செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட கிழக்கு கடற்கரையில் மாமல்லபுரம், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள், குடைவரைக் கோயில், கடற்கரை கோயில்களுடன் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கிவரு கிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் மகாபலிபுரத்திற்கு முறையான பேருந்து நிலைய வசதியில்லாதது பெரிய குறையாகும்.
சீன அதிபர் ஜிங் பின் இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வைத்து அவரைச் சந்தித்தார். அதற்காக சுமார் 120 கோடி செலவிடப் பட்டு மாமல்லபுரம் புனரமைக்கப்பட்டது. அதில் நல்ல வசதிகளுடன் ஒரு பேருந்து நிலையத்தையும் கட்டியிருக்கலாம் என உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆதங்கப்படுகின்றனர்.
மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் தொடர்ந்து பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இங்குள்ள பேருந்து நிலையத்தில் 8 பேருந்துகள் மட்டுமே நிறுத்தமுடிகிறது. விடுமுறை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிகின்றனர். அதற்காக கூடுதல் பேருந்துகள் வரும்போது, சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டுமென்ற கோரிக்கை எழத் தொடங்கியது. சுமார் 35 ஆண்டு களுக்கு முன்பு மகாபலிபுரம் கருக்காத்தம்மன் கோயிலுக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் 6.79 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முடிவுசெய்யப்பட்டு வருவாய்த்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. மாமல்லபுரத்திற்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப் பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (ஈஙஉஆ) பணியை ஒப்படைத் தது. 2020ஆம் ஆண்டு வல்லுநர்கள் ஆய்வுமேற் கொண்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடம் என சான்றிதழ் அளித்தனர். ஆனால் இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. ஆட்சியில் 2024ஆம் ஆண்டு 90.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு மார்ச் 2024 முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் தொடர்ந்து பணிகள் தாமதமாகிவருகிறது.
தற்போது கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கு மேற் பட்ட பணிகள் நிறைவடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் தாமதமானால், மக்கள் பணம் மேலும் வீணாகும் என்ற புகாரெழுந்துள்ளது. முதல்வர் இதை கருத்தில்கொண்டு உடனடியாக பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/kanchepurambustand-2026-01-12-17-07-25.jpg)