2013-ஆம் ஆண்டு மாற்று ஊடக மையத்தின் மூலமாக கலைஞர்களையும் கலைகளையும் கௌரவித்து, அவற்றை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் “வீதி விருது திருவிழா. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 100 நலிவடைந்த கலைஞர்களுக்கு ரூ 10,000 வீதம் 10 லட்சம் ரூபாயை செலவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதான கலைகளைக் கண்டறிந்து அந்தக் கலையில் சிறந்து விளங்குபவர்களை அடையாளப் படுத்தி வருகிறார்கள். இந்த 13 ஆண்டுகளில் 1,024 கலைகளில் 567 கலைகளை கண்டுபிடித்து மேடையேற்றி ஆவணப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான வீதி விருது விழா, சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளியில் ஜனவரி 3, 4 தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு ஆகச்சிறந்த ஆளுமைகள் கலந்துகொண்டனர். இதில் இரண்டு நாட்கள் கரகாட்டம், பறையாட்டம், மகரக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, மலைவாழ் மக்களின் இசைக் கருவிகள் கொண்ட நட
2013-ஆம் ஆண்டு மாற்று ஊடக மையத்தின் மூலமாக கலைஞர்களையும் கலைகளையும் கௌரவித்து, அவற்றை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் “வீதி விருது திருவிழா. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 100 நலிவடைந்த கலைஞர்களுக்கு ரூ 10,000 வீதம் 10 லட்சம் ரூபாயை செலவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதான கலைகளைக் கண்டறிந்து அந்தக் கலையில் சிறந்து விளங்குபவர்களை அடையாளப் படுத்தி வருகிறார்கள். இந்த 13 ஆண்டுகளில் 1,024 கலைகளில் 567 கலைகளை கண்டுபிடித்து மேடையேற்றி ஆவணப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான வீதி விருது விழா, சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளியில் ஜனவரி 3, 4 தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு ஆகச்சிறந்த ஆளுமைகள் கலந்துகொண்டனர். இதில் இரண்டு நாட்கள் கரகாட்டம், பறையாட்டம், மகரக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, மலைவாழ் மக்களின் இசைக் கருவிகள் கொண்ட நடன நிகழ்ச்சி, நாடகம் என எண்ணற்ற கலைகளை மக்களின் கண்முன்னே நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசும், அவர்களுக்கான சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்ததோடு சிறந்த கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கினர்.
மேலும் இந்தாண்டு நிகழ்வின் நடுவில், அழிவின் விளிம்பிலிருக்கும் இசைக் கருவிகள் பலவற்றை மக்களின் பார்வைக்கும் வைத்திருந்தனர். அதில் பலகை மரம், குட்டத்தாரை, எக்காளம், செண்டை உச்சம், துடுப்பு என பலவகையான கருவிகளை பார்வைக்கு வைத்து, அவை எக்காலத்து கருவி, அதன் வரலாறு என்ன என்பதுபோன்ற குறிப்புகளையும் பதிவுசெய்து வைத்திருந்தனர்.
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த கலைஞர் அஜித் குமார் கூறுகையில், “"10 ஆண்டுகளுக்கும் மேலாக பறையிசை, ஒயிலாட்டம் என பல நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். ஆனால் எங்களுக்கான அங்கீகாரம் மிகக்குறைவாகவே உள்ளது. இந்தக் கலைகள் அழிந்துவிடாமல் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர் களை வைத்து அவர்களுக்கு கற்றுக்கொடுத்து விடுமுறை நாட்களில் இவற்றில் மாணவர்களை தேர்ச்சிபெறச் செய்கிறோம்''’என்றார். அதேபோல தர்மபுரி எளவடையைச் சேர்ந்த சாக்கன், "25-க்கு மேற்பட்ட பறை, ஒயில், கரகம், கோல்கிளியில் நையாண்டி என கலைகள் எங்களுக்குத் தெரியும். சேலம், கோவை என தமிழகம் முழுவதும் எங்களின் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். இந்த வீதி விருது நிகழ்வில் பங்குபெறுவது, எங்களின் தாய்வீட்டிற்கு வந்துபோனதுபோல மகிழ்ச்சியாகவும் மனநிறைவாக வும் உள்ளது''” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/festival1-2026-01-05-18-07-32.jpg)
சினிமா நடன இயக்குநர் சாண்டி மாஸ்டரும் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். நலி வடைந்த கலைஞர்களின் குழந்தைகளுக்கு வருடாந் தோறும் தொடர்ச்சியாக கல்விக்கான செலவினை ஏற்று அவர்களைப் படிக்கவைத்து வருகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனன், சால்வை அணிவித்தார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “"நான் பேசத் தொடங்குவதற்கு முன்பாக ஒருவரைப்பற்றி பேச ஆசைப்படுகிறேன். அவருக்கு உயிர் அவரிடம் இல்லை. கலைகள் மீது உள்ளது. அவர் வேறு யாருமில்லை இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் காளீஸ்வரன்தான். ஒரு மாதத்திற்கு முன்பாக மூச்சுத்திணறல் காரணமாக ஐ.சி.யூ.வில் இருந்த ஒரு நபர் எப்படி நிகழ்ச்சி நடத்தமுடியும்? ஆனால் பார்த்தால் காலையிலிருந்து விழா நிகழ்வுகளில் நின்றுகொண்டே உற்சாகத்தோடு நடத்திவருகிறார். ஆகையால்தான் சொன்னேன் உயிர் அவரிடம் இல்லை, இந்த கலைகளின் மீதுள்ளது என்று. இங்குள்ள கலைகளையும், கலைஞர்களையும் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படுகிறது. இதுபோன்று அழிந்துவரும் கலைகளை மீட்டுருவாக்கம் செய்துவரும் ஐயா காளீஸ்வரன் அவர்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். அவ ருக்கு உறுதுணையாக இருக்கும் பள்ளி உரிமையாளர் வேல்முருகனுக்கும் நன்றி!''’என பேசியமர்ந்தார்.
கலைஞர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “"நாட்டுப்புற வாழ்வியலை முன்நிறுத்தி கவிதை, கட்டுரை, நாவல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இளம் எழுத்தாளர்களை வளர்த்தெடுக்கும் இந்த நிகழ்வை நான் மனதார பாராட்டு கிறேன். ஆயுதங்கள் ஏந்தியும் புரட்சி செய்யலாம். உயிர் சேதமில்லாமல் எழுத்தின் மூலமாகவும் செய்யலாம். அம்பேத்கர்போலவே பல புரட்சியாளர்கள் உருவாவதில் பெருமிதம்கொள்கிறேன்''’என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/festival2-2026-01-05-18-07-52.jpg)
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் காளீஸ்வரன் பேசுகையில், "அழிந்துவரும் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலே இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. கலையை பணத்திற்காக அல்லாமல் மனநிறைவிற்காக செய்துவரும் கலைஞர்களை பாராட்டும், அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக உள்ளது. அனைத்து பல்கலைக்கழகங் களோடும் நாட்டுப்புற கலை மண்டல அலுவலகங்களை இணைக்கவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மாவட்டந்தோறும் கலை, பண்பாட்டு அரசு அலுவலகம் திறப்பது, கலைஞர் பெயரில் கலை, அறிவியல் பள்ளிகளை உருவாக்குவது, பாரம்பரிய கலைக் கிராமங்களை அடையாளப்படுத்தி அந்த கிராமங்களை சுற்றுலாத்தலமாக உருவாக்குவது, பெண் கலைஞர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி, பொருளாதாரத்தை உருவாக்குவது. மறைந்த கலைஞர்களுக்கு நினைவிடம் அமைப்பது, இவையனைத்தையும் தமிழக அரசு செய்துகொடுக்குமாயின் கலையும், கலைஞனும் என்றென்றும் அழியாமல் நீடித்துநிற்பார்கள்''’என்றார்.
-சே
படங்கள்: எஸ்.பி.சுந்தர்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us