Advertisment

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு!

australia

ஸ்திரேலியா, சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறன்று, ஹனுக்கா எனும் யூதப்பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி யிருந்த மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இத்தாக்குதலில், தந்தையும், மகனுமாக இருவர் ஈடுபட் டுள்ளது தெரியவந்தது. தாக்குத லில் ஈடுபட்ட தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்திலேயே போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மகன் நவீத் அக்ரம், பலத்த காயத் துடன் சிகிச்சையிலிரு

ஸ்திரேலியா, சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறன்று, ஹனுக்கா எனும் யூதப்பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடி யிருந்த மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இத்தாக்குதலில், தந்தையும், மகனுமாக இருவர் ஈடுபட் டுள்ளது தெரியவந்தது. தாக்குத லில் ஈடுபட்ட தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்திலேயே போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். மகன் நவீத் அக்ரம், பலத்த காயத் துடன் சிகிச்சையிலிருக்கிறார்.

Advertisment

யூத சமூகத்தினரின் பண்டிகைக் கொண்டாட்டத்தில், யூதர்களுக்கு எதிரான தாக்குத லாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில், கூடியிருந்த ஆயிரக் கணக்கானோர் மீது துப் பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், கூட்டம் சிதறி ஓடியது. இந்த துப்பாக்கிச் சூட்டில், 10 வயது சிறுமி உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில், பிரிட்டனை சேர்ந்த ஒருவரும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.

Advertisment

இத்தாக்குதலின்போது, அப்பகுதியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அகமது அல் அகமது  என்ற 43 வயது ஹீரோ, துணிச்சலாக துப்பாக்கிச்சூடு நடத்தியவனை நோக்கி பயமின்றி ஓடுகிறார். இதை எதிர்பார்க்காதவன், அகமதுவை நோக்கி சுட, அதில் அவரது கையிலும், முழங்கையிலும் குண்டுகள் பாய்ந்தபோதும் அசராமல் அவனை கழுத்தோடு வளைத்து மடக்கிப் பிடித்த அகமது, அவனிடமிருந்து துப்பாக்கியை பறித்து, அவனை நோக்கியே துப்பாக்கியை நீட்ட, அவன் பின்வாங்கியிருக்கிறான். இவை யனைத்தும் சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கிறது.

அகமது அல் அகமதுவின் துணிச்சலான செயலால், உயிர்ப் பலி எண்ணிக்கை மேலும் அதி கரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளின் அப்பாவான அகமது, ஆஸ்திரேலியாவில் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் பழக்கடை நடத்திவருகிறார்.  துப்பாக்கிச் சூட்டை தடுத்ததில் குண்டுக் காயம் பட்ட அகமதுவை மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இவரை மருத்துவமனையில் வந்து பார்த்து கைகுலுக்கிப் பாராட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பா னீஸ், அகமதுவை, "அவர், ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ'' என்று தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நவீத் அக்ரம், ஆஸ்திரேலியா வில் கிளர்ச்சியை உண்டாக்கி யதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, விடு விக்கப்பட்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் போண்டி கடற்கரைக்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்துத் தங் கியபடி தாக்குதலுக்கு திட்ட மிட்டுள்ளனர். இவர்களுக்கு பின்னால் ஏதேனும் பயங்கர வாத அமைப்பு இருக்கிறதா என்ற விசாரணை தொடர்கிறது.

nkn201225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe