41 பேரை பலிகொண்ட கரூர் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன்பிறகு ஒரு மாத காலத்துக்கு இருக்குமிடம் தெரியாமல் இருந்த த.வெ.க.வினர், தற்போது மீண்டும் அரசியல் களமிறங்கிய நிலையில், புதுக்கோட்டையில் அத்துமீறிய அவர்களின் செயல் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/tvk1-2025-11-04-11-11-12.jpg)
கடந்த நவம்பர் 1, சனிக்கிழமையன்று காலையில், த.வெ.க. புதுக்கோட்டை மைய மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ் சைக்கிளில் வர, அவரைத் தொடர்ந்து சாலையை மறித்து 50 பைக்குகள், 2 கார்களில் புதுக்கோட்டை நகரில் திருவப்பூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜல்லிக்கட்டு காளை சிலை, பேருந்து நிலையம் வழியாக மக்கள் கூட்டம் மிகுந்த பிரதான சாலைகளில் ரோடு ஷோ நடத்தி, சாலையோரம் பூ, பழக்கடைகள் வைத்துள்ள 20 பேருக்கு. நடிகர் விஜய், முகமது பர்வேஸ் படம் போட்ட குடைகளை வழங்கி, படங்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
த.வெ.க. நிர்வாகிகளின் ரோடு ஷோவால் அதிக போக்குவரத்துள்ள கீழராஜவீதியில் பொதுமக்கள் பாதிக்கப்படு வதைப் பார்த்த பிருந்தாவனத்தில் பணியிலிருந்த போலீசார் அவர்களை நிறுத்தச் சொல்ல, அதைக்கண்டு கொள்ளாமல் சென்றனர். இதையடுத்து, கணேஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் நளினி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து, த.வெ.க. அணிவகுப்பு வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்ததும் மா.செ. பர்வேஸ் அங்கிருந்து கழன்றுகொண்டார்.
வாகனங்களை நிறுத்திய ஆய்வாளர் நளினி, "நீங்க அனுமதியின்றி ரோடு ஷோ நடத்துவதால போக்குவரத்து பாதிக்கப்படுது'' என்று சொல்ல, த.வெ.க நிர்வாகி சரவணன் அவரோடு வாக்குவாதம் செய்தார். அப்போது ஒரு போலீஸ்காரர், போக்குவரத்துக்கு இடை யூறு செய்த காரை பறிமுதல் செய்ய முயலவும், "பொறுங்க மேடம், டி.எஸ்.பி.கிட்ட பேசிட் டோம். அவர் வருவார்'' எனக் கூறிய சரவணன், தனது காரை பறிமுதல் செய்ய விடவில்லை.
அப்போது அங்குவந்த டி.எஸ்.பி. அப்துல் ரஹ்மானிடம், ஆய்வாளர் நடந்ததைக்கூற, அவரது பேச்சை கண்டுகொள்ளாமல், த.வெ.க. சரவணன் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு, அவர்களின் வாகனங்களை வழி யனுப்பிவைத்துள்ளார் டி.எஸ்.பி. அங்கிருந்த போலீசாரோ, இப்படி வழியனுப்பிவைக்கவா கஷ்டப்பட்டு இவர்களை மடக்கிப்பிடித்தோம் என்று நொந்துகொண்டனர். இதில், டி.எஸ்.பி. அப்துல்ரஹ்மான், த.வெ.க. மா.செ. முகமது பர்வேஸின் அப்பா ஜாபர் அலியின் செல்லப் பிள்ளை என்பதால்தான் விசுவாசமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள். மேலும், இந்த மாவட்டத்தில் எதாவது பெரிய சம்பவம் நடந்து விட்டால், மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, உடல்நிலை சரியில்லையெனக் கூறி விடுப்பெடுப்பாராம். சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி. அபிஷேக் குப்தா, "சம்பவ இடங்களுக்கு போகமாட்டீங் களா?' எனக் கடுமையாக டோஸ்விட்டார் என்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து நகர காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் மைய மா.செ. பர்வேஸ் உட் பட 50 பேர் மீது, இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கும் அபராதம் விதிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
நகரிலுள்ள மற்ற கட்சிக்காரர்களோ, "குடை கொடுப்பதை யாரும் குறை சொல்லவில்லை. அதை சாக் காக வைத்துக்கொண்டு ஊர் வலமாக போக்குவரத்துக்கு இடையூறு செய்தபடி செல்ல லாமா? ஏற்கெனவே கரூரில் கூட்ட நெரிசல் காரணமாக உயிர்ப்பலி ஏற்படுத்தியவர்கள், திரும்பத்திரும்ப இதேபோல் செய்யலாமா? கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பவரே சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். இவரைப் போன்றவர்களுக்கு என்றைக் குத்தான் த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் கற்றுத்தரப் போகிறாரோ?'' என்கின்றனர்.
த.வெ.க. மைய மா.செ. முகமது பர்வேஸிடம் கேட்ட போது, "நான் சைக்கிளில் வந்தேன், மற்றவர்கள் பைக்கு களில் வந்தார்கள். போக்கு வரத்து ஒன்றும் முடங்க வில்லை. பொதுமக்களுக்கு இடையூறும் இல்லை'' என்றார் கூலாக.
____________
இறுதிச்சுற்று:
மாணவி பலாத்காரம்! கோவை பகீர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/04/tvk-box-2025-11-04-11-11-24.jpg)
"விமான நிலையத்தின் பின்புறமுள்ள பகுதியில் என்னை அடித்து உதைத்து கத்தியைக் காட்டி மூன்று பேர் என் காதலியைத் தூக்கிச்சென்றுவிட்டனர்'' என வினீத் என்பவர் இரவு 11 மணிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தர, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான மாநகர போலீஸ்.
வினீத்திடம் நடந்த சம்பவம் குறித்த குறிப்புகளை வாங்கிக் கொண்டு, காவல்துறை இருட்டில் அந்த பெண்ணைத் தேடியலைந்திருக்கின்றது. அதிகாலை 3.30 மணிக்கு எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி அருகிலுள்ள ரயில்வே இருப்புப் பாதையில் மீட்கப்பட்டார் அந்த பெண். "மதுரையைச் சேர்ந்த அந்தப்பெண் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்துவருகின்றார். அவரும், காயம்பட்ட வினீத்தும் காதலர்கள். இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் விமான நிலையம் பின்புறமுள்ள காலியிடத்திற்கு காரில் சென்ற நிலையில், கார் கண்ணாடியை மூடிக்கொண்டு நெருக்கமாக இருந்திருக்கின்றனர்.
அப்பொழுது அந்தப்பக்கம் வந்த மூவர், காரின் கண்ணாடியை உடைத்து அந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின், அந்த பெண்ணை ரயில்வே இருப்புப்பாதை அருகே விட்டிருக்கின்றனர். பாலியல் பலாத்காரம் செய்த மூவரில் இருவருக்கு 35 வயதும், ஒருவனுக்கு 25 வயதும் எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் மூவரும் கோவில்பாளையம் போலீஸ் எல்கைக்குட்பட்ட பகுதியில் டி.வி.எஸ். சூப்பர் எக்ஸெல் வண்டியை திருடிவந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்றார் உளவு அதிகாரி ஒருவர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து 4-ந் தேதி தமிழகமெங்கும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/tvk-2025-11-04-11-10-57.jpg)