2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என பா.ஜ.க.வினரே கணக்கு போடுகிறார்கள். தி.நகர் தொகுதியை தமிழிசை சௌந்தரராஜன் கேட் கிறார். தி.நகர் தொகுதி இல்லையென்றால் வேளச்சேரி தொகுதியையாவது கொடுங்கள் என அ.தி.மு.க.விடம் மல்லுக்கட்டுகிறார். இந்த இரண்டு தொகுதியையும் தரமுடியாது என அ.தி.மு.க. சொல்லிவிட்டது. அதனால் அ.தி.மு.க. மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் தமிழிசை. மயிலாப்பூர், துறைமுகம் ஆகிய இரண்டு தொகுதிகள்தான் தரமுடியும் என்பதே அ.தி.மு.க.வின் நிலை. 

Advertisment

தி.நகர் தொகுதியை சில நூறு ஓட்டுகளில் அ.தி .மு.க. இழந்தது. அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதி களில் பா.ஜ.க. குறிவைக்கும் தொகுதிகள் எதையும்  அ.தி. மு.க. தரத் தயாராக இல்லை. 

Advertisment

துறைமுகம், அமைச்சர் சேகர்பாபுவின் தொகுதி. அங்கு போட்டி கடுமையாக இருக்கும். மயிலாப்பூர் ஒரு இழுபறி தொகுதி. மற்றொரு பெண் தலைவரான வானதி, கோவை அல்லது சிங்காநல்லூரை கேட்கிறார். அ....மலை மூன்று தொகுதிகளில் போட்டியிட ரகசியமாக சர்வே எடுத்து வைத்திருக்கிறார். எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் என அறிவித்தால் தி.மு.க. அ..மலைக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவர் தொகுதியை அறிவிக்கவே அஞ்சி நடுங்குகிறார். இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெறாவிட்டால் அவரது அரசியல் அத்தியாயம் முடிந்துவிடும் என ரொம்பவே பயப்படுகிறார். 

முன்னாள் மத்திய அமைச்சர் முருகன், நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குள் வரும் அவினாசியை கேட்கிறார். இவை அனைத்தையும் கொடுக்க அ.தி.மு.க. தயாராக இல்லை. ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோர் போட்டியிடப் போகும் தொகுதிகள் எல்லாம் பா.ஜ.க. தொகுதிகள்          என்ற கணக்கிலேயே அ.தி.மு.க. பா.ஜ.க.வை அணுகுகிறது.

Advertisment

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு இரண்டு கண்டிஷன்களை இட்டுள்ளது.  முதலா வது கண்டிஷன், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் அ.தி.மு.க. தலைமையிடம் கொடுத்துவிட வேண்டும். பிரச்சாரத்தில் கொடிகளுடன் பா.ஜ.க. வரலாம், ஆனால் பூத் கமிட்டிகளை ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க. அமைக்க வேண்டும் என்பதே இரண்டாவது கண்டிஷன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. சார்பில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் விலை போகக்கூடிய வேட்பாளர்கள் என்பதே அ.தி.மு.க.வின் கணக்கு. எனவே பா.ஜ.க.வினரை ஒரு பொருட்டாகக் கருதவேண்டாம் என அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். 

தேர்தலை ஒட்டி அமித்ஷாவுக்கு ஒரு பெரிய கட்டிங் அ.தி.மு.க.விலிருந்து கொடுக்கப்பட்டுள்  ளது. ஆட்சியிலிருந்தபோது அமித்ஷாவுக்கு கட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதை போல இம்முறையும் கொடுத்துள்ளார்கள். அதனால் அமித்ஷா, அ.தி.மு.க. கொடுக்கிற தொகுதிகளை வாங்கிக்கொள்ளுங்கள் எனச் சொல்லியுள்ளார். இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கலங்கிப் போயிருக்கிறார்      கள். அ..மலையைத் தவிர வேறு யாரும் சட்டமன்றத் தேர் தலில் ஜெயிக்க ஆர்வம் காட்டவில்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு களைவிட அதிக வாக்குகள் பெறவேண்டும் என்பதுதான் இலக்காக உள்ளது. 

அதில் வெற்றி கிடைத்தால் சந்தோசம் என்கிற நிலையிலேயே பா.ஜ.க. இருக்கிறது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்பதே இலக்காக இருக்கிறது.

பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்த சட்டமன்றத் தேர்தலைவிட 2029ல் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலைத்தான் பெரிதும் எதிர்பார்க்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் வாங்கும் ஓட்டுகளை பார்த்து, வரும் பாராளுமன்றத் தேர்த லில் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அமித் ஷாவின் லேட்டஸ்ட் கணக்கு.

"விஜய், காங் கிரஸை தி.மு.க. கூட்டணியிலிருந்து அழைத்துவருவார் என பா.ஜ.க. போட்ட கணக்குகள் இதுவரை வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்த பாராளுமன்றத் தேர் தலுக்குள் அவரை தயார் செய்வதை பா.ஜ.க. குறிக் கோளாக வைத்திருக் கிறது' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.