Advertisment

சேர்ந்திசை மேதை எம்.பி.சீனிவாசன்! பிரளயன் பெருமிதம்!

sinivasan

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக இசைமேதை எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, அக்டோபர் 11, சனிக்கிழமையன்று தேனாம்பேட்டை அன்பகம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாடகவியலாளர் பிரளயன், நா.பாலகிருஷ்ணன், ரவீந்திர பாரதி, சுப.அருணா சலம், எம்.பி.சீனிவாசனின் சகோதரி ஜெயந்தி, இசையமைப்பாளர் தீனா, திரைக்கலைஞர் ஷாஜி, கவிஞர் சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மக்களிசையில் எம்.பி.சீனி வாசனின் பங்களிப்புகள், சாதனைக

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக இசைமேதை எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, அக்டோபர் 11, சனிக்கிழமையன்று தேனாம்பேட்டை அன்பகம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாடகவியலாளர் பிரளயன், நா.பாலகிருஷ்ணன், ரவீந்திர பாரதி, சுப.அருணா சலம், எம்.பி.சீனிவாசனின் சகோதரி ஜெயந்தி, இசையமைப்பாளர் தீனா, திரைக்கலைஞர் ஷாஜி, கவிஞர் சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மக்களிசையில் எம்.பி.சீனி வாசனின் பங்களிப்புகள், சாதனைகள்குறித்து பேசினார்கள். நிகழ்ச்சியில், இஊஆப சேர்ந் திசைக்குழு, சென்னை இளைஞர் சேர்ந்திசை குழுவினரின் இசைநிகழ்ச்சியும் நடந்தது.

Advertisment

தலைமையுரையாற்றிய நாடகவியலாளர் பிரளயன், "1946-ல் தல்வார்  கப்பல் மாலுமிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்து தடியடியை எதிர்கொண்ட மாணவர் இயக்கத்தில் தோழர் பி.ராமச்சந்திரனின் சக மாணவராக எம்.பி.சீனிவாசனும் இருந்திருக்கிறார்'' என்பதை நினைவுபடுத்தியதோடு, "எம்.பி.எஸ். அவர்களின் பாரம்பரியம் என்பது தென்னிந்திய இசை மரபில் முக்கியமான பாரம்பரியம். அவர் திரையிசைக் கலைஞராக அறியப்பட்டது ஒருபுறம் இருந்தாலும்கூட அவரது பாரம்பரியம் என்பது, இந்திய மக்கள் நாடக மன்றத்தினுடைய பாடல் குழுவின் விழுதுதான் அவர். நம் மண்ணின் மரபான இசையைத்தான் நாட்டுப்புற இசையென்று சொல்கிறோம். நாட்டுப்புற இசைக்கு ஏற்பாடு செய்கிற மேடைகள் வேறு. அதற்கான இடங்கள் வேறு. என்றைக்கும் ஒரே மேடையில் நிகழ்த்தப்பட்டதில்லை. இப்படி மிகப்பெரிய பிரிவினை இருந்தது. இந்திய மக்கள் நாடக மன்றம் அதை உடைத்தது. 

Advertisment

மக்கள் மத்தியில் புழங்குகிற இசையை, அதில் சொல்லப்படுகிற வாழ்வியல் செய்தி களோடும், ஏகாதி பத்திய எதிர்ப்புக்கான உள்ளடக்கங்களைக் கொடுத்தும் பாடினார்கள்.. அதற்கு மக்கள் இசை எனப் பெயரிட்டார்கள். அப்படித்தான் சேர்ந்திசை என்ற மரபு வருகிறது. தென்னிந்தியாவிலே இதை தொடங்கிவைத்தவர்,  பரவலாக்கியவர், பயிற்சி யளித்தவர் இசைமேதை எம்.பி.சீனிவாசன். அது, இசை மரபிலே அவர் செய்த முக்கியமான மாற்றம்'' எனக் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பலரும் எம்.பி.சீனிவாசனின் பெருமைகளை நினைவுகூர்ந்து பாராட்டினார்கள். “எம்.பி. சீனிவாசன் இசைமேதை மட்டுமல்ல, தான் செயல்பட்ட அரங்கில் திரைக் கலைஞர்கள் நலனை முன்னிறுத்தி அவர்களை அணிதிரட்டி 24 தொழிற்சங்கங்கள் அமைத்து வழிநடத்தியது மகத்தான விஷயம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஏதேனும் ஒரு வெகுஜன அரங்கில் செயல்பட வேண்டும். எம்.பி.எஸ். திரையுலகில், அங்குள்ள உழைப்பாளிகளுக்காகத் தன்னலமற்ற முறையில் பணியாற்றி, ஓர் அருமையான கம்யூனிஸ்டாக உயர்ந்து நின்றார்’ என்று தனது நிறைவுரையில் புகழாரம் சூட்டினார் த.மு.எ.க.ச. பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe