தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த காலங்களில் கொங்கு மண்டலங்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, திருப்பூர், கோவை, பொள்ளாச்சியில் இந்தித் திணிப்புக்கு எதிரான தீ பற்றி எரிந்தது. இதில் பொள்ளாச்சியில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்காக ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் மக்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பராசக்தி திரைப்படத்தில், "பொள்ளாச்சியிலேயே அடிச்சு அங்கேயே புதைச்சிரலாம்' என்கின்றது போலீஸ் அதிகாரி ரவிமோகன் பேசும் வசனம்.
"1965, பிப்ரவரி 12ஆம் தேதி, பொள்ளாச்சி வரலாற்றில் மறக்கவியலாத நாள்! அன்றைய நாளில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத் திற்காக தமிழ்நாடு முழுவதும் முழு கடை யடைப்பிற்கான அழைப்பை விடுத்தது தமிழக மாணவர் போராட்ட கவுன்சில். இத்தகைய சூழலில், மதுரையில் போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நகரில் ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் திடலை அடைந்த பொள்ளாச்சி மாணவர்கள், பொதுக்கூட்டம் நடத்த ஆயத்தமாகினர். ஆனால் போலீஸ் டி.எஸ்.பி. சாமிநாதன் இதற்கு மறுப்பு தெரிவிக்க, தன்னிச்சையாக வீறு கொண்டு எழுந்தார்கள். இதில் ஒரு மாணவர் அங்குள்ள தபால் நிலை யத்தில் எழுதப்பட்டிருந்த இந்தியை அழிக்க முற்பட, காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுதான் பொள்ளாச்சி படுகொலைகளின் துவக்கம்' என்கிறது கொங்கு வரலாறு மற்றும் தோழர் இளங்கோவன் உள்ளிட்டோரின் ஆவணப்படங்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/originalparasakthi1-2026-01-14-17-14-40.jpg)
அன்றைய நாளில், அந்த தபால் அலுவலகத்தில் க்ளாஸ்போர் பதவி யிலிருந்த பொன்னுச்சாமியோ (தற் பொழுது உயிருடன் இல்லை. ஆவணத் தில் பதிவு செய்த வீடியோவின்படி), "1965-ல் ரெண்டு போஸ்ட் ஆபீஸ் இருந்துச்சு. ஒண்ணு பாலக்காடு ரோட்டில் இருந்துச்சு. இப்ப இருக்கிற பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ராமானுஜர் ஹோட் டல் இருக்கிற இடத்துல இன்னொரு போஸ்ட் ஆபீஸ் இருந்துச்சு. அதுதான் ஹெட் போஸ்ட் ஆபீஸ் டெலிவரி சென்டர். இந்த போஸ்ட் ஆபீஸ்ல போஸ்ட் மாஸ்டர் போய்ட்டார்னா அந்த வழியில் வேற எதுவுமே இருக்காது. 1965-ல இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்குது. நான் அந்த போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறேன். அப்ப என்.ஜி.எம். காலேஜ்ல படிக்கிற ஸ்டூடண்ட்தான் வந்தாங்க. போஸ்ட் மாஸ்டர பார்த்து, 'இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதனால நாங்க இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம்'னு சொன்னாங்க. போஸ்ட் மாஸ்டரும் சரின்னு சொன்னாங்க. போஸ்ட் ஆபீஸ் பக்கத்துல பவளமல்லி மரம் இருந்துச்சு. அதுல ஏறி இந்தி எழுத்துக்களை மட்டும் அழிச்சிட்டு அவங்க போய்ட்டாங்க!
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு குரூப்பா நிறைய ஆளுக வந்தாங்க. அதுல சின்னச்சின்ன பிள்ளைகள் நிறைய பேர் வந்தாங்க. அங்கே வந்து சத்தம் போட ஆரம்பிச்சாங்க.. நாங்க எதுவும் பேசாம இருந்தோம், கொஞ்ச நேரத் துல கல்லெல்லாம் எறியஆரம்பிச்சிட்டாங்க. போஸ்ட் ஆபீஸ் மேல இருந்த கண்ணாடியெல் லாம் அடிச்சு உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க. போஸ்ட் மாஸ்டர் எங்கள ஆபீஸ குளோஸ் பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனா அது வீடு மாதிரி இருக்கும் போஸ்ட் ஆபீஸ். உடனே எல்லாத்தையும் மூட முடியாது. அங்க முன்னாடி இருக்க வராண்டாவ மட்டும் அடைச்சிட்டு எல்லாரும் உள்ளே இருந்துட் டோம். அப்ப எங்களோட ரெண்டு போலீஸ் எஸ்கார்டு இருந்தாங்க, அவங்களால எதுவும் பண்ண முடியல. அவங்களிடம் வெறும் கம்பு மட்டும்தான் இருந்துச்சு. வெளியில நிறைய பேர் இருந்தாங்க. அப்புறம் போலீஸ் அவங்க ஆபீஸருக்கு போன் பண்ணி, இங்க ரொம்ப கலாட்டாவா, கலவரமா இருக்குன்னு சொன்னாங்க, எல்லா போஸ்ட் ஆபீஸ்லயும் பிரச்சனை இருக்குன்னு அவங்க சொன்னாங்க. எங்க போஸ்ட் ஆபீஸ்ல லெட்டர் எழுதுவ தற்கு சின்னச்சின்ன பெஞ்சா வச்சி இருப் போம். அந்த பெஞ்சில் எல்லாம் பெட்ரோல் ஊத்தினாங்க. போஸ்ட் ஆபீஸ் டெலிபோன் எக்சேஞ்ச் பக்கத்துல இருக்கிற பெஞ்சை எரிக்க விடாமல் ஆளுங்க தடுத்துட்டாங்க.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/originalparasakthi3-2026-01-14-17-14-52.jpg)
கொஞ்ச நேரம் கழிச்சு வெளியில சத்தம் கேட்டுச்சு. என்ன சத்தம்னு நாங்க கேட்டப்ப ஃபயரிங்னு சொன்னாங்க. அவ்வளவு தான் எனக்கு தெரியும். ஸ்கூலுக்கு எல்லாம் தீ வச்சிட்டேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. எங்க யாரையும் வெளியே விடல. பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு, யாரும் வர வேணாம், வீட்லயே இருங்கன்னு போஸ்ட்மேனுக்கெல் லாம் சொல்லிட்டாங்க. ராணுவ ஆளுங்க எல்லாம் வந்தாங்க. 50 பேருக்கு மேல் இருக்கும். போஸ்ட் ஆபீசுக்கு ஒரு மேஜர் மட்டும் வந்து பார்த்துட்டு போனாரு. அவரு போனதுக்கப்புறம் தான் கோயம்புத்தூர் ரோட்டில் இருக்க போஸ்ட் ஆபீஸ்ல ஃபயரிங் ஆயிருக்கு கோயம் புத்தூர் ரோட்டில் தான் ஃபயரிங் ஆனது. 30 பேருக்கு மேல இறந்திருப்பார்கள்'' என்கிறது அவரின் கூற்று.
"என்னுடைய தாத்தா ரங்கசாமி அந்தப் போராட் டத்தில் கலந்துகொண்ட வர். அப்பொழுது இந்தி கத்துக் கொடுப்பதற்கு தனியாக ஆசிரியர் போட்டாங்களாம். அதை எதிர்க்கறதுக்கு ஒரு குழுவே உண்டாம். இந்தி கத்துக்கொடுக்க வந்த ஆசிரியர் வகுப்புல நுழைவதற்கு முன்னாடியே எதிர்ப்பு தெரிவிச்சதை பார்த்துட்டு அவரே கிளம்பிப் போய்விடுவாராம். எங்க வீடு இருக்கிற பகுதியில் ஸ்கூலுக்கு தீ வைக்க வந்தாங்களாம். அங்க யிருந்த பெட்ரோல் பங்க்லருந்து பெட்ரோலை வாங்கிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு தீ வைக்க வந்திருக்காங்க. இதற்கும் இந்தி எதிர்ப்புக்கும் என்னப்பா சம்பந்தம்னு கேட்டு பள்ளிக் கூடத்திற்கு தீ வைப்பதை தடுத்திருக்காரு. ஆனா பல இடத்துல தீ வச்சாங்க, அதுபோக அப்ப வெயில் காலம். பல கடையில இருந்த ஓலைக்குடிசைய எடுத்து ரோட்ல போட்டாங்க. அதுல தீய வச்சாங்க, அதனால ராணுவம் உள்ள வர முடியல'' என்றார், அன்றைய நாட்களின் சாட்சியமான ரங்கசாமியின் பேரன் இசைமணி.
இது இப்படியிருக்க, முதன்முதலில் இந்தி எழுத்துக்களை அழிக்கப் போராடியவரின் பெயர் பாலன். அவரது காலில் தான் போலீஸ் முதலில் சுட்டது. மீண்டும் முன்னேறிச் செல்கையில் போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்தார். அதன்பின் பொள்ளாச்சியெங்கும் தீ பரவ, உள்ளூர் போலீஸூடன் ராணுவமும் சேர்ந்துகொள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் கொத்துக்கொத்தாக சுடப்பட்டனர் போராட்ட வாதிகள். கொல்லப்பட்ட தில் 4 வயது பெண் குழந் தையும் அடக்கம் என்கின்றது கொங்கு வரலாறு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/originalparasakthi2-2026-01-14-17-15-06.jpg)
பொள்ளாச்சி படுகொலைகள் குறித்து ஆவணமாகப் பதிவு செய்துவரும் எழுத்தாளர் வாமனனோ, "போராட்டம் நடைபெற்ற அன்றைய நாட்களில் நான் இங்கு என்.ஜி.எம். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அங்குள்ள மாணவர் மன்றத்தின் செயலாளராக இருந்தேன். நான், முருகேசன், ரவி மற்றும் சின்னப்பன் தலைமையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். முதலில், பரம்பிக்குளம் அணைக்கட்டுப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளைக் கைப்பற்றி, அதன் மூலம் ரயில் இருப்புப் பாதைகளைத் தகர்க்கத் திட்டமிட்டிருந்தோம். இது தவிர்க்கப்பட்டது. பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தின்போது போஸ்ட் ஆபீஸிலுள்ள எழுத்துக்களை பாலன் அழிக்க முயன்றபோது 303 ரகத் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதன்பின் மதுக்கரையிலிருந்த 17வது ரெஜிமெண்டை துணைக்கு அழைத்தது உள்ளூர் போலீஸ். பின்னர் நடந்தது ரணகளம். தேடித்தேடி வேட்டையாடியது ராணுவம். மயிலஞ்சந்தை அருகே ராணுவ வாகனம் வந்தபோது ராணுவத்தை நோக்கி மக்கள் கற்களை வீச, கண்மூடித்தனமாகச் சுட்டது ராணுவம். 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானது. செல்லம் தியேட்டர் வழியாக சிதறியோடிய மக்கள் கூட்டம் பால கோபாலபுரம் பகுதியிலிருந்த இந்தி பிரச்சார சபாவிற்கு தீ வைத்தது. மயிலஞ்சந்தை, கச்சேரி வீதி, பெரிய கடை வீதி, வெங்கட் ரமணர் வீதிகளில் சிதறிக்கிடந்த உடல்கள் ஏராளம். அன்றைய நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50 முதல் 60 வரை இருக்கும் என்கிறது உளவுப் பிரிவு. இந்தி திணிப்புப் போராட்டத்தினால் பொள் ளாச்சியில் படுகொலையானவர்களின் தியாகம் குறித்து நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. தி.மு.க. அரசு தயவுகூர்ந்து பரிசீ-க்க வேண்டும்'' என்றார்.
இந்தி எதிர்ப்புப் போரில் பொள்ளாச்சி களப்போராளிகள் என்றென்றும் நினைவுகூரப் படுவார்கள்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/originalparasakthi-2026-01-14-17-14-31.jpg)