Advertisment

மாணிக்கம் தாகூரின் வைரச் சுரங்க ரகசியம்?

taqore

மிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியின் தற்போதைய தட்பவெப்பத்தோடு, மாணிக்கம் தாகூரின்  அரசியல் போக்குகளும் முடிச்சுப் போட்டு பேசப்படுகின்றன. தங்களது அரசியல் எதிரியான தி.மு.க. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற திட்டத்துடன், மாணிக்கம்தாகூரை பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க.தான் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரங்களிலேயே பரவலாக விவாதிக்கப்படுகிறது.  

Advertisment

மாணிக்கம்தாகூரின் பொருளாதாரப் பின்னணி குறித்த ரகசியத் தகவல்களை, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. தேர்தல் மேடைகளில் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார். அதற்கெதிராக எந்தவிதமான பதிலையும் அளிக்காமல், மாணிக்கம்தாகூர் அமைதிகாக்கும் போக்கு பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

Advertisment

"அது என்ன தங்கமலை ரகசியமா?'’என்று வெற்றிவேலிடம் கேட்டால், “"இல்ல..  வைரச் சுரங்க ரகசியம்'’என்று அவர் சிரிக்கிறார். பின்னர், அவர் நம் முன் முன்வைக்கும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்புகிறது.  

"மாணிக்கம்த

"மாணிக்கம்தாகூருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக கென்யா -நைரோபி பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்துக்கும் தொடர்பு இருக் கிறது. அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில், வைரச் சுரங்கம் தொடங்கு வதற்கு முன் நடக்கும் தோண்டுதல் பணிகள் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். எவ்வளவு ஆழம் தோண்ட வேண்டும், எந்த வகை டிரென்ச் மெஷின் தேவை, அந்த இயந்திரங்களை எங்கிருந்து ஆர்டர் செய்ய வேண்டும், கப்பல் வழியாக எங்கே அனுப்ப வேண்டும் - இப்படி தொழில்நுட்ப விஷயங்கள் பேசப்பட்டன. அந்தப் பேச்சில்தான் நைரோபி என்ற பெயரும், மாணிக்கம்தாகூரின் பெயரும் அடிபட்டது. நான் அதை கவனித்தது அவர் களுக்குத் தெரியாது. அந்த உரையாடலில் உண்மை இருந்தது என்பதால்தான், பா.ஜ.க. மேடையிலேயே இதை நான் கேள்வியாக எழுப்புகிறேன். ஆனால், எந்த நிலையிலும் மாணிக்கம்தாகூர் எனக்கெதிராக ஒரு வார்த்தையும் பேசவில்லை''’என்றவர், அதற்குப் பிறகு இன்னும் தெளிவாகப் பேசுகிறார். 

"மாணிக்கம்தாகூர் எனக்கெதிராக அவதூறு வழக்கு கூட தொடராமல் அமைதி காக்கும் போக்கு, வைரச் சுரங்க விவகாரத்தில் அவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகத்தை எனக்குள் உறுதிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பா.ஜ.க. நிர்வாகியும் வாக்காளருமான சசிகுமார், மாணிக்கம் தாகூருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தேர்தல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்கிறார். இந்தியாவிலேயே வாக்காளர் களுக்குப் பணம் கொடுத்து எம்.பி. ஆனதாக வழக்கு தொடரப்பட்ட ஒரே நபர் மாணிக்கம்தாகூர்தான். அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்றன. ஒடஈ 171(ஊ), 171(ஐ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல எஒதகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன''” என்று அவர் பட்டியலிடுகிறார். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம், கிழக்கு ஆப்பிரிக்க வைரச் சுரங்கம் எனப் பேசப்படும் அளவுக்கு, மாணிக்கம் தாகூருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்தக் கேள்விக்குப் பதிலாக, தெலுங்கானா அரசியல் அதிகார மையத்தை எட்டச் செய்த பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்கள் முடிச்சுப்போட்டு பேசுகின்றன. 

taqore1

ரேவந்த் ரெட்டி முதல்வராக உயர்வதற்கான தேர்தல் வியூகங்களில், மாணிக்கம் தாகூர் ஆற்றிய ‘சேவை’ குறித்தும், அதன் பலனாக ரூ.500 கோடிக்கும் மேல் பெற்றதாக தெலுங்கானா காங்கிரஸ் வட் டாரங்கள் கிசுகிசுப்பதையும், அந்த மாநிலத்தில் அவருக்கு எதிராக நிலவும் கொந்தளிப்பையும் ஒரே கோட்டில் வைத்துப் பேசுகின்றனர்.
மாணிக்கம்தாகூருக்கும் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க.வுக்கும் உள்ள மறைமுகத் தொடர்பு மற்றும் தூண்டுதல் குறித்து எழும் சந்தேகங் களுக்கு, வைரச் சுரங்க விவகாரமும் முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதனால், இந்த விவகாரம் சட்ட -பொருளாதார விசாரணைக்குரிய கேள்வியாக மாறுகிறது.

இதனால்தான், தனக்காகவோ அல்லது தனது பினாமியாகச் செயல்படும் யாருக்காகவோ, காங்கிரஸுக்குள் இருந்துகொண்டே, பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். அரசியல் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் மாணிக்கம் தாகூர் செயல்படுகிறாரோ என்ற அரசியல் சந்தேகம் வலுப்பெறுகிறது.

இந்தச் சூழலில்தான், மாணிக்கம்தாகூர், "இனி தேர்தலில் நிற்கமாட்டேன். எம்.பி.,  எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை''’என்று பேசுகிறார். இந்த அறிவிப்புகள், ‘அரசியலை வைத்து வேண்டிய அளவுக்கு சம்பாதித்தாகிவிட்டது; இனி பதவிகள் தேவையில்லை’ என்ற மனநிலையின் வெளிப்பாடே என, தி.மு.க. ஆதரவு நிலையில் உறுதியாக உள்ள காங்கிரஸ் வட்டாரம் திரியைக் கொளுத்திப் போடுகிறது.

ஒரு இந்தியர் வெளிநாட்டில் சுரங்கத்தொழில் நடத்த விரும்பினால், இந்திய அரசு நேரடியாக அனுமதி வழங்காவிட்டாலும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணம், இயந்திரங்கள், முதலீடு அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது. கோடிக்கணக்கான முதலீடு, கனரக டிரில்லிங் மற்றும் டிரென்ச் கட்டிங் மெஷின்கள், தொழில்நுட்ப மனிதவளம் -இவை அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் மற்றும் சுங்கத்துறை ஆகியவற்றின் கண்காணிப்பும் அனுமதியும்  இல்லாமல், யாருக்கும் தெரியாமல் எல்லை தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வி இங்கே தவிர்க்க முடியாததாகிறது. 

இவை வெறும் குற்றச்சாட்டுகளா?… இல்லையெனில் அவிழக் காத்திருக்கும் முடிச்சுகளா?

nkn210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe