மீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பி.பி.சி. ஆசியன் நெட் வொர்க்குக்கு அளித்த பேட்டிக்கு எதிர்வினையாக தேசிய அளவில் இந்துத்துவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை குதறத் தொடங்கியுள்ளனர். அர்னாப் கோஸ்வாமி, ஏ.ஆர். ரஹ்மானை, "சந்தர்ப்பவாதி, இரட்டை வேடம் போடுபவர்' என விமர்சித்துள்ளார். சமூக ஊடகங்களில் மதவெறிக்கூட்டம் ஏ.ஆர். ரஹ்மானை குறிவைத்து அவரை அவமானப் படுத்திவருகின்றனர்.

Advertisment

என்ன நடந்தது?

ஏ.ஆர். ரஹ்மான் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியின்போது, தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புக் குறைந்ததற்கு மதரீதியான பாகுபாடும், ஆட்சி மாற்றமும் காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருப்பதும் தனக்கான வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். அதேபோல அந்த நேர்காணலில் விக்கிகௌசல் நடித்த "சவ்வா' என்ற படத்தைப் பற்றிப் பேசும் போது, சம்பாஜி மகாராஜ் பற்றிய சித்தரிப்பு நேர்மறை யாக வந்திருக்கிறதென்றும், கதை துணிச்சலாக சித்தரிக்கப்பட்டிருக்கிறதென்றும் பாராட்டிய அவர், சில வகுப்புவாத காட்சிகள் வந்திருப்பதாக தனது எண்ணங்களை வெளியிட்டார்.

Advertisment

இந்த நேர்காணல் வைரலான நிலையில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் அந்த நேர்காணலில் வெளிப் படுத்திய கருத்துகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மானை குதறத் தொடங்கினர். குறிப்பாக அர்னாப் கோஸ்வாமி, தனது சேனலில் வழக்கமான பாணியில் மிகவும் தரம்தாழ்ந்து விமர்சித்தார். ரஹ்மானை சந்தர்ப்பவாதி யென்றும், இரட்டை வேடம் போடுபவரென்றும், "சவ்வா' படத்துக்கு கை நீட்டி பணம் வாங்கி இசையமைத்துவிட்டு, அதனை பிரிவினை வாதப் படமென எப் படி விமர்சிக்கலாம். இதனால் இந்தியாவின் பிம்பம் என்ன ஆகும் என்பது உள்பட கடு மையான விமர்சனங் களை முன்வைத்தார்.

எம்.பி.யும் நடி கையுமான கங்கணா ரணாவத்தும் இத்த கைய சந்தர்ப்பத்துக் காகவே காத்திருந்தது போல் களத்தில் குதித் தார். இந்தியாவில் அவ சரநிலைப் பிரகடனத்தை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்த படத்தில் நடித்த கங்கணா ரணாவத், அப் படத்துக்கு இசையமைக்க அப்போது ரஹ்மானை அணுகியிருந்தார். ஆனால் அப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுத்திருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு, “"எமர்ஜென்சி படத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் கூட பாராட்டி யிருந்தனர். நீங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர் கள். நான் உங்களுக்காக பரிதாபப்படுகிறேன். உங்களைவிட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட மனிதரை நான் இதுவரை சந்தித்த தில்லை''’என்று இப்போது பழி தீர்த்திருக்கிறார்.

Advertisment

இவர்களே இப்படியெனில் சமூக ஊடகங் களில் களமாடும் இந்துத்துவப் படை இன்னும் மோசமான வசைகளோடு ஏ.ஆர்.ரஹ்மானை அவமானப்படுத்தத் தொடங்கின. இந்நிலையில் தான் சிலர் ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

மலையாள இசையமைப்பாளர் கைலாஸ் மேனன் வெளியிட்டுள்ள பதிவில்,“"ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவருடன் நீங்கள் கருத்து மாறுபடலாம். ஆனால் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையை மறுக்கமுடியாது. உலகமே மதிக்கும் ஒரு கலைஞரை அவமானம் என்று அழைப்பதும், அவரது படைப்புகளை கேலிசெய்வதும் ஆரோக்கியமான விமர்சனம் அல்ல. இது வெறுப்புப் பேச்சு. தமிழ்க் கலாச்சாரம், உலக இசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒருசில கருத்துக்களுக்காக குறைத்து மதிப்பிடக்கூடாது, ஒருவரது கருத்தை மவுன மாக்குவதற்காக அவருடைய நேர்மையைத் தாக்குவது அல்லது அவரை பொது வெளியில் அவமானப்படுத்து வது முற்றிலும் நியாயமற் றது''’ என அவருக்கு ஆதர வாகப் குரல்கொடுத்தார்.

அதேபோல தி.மு.க. எம்.பி.யும் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி யும்,  "நான் ஏ.ஆர். ரஹ்மா னுடன் நிற்கிறேன். மதம், மொழி, அடையாளம் ஆகியவற்றைத் தாண்டி அவரது கலை உயர்ந்து நிற்கிறது. அத்தகைய ஒரு கலைஞரை திட்டமிட்டுத் தாக்குவது மிகவும் கவலையளிக்கிறது. இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆழமான மௌனம் இன்னும் அதிகம் கவலைதருகிறது. ரஹ்மான் இந்திய இசையை உலக அளவில் கொண்டுசென்ற வர். இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளின் முதன்மைத் தூதர். வெறுப்போ, பாரபட்சமோ அவருக்குக் காட்டப்படக்கூடாது. அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவேண்டும்'' என்றுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற எம்.பி.யான மஹூவா மொய்த்ராவும், “"இந்தியா உங்கள் தாய். நீங்கள் மௌனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. துணிச்சலாக இருங்கள்''” என ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

முதல் ஆதரவுக்குரல் தமிழக சினிமா துறையில் எழுந்திருக்கவேண்டும். அப்படி நடக்காமல், இப்படி நாடெங்கும் ஆதரவுக் குரல்கள் எழுந்த பிறகே, தமிழக சினிமா துறையிலிருந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்துள்ளன.

விஷயங்கள் நினைத்ததற்கு மாறாகப் போன நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது நேர்காணல் குறித்து, “"சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். என்னுடைய குறிக்கோள், இசைவழியாக கலாச்சாரத்தை உயர்த்துவதும் கொண் டாடுவதுமே. பிறர் வருந்தவேண்டுமென நினைப்பவன் அல்ல நான். படைப்புச் சுதந் திரத்துக்கான வாய்ப்பு களை நாடு வழங்கி யுள்ளது''’என விளக்க மளித்துள்ளார்.