Advertisment

காணாமல் போன அ.தி.மு.க!  புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!

pondy


மிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாவதற்கு முன்பே புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆட்சி யைப் பிடித்தது, அதன்பின்பே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. அப்படிப்பட்ட கட்சி, தற்போது புதுவையில் லென்ஸ் வைத்து தேடவேண்டிய நிலையிலிருப்பதாகக் கவலைப்படுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "1974-ல் புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. - சி.பி.ஐ. இணைந்து தேர்தலை சந்தித்து, அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்று, காரைக்கால் ராமசாமி முதலமைச்சரானார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியதால் 23 நாளில் அ.தி.மு.க. ஆட்சி கலைய, 3 ஆண்டுகள் குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்தது. அதன்பின் 1977-ல் அ.தி.மு.க. 14 இடங்களில் வெற்றிபெற, அ.தி.மு.க. ராமசாமி மீண்டும் முதலமைச்ச ரானார். 13 மாதங்கள் வரை இந்த ஆட்சி இருந்தது. அந்தளவுக்கு கட்சி இங்கே வலிமையாக இருந்தது. அதன்பின் 1985, 1991-ல் தலா 6 இடங்களிலும், 2006-ல் 3 இடங்களிலும், 2011-ல் 5 இடங


மிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாவதற்கு முன்பே புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆட்சி யைப் பிடித்தது, அதன்பின்பே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. அப்படிப்பட்ட கட்சி, தற்போது புதுவையில் லென்ஸ் வைத்து தேடவேண்டிய நிலையிலிருப்பதாகக் கவலைப்படுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "1974-ல் புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. - சி.பி.ஐ. இணைந்து தேர்தலை சந்தித்து, அ.தி.மு.க. 12 இடங்களில் வெற்றிபெற்று, காரைக்கால் ராமசாமி முதலமைச்சரானார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியதால் 23 நாளில் அ.தி.மு.க. ஆட்சி கலைய, 3 ஆண்டுகள் குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்தது. அதன்பின் 1977-ல் அ.தி.மு.க. 14 இடங்களில் வெற்றிபெற, அ.தி.மு.க. ராமசாமி மீண்டும் முதலமைச்ச ரானார். 13 மாதங்கள் வரை இந்த ஆட்சி இருந்தது. அந்தளவுக்கு கட்சி இங்கே வலிமையாக இருந்தது. அதன்பின் 1985, 1991-ல் தலா 6 இடங்களிலும், 2006-ல் 3 இடங்களிலும், 2011-ல் 5 இடங்களி லும், 2016-ல் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. இப்படி புதுவையிலுள்ள 30 தொகுதியில் 10 சதவிகித இடங்களை பிடித்துவந்தது. 

Advertisment

கடந்த 2021 தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் எங்களுக்கு ஐந்து தொகுதிகள் தரப்பட்டது. ஆனால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. தற்போது நடக்கும் என்.டி.ஏ. ஆட்சி மீதான விமர்சனங்களுக்கு எங்கள் கட்சி நிர்வாகிகள் முட்டுக்கொடுத்து வருகிறார்கள், ஆனால் என்.ஆர்.காங்கிரஸோ, பா.ஜ.க.வோ எங்களை மதிப்பதில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஒற்றுமையுடன் சந்திக்கும். அ.தி.மு.க. தான் அதற்கு தலைமையென்று அமித்ஷா சொல்லிவிட்டார். புதுவையிலோ தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. புதுவைக்கான பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சுரானா, "பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி தமிழ்நாட் டில் மட்டுமே. இங்கு பா.ஜ.க. - என்.ஆர். காங்கிரஸ் மட்டுமே' என்கிறார். முதலமைச்சர் ரங்கசாமி இந்த வாரம் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார், அடுத்த வாரம் செய்யப்போகிறார் என்கிற தகவல் வெளியாவதும், அடங்குவதுமாக இருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணி போனாலும், பேரம் பேசி தொகுதியை வாங்குமளவுக்கு இங்கு அ.தி.மு.க. இல்லை. 

