மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயி லாடுதுறை அருகேயுள்ள அடியாமங்கலம் கிராமத் தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைர முத்து, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு மயிலாடுதுறையில் டூவீலர் மெக்கானிக்காக இருந்துவந்தார். இவர் அதே ஊரை சேர்ந்த (மற்றொரு) குமார் என்பவரின் மகள் மாலினி என்ற இளம் பெண்ணை பத்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். மாலினி, சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்துவருகிறார். மாலினியும் வைரமுத்தும் ஒரே சமூகம் என்றாலும், மாலினியின் தாயார் வேறு சமூகம் என்பதால் இரு குடும்பத்தினருக்குமிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கிராமத்திலேயே பேசிமுடித்துள்ளனர். ஒருகட்டத்தில், மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்துவின் டூவீலர் மெக்கானிக் கடைக்கே சென்று, "உன்னை அப்பவே தட்டித் தூக்கியிருக்கணும், இனி விடமாட்டேன்'' எனக் கடுமையாக மிரட்டிவிட்டு வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி சென்னையிலிருந்து ஊருக்கு வந்த மாலினியிடம் அவரது அம்மா, "உனக்கு திருமண ஏற்பாடு செய்கிறோம், இனி மேல் எங்கேயும் போக வேண் டாம்' என்று கூறியுள்ளார். கோபமான மாலினி மறுத்துப் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த மாலினி யின் தாயாரும், சகோதரர்கள் குகன், குணால் ஆகியோரும் சேர்ந்து மாலினியை கடுமையாக சித்ரவதை செய்ததால், அந்த பெண் வைரமுத்துவின் வீட்டிற்கே சென்றுவிட்டார். அங்கு வைர முத்துவின் பெற்றோர்கள் இரு வருக்கும் முறைப்படி திருமணம் செய்துவைப்பதாகக் கூறினர்.
இதையடுத்து, மகளை வைரமுத்து கடத்திச் சென்று விட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாலினியின் குடும் பத்தினர் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு தரப் பினரையும் அழைத்து விசாரித் தனர். விசாரணையில், "நான் வைரமுத்துவைத்தான் திருமணம் செய்துகொள்வேன்'' என்று மாலினி உறுதியாகத் தெரிவித்துள் ளார். ஆத்திரமடைந்த மாலினியின் குடும்பத்தினர், "இனிமேல் நீங்க எப்படி வாழுறீங்கன்னு பார்க்கத்தான போறோம்'' என கோபத்தோடு சத்தமிட்டபடி வீட்டுக்குச் சென்றனர். மாலினி நேராக வைர முத்துவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந் நிலையில், மாலினி சென்னைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரை அனுப்பிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த வைரமுத்து வை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து, ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். உயிருக்குப் போராடியவரை, பொதுமக்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஊருக்குள் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப் பை வலுப்படுத்தியுள்ளனர். கொலைக்கு காரணமான விஜயா மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக்கோரியும், கொலையாளிகள் அனைவ ரையும் கைதுசெய்யக்கோரி யும், மயிலாடுதுறை ற்ர் கும்பகோணம் சாலையில் உறவினர்களும், கம்யூ னிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாலினியிடம் கேட்டபோது, "வைரமுத்தும் நானும் 10 வருடமா காதலிக் கிறோம், அவங்க வீட்டுல எதிர்ப்பு இல்ல. எங்க வீட்டுல எங்கப்பா தலித், எங்கம்மா வேற சமூகம். எங்கப்பா எதிர்க்கல. அப்பாவ காதலிச்சித்தான் அம்மா கல்யாணம் செய்துக்கிட்டாங்க, அம்மா தான் சித்தப்பா பாஸ்கரனையும், தம்பிங்க குகன், குணாலையும் உசுப்பிவிட்டு அடிக்கடி சண்டை போடுவாங்க. என்னோட குடும்பமே என்னை சித்ரவதை செய்வாங்க... அடிப்பாங்க, முடிய அறுப்பாங்க. எங்க அம்மாட்ட நான் அனுபவிக்காத சித்ரவதையே இல்ல. ஆனால் உறுதியா வைரமுத்துவத்தான் கல்யாணம் செய் துக்கணும்னு இருந்துட்டேன். கடைசியா ஐந்தாம் தேதி பிரச்சினை அதிகமாகிடுச்சி. எங்க அம்மா போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. அப்பவே போலீஸ் விசாரிச்சப்ப, "வைரமுத்துவ கொலைகூட செய்வாங்க, கொஞ்சம் பாதுகாப்பு கொடுங்க'ன்னு போலீஸ்காரங்ககிட்ட சொன் னேன். அலட்சியமா விட்டுட்டாங்க. இப்ப எங்க வாழ்க்கையே போயிடுச்சி. இதுல எங்க அப்பாவுக்கு சம்பந்தம் இல்ல. எங்க அம்மாவும், சித்தப்பா பாஸ்கரும்தான் முழுக்காரணம். அவங்க மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும்'' என்று அழுகிறார். போராட்டத்தில் இருந்த வி.சி.க. மாவட்டச் செயலாளர் மோகன்குமாரோ, "கடந்த காலத்தில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறிய கட்சிகள், ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டம் எதற்கு என்பதுபோல பேசி வருவது ஆணவக் கொலை காரர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைகிறது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் கொண்டுவரவேண் டும்'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளருமான மேகநாதன் கூறுகையில், "வைரமுத்து கம்யூனிச சிந்தனையில் வளர்ந்தவர். தன்னை மாணவர் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு பயணித்த போராளி. இந்த கொலையை பார்க்கும்போது, அந்த கொலையாளிகள் இதற்கு முன்பு கூலிப்படை யினரோடு இருந்தார்களா அல்லது கூலிப் படையினர் செய்தார்களா என்கிற சந்தேகம் வருகிறது. இதனை காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினோ, "நான்கு தனிப்படை அமைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் போயிட்டிருக்கு. குற்றவாளிகளையும் கைது செய்துள்ளோம்'' என்கிறார்.