.''”
"தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்து குழப்ப மான தகவல்கள் வெளிவர தி.மு.க. குழு அமைக் காததே காரணம் என கொளுத்திப்போட்டி ருக்காரே சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்?''”
"ஆமாங்க தலைவரே, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து சுவாமி தரிசனம் செய்த கார்த்தி சிதம்பரம், "இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையின் கீழ்தான் உள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட குழுவே முடிவுசெய்யும். தற்போதைய நிலையில், தி.மு.க. சார்பில் இதற்கான குழு இன்னும் அமைக்கப்பட வில்லை'’என்றார். அதனை ஆமோதிப்பதுபோல், ‘"இரண்டு மாதங்களாக காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பேசிவருவதும் குழப்பமான நிலை நீடிப்பதற்கும் தி.மு.க. குழு அமைக்காததுதான் காரணம். பேச்சுவார்த்தைக் குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் வந்திருக் காது'’என்றிருக்கிறார் செல்வப்பெருந்தகை. தி.மு.க. -காங்கிரஸ் கூட் டணியில் காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கப் போவது கார்த்தி ப.சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரம். அதற்காகத்தான் இந்த சத்தமே’ என்கின்றனர் விவரமறிந்த கதர்ச்சட்டைகள்.''
"திருநெல்வேலி சிவமதி விவகாரம் இன்னும் புகையுதே என்ன விவரம்?''”
"பட்டியலின சமூக இளைஞரான ஆனந்தகிருஷ்ணனும், முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த சிவமதியும் காதலித்து வந்த நிலையில் சிவமதி மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி கழுத்தை நெறித்து ஆணவக் கொலைசெய்துள் ளனர் அவரது பெற்றோரும், தாய்மாமாவும் என நெல்லை மாநகர காவல்துறையிடம் புகாரளித்தார் ஆனந்தகிருஷ்ணன். ஆனால் பிணக்கூராய்வும் விசாரணையும் இது ஆணவப் படுகொலையல்ல… தற்கொலையென முடிவுக்கு வந்த நிலையில், ‘கடந்த ஜனவரி 23 அன்றுதான் சிவமதிக்கு 18 வயது நிறைவுபெற்றது. கடந்த 6 வருடங்களாக சிவமதியை காதலித்து வந்துள்ளேன்’ என ஆனந்தகிருஷ்ணன் கூறியதும், மொபைல் போனில் கிடைத்த சில தடயங்களும் வழக்கினை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுள்ளன. இது போக்ஸோ வழக்காக மாறலாம். இதனால் காதலன் கைதாகலாம்’ என்கிறது உளவுத்துறை.''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/rang2-2026-02-09-16-59-49.jpg)
"பிரேமலதா இன்னும் கூட்டணி விவகாரத் துல ஒரு முடிவுக்கு வரலையே?''”
"பிரேமலதா தனது பேரத்தைத் தொடர்ந்து வருகிறார். ராஜ்யசபா சீட், சட்டமன்ற சீட், கூடவே அதிக தொகை கேட்கிறார். ராஜ்ய சபா சீட், சட்டசபை இடங்களில் வேண்டுமானால் சற்று இறங்கிவரலாம். அதிக தொகை வேண்டுமென்பதில் தெளிவாக இருக் கிறார். அதற்காக, தி.மு.க.விடம் பேசியதில் தி.மு.க. வில் அவ்வளவு பெரும் தொகையைத் தரும் முடிவில் இல்லை. அதனால் அ.தி.மு.க.வை அவர் டார்கெட் செய்கிறார். தருகிறோம்,…இல்லையெனச் சொல்லா விட்டாலும் பேச்சு நடைபெற்றுவருகிறதாம்.”
"மத்திய அரசு தேர்தலை முன்னிட்டு தமிழகத் தில் ஒரு ரகசிய சர்வே நடத்துனதா தகவல் வருதே?''
"உங்க காதுக்கு எட்டலைன்னாதானே ஆச்சர்யம்! மத்திய அரசு எடுத்த அந்த சர்வேயில், தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து சில விவ ரங்கள் சர்வே டீமால் சேகரிக்கப்பட்டுள்ளதாம். அந்த விவரங்களின்படி தமிழகத்தில் தி.மு.க. வலுவாக இருக்கிறது. தி.மு.க.வைவிட அ.தி.மு.க. வின் வாக்குகளையே அதிகமாகப் பிரிக்கிறதாம் த.வெ.க. அதேபோல, த.வெ.க. வாங்கக்கூடிய மொத்த ஓட்டே 8 சதவிகிதம்தானாம். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் பல பலவீனமாக இருக் கின்றன. அதிலும் காங்கிரஸ் மிகப் பலவீனமாக இருப்பதாக பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் இந்தத் தகவல்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருந்ததில் அவர்கள் சுணக்கமடைந்துள்ளனராம்.''”
"கிராவல் குவாரிகளை மூடுவதிலும், திறப்பதிலும் போட்டி அரசியல் நடக்குதாமே?''
"ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டில் கிராவல் குவாரி விவகாரத்தில், மேலிடத்திலிருந்தே "மணல் ராஜப்பா'வுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களாக மழை காரணமாக கிராவல் எடுப்பு நிறுத்தியிருந்தாங்க. இந்த சான்ஸை பயன் படுத்தி, புதுக்கோட்டை எஸ்.ஆர்.குரூப்ஸ் கரிகாலன், தொகுதி அமைச்சர் ரகு பதிக்கு அழுத்தம் கொடுத்து, அந்த குவாரிகளை நிரந் தரமாகவே மூடத் திட்டமிட்டிருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் கடந்த மூன்று மாதமா உடல்நலமில்லாத நிலை யில், கிராவல் மீதான ஆசையில், எஸ்.ஆர் .குரூப்ஸ், தன் பக்க நியா யத்தை மேலிடத்துக்கு எடுத்துச்சொல்லி, மீண்டும் அந்த வாய்ப்பை உருவாக்கிட, குவாரிகள் அனைத்தையும் மூட நடவடிக்கை எடுத்திருக்கு. அப்படி மூடப்பட்ட குவாரிகளை திறக்கிற நடவடிக்கையில் ராஜப்பா குரூப் இறங்கியிருக்காம்.''
"சரி, நானும் ஒரு தகவல் சொல்றேன் கேட்டுக்க. சமீபமா எடப்பாடியை ஸ்டெர்லைட் நிறுவனர் வேதாந்தா சந்தித்திருக்கிறார். வேதாந்தாவுக்காக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து கொடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் முன்புபோல் காப்பர் தயாரிக்கப்போவதில்லையாம். மாறாக, செமிகண்டக்டர் தயாரிக்கும் திட்டமிருக்கிறதாம். அதேபோல அம்பானிக்கு எல்காட் நிறுவனத்தை யும், அதானிக்கு துறைமுகங்கள், விமான நிலை யங்களையும் ஹேண்டில் செய்யும் பொறுப்புகள் அளிக்கப்படும். அதற்கான வசதிகளை எடப்பாடி ஆட்சிக்கு வந்தால் செய்துதர வேண்டும் என டீல் பேசப்பட்டுள்ளது. இதற்காக தேர்தலை எதிர்கொள்ள வசதி யாக, எடப்பாடி காட்டில் அடைமழை, அதுவும் பணமழையாகப் பெய்திருக் கிறதாம்.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/09/rang3-2026-02-09-16-58-17.jpg)