எம்.ஜி.ஆரின் பிரபலத்தால் அப்போது புதுவையில் வெற்றி பெற்றோம். 1985களில் புதுவை காங்கிரஸ் முக்கிய தலைவராக           வளர்ந்த கண்ணன், அ.தி.மு.க. செல்வாக்கை புதுவையில் காலி செய்து வளரவிடாமல் பார்த்துக்கொண்டார், அதே வழியை ரங்கசாமியும் பின்பற்றிவருகிறார். ஜெ. தலைமையிலிருந்த காலத்திலும் அ.தி.மு.க. புதுவையில் வளரவில்லை. இப்போது அ.தி.மு.க.வில் இளைஞர்களே இல்லை. வியாபாரிகளை கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டுவந்ததால், அவர்கள் கட்சியை வைத்து தங்களையும், தங்களது குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டார்கள். புதுவை மாநிலச் செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், தன் உறவினர்களுக்கு தரும் முக்கியத்துவத்தால் கடுப்பாகி, ஓ.பி.எஸ்., தினகரன் பின்னால் சென்றார்கள். ஓ.பி.எஸ். அணியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் இருக்கிறார். அ.ம.மு.க.வுக்கு சென்றவர்களை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்திருந்தால்     கட்சி வலிமையாகியிருக்கும், அதை செய்யாததால் இப்போது அவர்கள் ரங்கசாமி, சார்லஸிடம் மாறிமாறிப் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். 

pondy1

அதோடு, புதுச்சேரி மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில துணைச்செய லாளர் வையாபுரி மணிகண்டன், பொருளாளர் ரவிசுப்ரமணியன் எனத் தனித்தனி கோஷ்டியாக அரசியல் செய்கிறார்கள். இதனால்  புதுவையில் அ.தி.மு.க.வை லென்ஸ் வைத்து தேடும் நிலையிலிருக்கிறது. இதனால் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. எங்களை மதிக்கவில்லை'' என வேதனையுடன் கூறினார்கள். 

pondy2

அ.தி.மு.க.வின் முக்கிய மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே கட்சிக் கட்டமைப்போடிருக்கின்றன. ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கே கட்டமைப்பு கிடையாது, பா.ஜ.க. எல்லாம் பட்டியல்லயே கிடையாது. எங்கள் கட்சிக்கு தொகுதிக்கு 3 முதல் 5 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இவை வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள். காங்கிரசும், என்.ஆர்.காங்கிரசும் இதைப் பயன்படுத்தியே ஆட்சியை பிடித்தார்கள். என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி, அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு வெற்றி பெறுவதும், தேர்தலுக்குப் பின்னர் கழட்டிவிடுவதுமாக செய்துவருகிறார். கட்சி செல்வாக்கு, தனிநபர் செல்வாக்கால் 8 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுமளவுக்கு உள்ளது. மீதியுள்ள தொகுதிகளில் எங்கள் கட்சியின் வாக்குகள், அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். வரும் தேர்தலில் கூட்டணி எப்படியிருக்கு மென்று தெரியாது. பொங்கலுக்குப் பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம், நீங்கள் தேர்தல் வேலையைப் பாருங்கள் என  இ.பி.எஸ்.சும், புதுவையில் கூட்டணிக்கு தலைமைதாங்கும் என்.ஆர்.சி. ரங்கசாமியும் சொல்கிறார்கள். அதனால் கூட்டணி எப்படிப் போகுமென்று தெரியவில்லை'' என்றார். 

காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி பலமாக இருப்பதால் காங்கிரசுடன் பேசமுடியாது. பா.ஜ.க.வுடன் போவதும், தனித்து நிற்பதும்  தற்கொலைக்கு சமம் என நினைக்கிறது. அதனால் புதுவையில் மட்டுமாவது என்.ஆர்.சி. -அ.தி.மு.க. -த.வெ.க. கூட்டணி அமைய வேண்டுமென நினைத்து ரங்கசாமி தரப்         பிலும், அ.தி.மு.க. தரப்பிலும் காய் நகர்த்தப் படுகிறது. 

nkn191125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe