மதுரை மாவட்டத்தின் முக்கிய தொகுதியான மேலூரில் அழகர்கோவிலும், முருகப்பெருமானின் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலை எனும் சோலைமலை முருகன் ஆலயமும் உள்ளன. மாணிக்கவாசகர் பிறந்த அழகிய திருவாதவூர், குடவரைக் கோவில்களைக் கொண்ட அரிட்டாபட்டியும் மேலூர் தொகுதிக்குள்தான் வருகிறது.
இந்தத் தொகுதியில் முத்தரையர் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்த இடத்தில், முக்குலத்தோரும் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார்கள் உள்ளனர். காங்கிரஸின் பிரபல அமைச்சரான கக்கன் மேலூரில் ஒருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
1971 முதல் நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், த.மா.கா. ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக 4 முறை அ.தி.மு.க.தான் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மரணமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சாமி 3 முறை தொடர்ச்சியாக இங்கு வெற்றிபெற்றவர்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெரிய

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெரியபுள்ளான் என்ற செல்வம் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றை கடந்த 15 வருடங்களாக இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்றவில்லை.
2014-ஆம் ஆண்டு அரசுக்கு வந்த பல முறைகேடு புகார்களால், தமிழக அரசின் கிரானைட் குவாரி உள்ளிட்ட 120 கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு 10 வருடங்களாகிறது. இதனை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பை ஈடுசெய்ய கிரானைட் தொழிலை வரைமுறைப்படுத்தி மீண்டும் தொழில்செய்ய அனுமதிக்கவேண்டும் என்கிறார்கள். மதுரையிலிருந்து மேலூர் வழியாக காரைக்குடி அல்லது மேலூர் வழியாக திருச்சிக்கு ரயில் பாதை அமைக்கவேண்டும் என்பது நீண்டகால, கோரிக்கையாக உள்ளது. படித்த இளைஞர்கள் அதிகமிருப்பதால் பொருளாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்த இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலை, கிரானைட் தொழிற்சாலைகளைத் திறக்கவேண்டும். கொட்டாம்பட்டி பகுதி வானம்பார்த்த பூமியாக உள்ள நிலையில், கொட்டாம்பட்டி மற்றும் 80 கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு பாசன வசதியை விரிவுபடுத்தக் கேட்டு தொடர்ச்சி யாகப் போராடிவருகின்றனர். மேலூர் அரசு தலைமை மருத்துவமனையை தரமுயர்த்தி நவீனப்படுத்தி அனைத்து சிகிச்சைகளை
யும் மேலூர் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு. விவசாயத்திற்குத் தேவையான பாசன நீர் வழித்தடங்களை சீரமைக்கவேண்டும். கிராமங்களில் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் என பல கோரிக்கைகள் உள்ளன.
சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளானுக்கே தற்போது மீண்டும் அ.தி.மு.க. வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவர் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர். இருந் தாலும் அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. வான தமிழரசனும் சீட்டுகேட்டு மோதுகிறார். இவர் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். அடுத்து சீட் ரேஸில் உள்ளவர்கள், மேலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன். இராஜேந்திரன், கிரானைட் பாலகிருஷ்ணன், துரைபாண்டி திவாகரன் ஆகியோர். மற்றவர்கள் சீட் கேட்டு துண்டைப் போட்டாலும் பெரியபுள்ளானுக்கே செல்வாக்கு உள்ளது என்று நம்பப்படுகிறது. வேறு நபருக்குக் கொடுத்தால் முத்தரையர்கள் வாக்கு விழாது என தொகுதியில் அபிப்ராயம் நிலவுகிறது. அ.ம.மு.க.வும் இப்போது தே.ஜ. கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க.வினர் தெம்பாக இருக்கிறார்கள்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை மேலூரில் வெற்றிபெறுவது சவாலான விஷயம்தான். இங்கு காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்குகூட தி.மு.க.வுக்கு இல்லை. முத்தரையரில் செல்வாக்குள்ள ஒருவர்கூட தி.மு.க.வில் இல்லை. அதை மீறி செல்வாக்கு பெறவும் விடமாட்டார்கள் தி.மு.க.வின் பெரிய தலைகள் என்கிறார்கள் முத்ரையர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள். எப்போதுமே முத்தரையர் சமூகத்தில் அ.தி.மு.க.வுக்கு அதிகமான செல்வாக்கு உள்ளது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டும், தி.மு.க. தலைமை முத்தரையருக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் அந்த சமூகத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை உருவாக்காமல் இருப்பது அந்த கட்சிக்குப் பின்னடைவே.
தற்போதுகூட தி.மு.க.வில் சீட் ரேஸில் இருப்பவர்கள் லிஸ்டில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இராஜராஜன், கவுன்சிலர் ரிஷி, செல்வராஜ் ஆகிய மூன்றுபேருமே தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை தவிர மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாஸினும் ரேஸில் இருக்கிறார். முத்தரையரில் ஒருவரைக்கூட தி.மு.க.வில் வளர்க்கவில்லை, உருவாக்கவில்லை என்பதே நிஜம். தி.மு.க.வைப் பொறுத்தவரை மதுரையின் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளைக்கூட வெற்றிபெற்றுவிடும். ஆனால் ஒருபோதும் மேலூரில் வெற்றிபெறமுடியாது என்பதுதான் கள நிலவரம் என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளே.
அதேபோன்று தி.மு.க. நிற்காமல் காங்கிரஸ் நின்றால், மேலூர் காங்கிரஸில் செல்வாக்கான குடும்பமான இராஜமாணிக்கம் குடும்பத்திலிருந்து ரவிச்சந்திரன் சீட்டு கேட்டுள்ளார். மற்றபடி விஜய் கட்சியான த.வெ.க., நா.த.க. போன்றவை பெயருக்கு வேண்டுமென்றால் நின்றுகொள்ளலாம். போட்டி என்பது தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மட்டும்தான். அதிலும் அ.தி.மு.க. கொடிதான் பறக்கிறது மேலூரில்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us