க்கள் போராட்டத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது ஈரான். தற்போதுவரை ஈரான் போராட்டத்தில் 700-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment


ஈரானில் 1979 வரை ஷா என்ற மன்னர் பரம்பரையே ஆட்சியிலிருந்தது. ஆனால் அப்போ தைய காலகட்டத்தில் மதரீதியான அணிதிரட் டல்களின் மூலம் அன்றைக்கு ஆட்சியிலிருந்த அரசரின் மகன் ரெசா பஹ்லவி நாடு கடத்தப் பட்டார். அதன்பிறகே ஈரான் இஸ்லாமியக் குடியரசு அமைந்தது. குடியரசு என்றழைக்கப்பட் டாலும் அது பெயரளவிலான குடியரசுதான். அலி கொமேனி நாட்டின் அதிபராகவும், மசூத் பெசெஷ்கியான் குடியரசுத் தலைவராகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவருமே நாட்டின் முதன்மையான அதிகாரம் படைத்தவர்கள்.

Advertisment

ஈரான், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்துவருவதால் பல்லாண்டுக் காலமாக அமெரிக்கா ஈரான்மீது பொருளாதாரத் தடை விதித்துவந்திருக்கிறது. இதனால் ஈரானின் பொருளாதாரம் சிறப்பாக இல்லை. சமீபத்தில் நாட்டின் பணவீக்கம் 40-லிருந்து 50% ஆக அதிகரித்தது. இதனால் நாட்டின் பணமதிப்பு மேலும் சரிந்து 1 அமெரிக்க டாலர் வாங்க 42,000 ஈரான் ரியால் செலவிடவேண்டிய நிலை உருவானது. இதையடுத்து ஈரான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா  தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஈரான் முன்னாள் நிதியமைச்சர் அப்துல் நாசல் ஹெம்மாட்டி மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் சமீபத்திய போராட்டத்தின் மையப்புள்ளி இதுதான். நாட்டின் பொருளாதாரம் தொடர் சரிவிலிருந்ததால் அதற்கெதிராக டிசம்பர் 28-ஆம் தேதி மக்களும் வணிகர்களும் போராட் டங்களைத் தொடங்கினர். இதற்கிடையில் வெனிசுலா அதிபரை அமெரிக்கா கடத்தியதைக் கண்ட போராட்டக்காரர்கள், நாட்டின் அதிபருக் கெதிரான போராட்டத்துக்கு அமெரிக்கா கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அரசியல் போராட்டத்திலும் இறங்கினார்கள். தாளமுடியாத பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு, ஈரானுக்கு வெளியே இருக்கும் ஷா அரச குடும்பத் தின் வாரிசான ரெசா பஹ்லவியும் நம்பிக்கையளிக்க, நாட்டின் 31 மாகாணங்களிலும், 180 நகரங்களிலும் உக்கிரமான போராட்டம் வெடித்தது.

Advertisment

வேலை நிறுத்தம், சாலை மறியலோடு, கொமேனி ஒழிக என்ற முழக்கங்களும் காதைப் பிளந்தன. முதலில் போராட்டக்காரர்களைக் கண்டு அஞ்சிய ராணுவமும், போலீஸும் மேலிருந்து வந்த நெருக்கடியால் போராட்டக்காரர்களை முரட்டுத் தனமாகத் தாக்கத் தொடங்கினர். பதிலுக்கு சில இடங்களில் போராட்டக்காரர்களும் பாதுகாப்பு வீரர்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

iran1

நிலவரம் சிக்கலாகி வருவதைப் பார்த்த கொமேனி, துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டார். போராட்டக்காரர்கள் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாமலிருக்க இணையம், சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்களுக்கு உதவ ஈரான் நாட்டில் மட்டும் எக்ஸ் தள அதிபர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய வசதி இலவசமாக ஆக்டிவேட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அரசு அதனையும் முடக்கியுள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி முதல், போராட்டக் காரர்கள் மீது, பெல்லட் போன்ற காயங்களை ஏற்படுத்தும் குண்டுகளைப் பயன்படுத்தாமல், கலாஷ்நிக்காவ் போன்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது ராணுவம். குர்திஷ் தீவிரவாதிகள் போராட்டக்காரர்கள் போர்வையில் சில இடங்களில் புகுந்துள்ளதாகக் கூறி, ஈரான் அரசு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துகிறது. இதனால் நாடெங்கும் உயிர்ப்பலிகள் அதிகரிக்கத் தொடங்கின. தற்போதுவரை 700 பேர் பலியாகியுள்ளனர். 11,000-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், இறந்தவர் களின் உண்மையான எண்ணிக்கை 2,000 வரை இருக்குமென ஒரு செய்தி தெரிவிக்கிறது. அரசுத் தரப்பிலும் 100 பாதுகாப்பு வீரர்கள் இறந்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஈரான் போராட்டக்காரர் ஒருவர், "நான் என் கண்ணா லேயே பார்த்தேன். அவர்கள் போராட்டக் காரர்களை நோக்கி நேரடியாகச் சுட்டார்கள், மக்கள் நின்ற இடத்திலேயே சரிந்துவிழுந்தனர். நாங்கள் ஒரு கொடூரமான ஆட்சிக்கு எதிராக வெறும் கைகளுடன் போராடுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபரான கொமேனி, "போராட் டத்தில் ஈடுபடுபவர்கள் கடவுளின் எதிரிகளாகக் கருதப்படுவார்கள், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்''’என்று எச்சரித்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான்மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்துவருகிறார். தாக்கினால் இஸ்ரேல், அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதே தாக்குதல் நடத்துவோம் என ஈரான் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

ஈரானில் பெண்கள் முகம், கூந்தலை மறைப்பது கட்டமாயமாகும். அதை மீறியதாக மாசா அமினி என்ற பெண் கைதுசெய்யப்பட்டு போலீஸ் நடவடிக்கையில் உயிரிழந்தார். இதற்கெதிராக 2022-ல் மாதக்கணக்கில்             தொடர்ந்த போராட்டமே சமீபத்திய ஈரானில் நடந்த பெரிய போராட் டம். தற்போதைய போராட்டம் அதை யும்விட பெரிய போராட்டமாக உரு வெடுத்துள்ளது. 

வெல்லப்போவது ஈரான் மக்களா, அதன் அதிபர் கொமேனியா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.