ருமுறை முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பற்றி புகார் சொல்ல, டெல்லிக்குப் போனார் எடப்பாடி. ‘"முன்னாள் பா.ஜ.க. மா.த. இல்லாமல் நான் உங்களை தனியாக சந்திக்க வேண்டும்'’ என அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தார். எடப்பாடி காத்திருக்க வைக்கப்பட்டார். கடைசியில் அவர் அமித்ஷாவை சந்தித்தபோது, பின்வாசல் வழியாக முன்னாள் பா.ஜ.க. மா.த. வரவழைக்கப்பட்டு, அமித்ஷாவின் முன்னாடி உட்கார்ந்திருந்தார். வேறு வழியின்றி அமித்ஷாவுக்காக கொண்டு போயிருந்த சால்வையை முன்னாள் பா.ஜ.க. மா.த.வுக்கு அணிவித்து விட்டு வெளியேவந்த எடப்பாடி, தமிழகத்திற்கு வந்ததும் "இனி பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை' எனக் கூறிவிட்டார். முன்னாள் பா.ஜ.க. மா.த.  இல்லாமல் ஒரு அணுவும் தமிழகம் தொடர்பான அரசியல் நகர்வுகளில் அசையாது என இருந்த டெல்லியில் தற்போது அவர் வர வேண்டாம்’ எனக் கூறி, தமிழக பா.ஜ.க. தலைவர்களின் கூட்டம் ஒன்று நடந்து முடிந்துள்ளது. 

Advertisment

டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், பொன்னார், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், கேசவ வினாயகம் என தமிழக பா.ஜ.க.வில் பெயர் தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டு பங்கெடுத்துக் கொண்ட நிலையில் தமிழக அரசியல் நிலைமை குறித்து அமித்ஷாவும் ஜெ.பி.நட்டாவும் விவாதித்தார்கள். டெல்லியில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச்சென்று பூஜை செய்து கொண்டிருந்தார் முன்னாள் பா.ஜ.க. மா.த. ஏன் இந்த மாற்றம்? மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் எம்.பி. ஆவார், மத்திய மந்திரி ஆவார், பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் ஆவார் என அவரது ஆதரவாளர்கள் மூலம் செய்தி பரப்பி விட்டார். முன்னாள் பா.ஜ.க. மா.த. கவர்னர் ஆவார் என்றும்கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்கிற பதவியை ஒப்புக்குச் சப்பாணியாகப் பெற்றார். வேறு எந்தப் பதவியையும் பா.ஜ.க. தலைமை தரவில்லை. 

அவரது குரு வும் பா.ஜ.க. வின் தேசிய பொதுச் செய லாளருமான பி.எல்.சந்தோஷ் மூலம் மோடி -அமித்ஷா ஆகி யோர் தமிழகத் திற்கு வரும்போது மேடைகளில் தலை காட்டி தான்தான் தமிழக பா.ஜ.கவில் செல்வாக்குமிக்க தலைவர் என ‘ஷோ ’ காட்டிக் கொண்டு இருந்தார் அதேபோல், தமி ழகத்தில் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறக்கூடாது எனவும் காய் நகர்த்தி வந்தார். வியூக அமைப்பாளர் சுனில் ஆலோசனைப்படி டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட் டையன் மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என அணி திரட்டினார். இந்த அணி திரட்டலில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதி களில் அ.தி.மு.க. வாக்குகளை பிரித்து அதை அ.ம. மு.க.விற்கு எப்படி கொண்டு செல்வது என வியூகம் வகுத்து வந்தார். இது புகாராக டெல்லிக்குச் சென் றது. அதை விசாரிக்க நிர்மலா சென்னைக்கு வந்தார்.

bjp1

Advertisment

நிர்மலா நடத்திய கூட்டத்தில் முன்னாள் பா.ஜ.க. மா.த.  அழைக்கப்படவில்லை. “"முன்னாள் பா.ஜ.க. மா.த.  என்னை முதுகில் குத்தியவர். நான் ஒரு ஹோட்டல் அதிபரிடம் பேசிய பேச்சை ‘"நான் மன்னிப்புக் கேட்க வைத்தேன்’எனத் தவறாக செய்தி வெளியிட்டார். அவரது சுய நலத்துக்காக ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோருடன் பொருந்தாக் கூட்டணியை அமைத்து பா.ஜ.கவை தமிழகத்தில் தோற்கடித்தவர்'’என சரமாரியாக நிர்மலா குற்றம் சுமத்தினார். அதற்குப்  பதிலளித்த முன்னாள் பா.ஜ.க. மா.த., "என்னைப் பற்றி தவறாகப் பேசிய நிர்மலா மன்னிப்புக் கேட்க வேண்டும்'’என பி.எல்.சந்தோஷ் மூலம் டெல்லிக்குப் புகார் அனுப்பினார். அதை விசாரிக்க டெல்லியில் கூட்டிய கூட்டத்திற்கு அவர் அழைக்கப்படவில்லை. அவர் மீதான புகார் பற்றி பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ‘"அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்கிறார். அதற்காக சசிகலாவுடன் இணைந்து பலரை சந்தித்துப்  பேசி வருகிறார்'’ எனப் போட்டு உடைத்தார்கள். அதைக் கேட்ட அமித்ஷா ‘"தமிழகத்தில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதுதான் சிறந்தது. அந்த கூட்டணிக்குள் ஓ.பி.எஸ்., டி.டி.வி. வருவதைப்பற்றி எடப்பாடி முடிவெடுக்கட்டும்' என பேசினார். அதனால்தான் ஜான்பாண்டி யனின் மாநாட்டுக்கும், மூப்பனார் நினைவு தினத்துக்கும் எடப்பாடியின் விருப்பப்படியே ஓ.பி.எஸ்., டி.டி.வி. அழைக்கப்படவில்லை என அமித்ஷா விளக்கினார். முன்னாள் பா.ஜ.க. மா.த.வுக்கு  எதிரான அமித்ஷாவின் ஆட்டம் கண்டு தமிழக பா.ஜ.கவினர் அதிர்ந்து போனார்கள். "நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை இடங்களில் ஜெயிக்கும் என கணக்குப் போட்டு வைத்திருக்கிறோம். நீங்கள் உங்களுக்குள் கோஷ்டிப் பூசலை வளர்க்காதீர்கள்' என அட்வைஸ் செய்து அனுப்பினார் அமித்ஷா. ஒருகாலத்தில் பா.ஜ.க.வில் ஆல் இன் ஆல்’ ஆக இருந்த முன்னாள் பா.ஜ.க .மா.த.  அரசியல் அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறாரே எனத் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே தமிழகத்திற்கு வந்துசேர்ந்தார்கள். 

இவர்கள் ‘கேமை’ புரிந்த டி.டி.வி., நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை’ என அறிவித்தார். ஓ.பி.எஸ்., டி.டி.வி., டாக்டர் கிருஷ்ணசாமி என இதுவரை மூன்று கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளி யேறுகிறோம் என அறிவித்துள்ளன. “மத நல்லிணக்க தி.மு.க. கூட்டணியை உடைப்போம் என்றவர்களின் கூட்டணி கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் அர சியல் தெரிந்தவர்கள்.   இந்நிலையில் ஆடுமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என  வியாழக் கிழமை (4-9-2025) அன்று தகவல் பரவி பரபரப்பானது.