புதுச்சேரி மிஷன் வீதியில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்த மான ஓ.எம்.ஜி. (ஞட்ஙஹ்ஏன்ப்ல்) ரெஸ்டோபார் உள்ளது. இதனுள்ளே இளைஞர்- இளம்பெண் இருவரும் அனுமதிக்கப்படுவார்கள். மாதுவுக்கு மட்டும் மது இலவசம், ஜோடியோடு வந்தால் கட்டணம் குறைவு போன்ற ஆஃபர்கள் உண்டு. உள்ளே டி.ஜே., டான்ஸ் நடக்கும். ஆகஸ்ட் 9-ஆம் தேதி நள்ளிரவை கடந்தும் பார்ட்டி நடந்துள்ளது. போதையில் ஜோடி ஜோடியாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்துள்ளார்கள். 

Advertisment

மதுரை மேலூரைச் சேர்ந்த சாஜன், சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் விஸ்காம் படித்துவருகிறார். இவர் தனது பிறந்தநாளுக்காக தன்னுடன் படித்த நண்பர்கள் 15 பேரை பாண்டிச்சேரிக்கு வரவைத்து பார்ட்டி தந்துள்ளார். போதை தலைக்கேறிய விடியற்காலை நேரத்தில் பப்பில் டான்ஸ் ஆடும்போது தேசிய கட்சியைச் சேர்ந்த புதுவையின் மிகப் பிரபலமான அரசியல் பிரமுகரின் மகளை உரசியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரப்பினர் சாஜன் கேங்கோடு சண்டையிட்டுள்ளனர். அப்போது பார் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளே புகுந்து, ""அவுங்க யாருன்னு தெரியாம மோதறீங்க, உயிரோட ஊர் போகமாட்டீங்க'' என எச்சரித்து இளைஞர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

கிச்சன் கேப்டன் அசோக்ராஜ், கிச்சனி லிருந்து கத்தி கொண்டுவந்து சிவகங்கையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரபாண்டியன் மகன் மோஷிக் சண்முகராஜன், சாஜன் இருவரையும் குத்தி யுள்ளார். தகராறு கேள்விப்பட்டு பெரியமேடு போலீஸ் அங்கே வந்தபின் அவர்கள் கண்முன்பே சாஜன் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மோஷிக் இறந்துபோனதால் கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து புதுச்சேரி சட்டம் ஒழுங்கு முதன்மை காவல்கண் காணிப்பாளர் கலைவாணனிடம் கேட்டபோது, ""ரெஸ்டோபாரில் கொலை என்பது இப்போதுதான் முதல்முறையாக நடந்துள்ளது, இதற்குமுன்பு இப்படி நடந்ததில்லை. உடனடியாக கொலை செய்தவரை கைது செய்துவிட்டோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்துவரு கிறோம்''’என்றார்.

Advertisment

சென்னையில் பிரபல தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், ஐ.டி. நிறுவனங்கள், பெங்களுரூ, ஆந்திராவிலிருந்து வாரஇறுதி நாட்களில் கூட்டம் கூட்டமாக வந்து போதையில் மிதக்கின்றனர் இளைஞர்- இளைஞிகள். புதுவை அரசும் அவர்களிடம் கெடுபிடி காட்டக்கூடாது என காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் உள்ளூர் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்த மாணவன்கூட வீட்டுக்குத் தெரியாமல்தான் பார்ட்டிக்கு வந்துள்ளான். 

pondy1

இச்சம்பவம் குறித்து புதுவை வட் டாரங்களில் விசாரித்தபோது, ""2021-ல் ஆட்சிக்கு வந்த முதலமைச்சரான ரங்கசாமி ரெஸ்டோ பார்களுக்கு லைசென்ஸ்களை வாரிவழங்கியதால் குடியிருப்புப் பகுதி, கோவில், பள்ளி அருகில் ரெஸ்டோபார்கள் உருவாகிவிட்டன. விதிகளை மீறி விடியற்காலை வரை இந்த பார்கள், பப்கள் நடக்கின்றன. இந்த பப்களில் பிரச்சனை செய்பவர்களை வெளியேற்ற பவுன்சர்கள் என்கிற பெயரில் இளம்ரவுடிகளை பாதுகாப்புக்காக நிறுத்துகிறார்கள், இதில்தான் சிக்கலே. பொதுவாக பப்களில் சின்னச் சின்ன உரசல்கள் இருக்கும். அப்போது பவுன்சர்கள் அவ்வளவு சீக்கிரமாக வாடிக்கையாளரை அடிக்கமாட்டார்கள், வெளியேற்றிவிடுவார்கள். புதுவையில் பவுன்சர்     கள் என்கிற பெயரில் இருப்பது ரவுடிகள். 

Advertisment

இவர்கள் பிரச்சனை செய்பவர்களை எடுத்ததுமே அடித்துவிடுகிறார்கள். இது அடிவாங்கியவர்களுக்கு அவமானத்தையும் கோபத்தையும் தருவதால் கொலை வரை போகிறது. 

ரெஸ்டோபார் நடத்துபவர்கள், போதை மருந்து விற்பவர்கள்தான் ரவுடிகளை ஊக்குவித்து வளர்க்கிறார்கள், அரசியல்வாதிகள் பாதுகாப்பு தருகிறார்கள். காவல்துறையினருக்கு மாதாமாதம் மாமூல் போவதால் கண்டுகொள்வதில்லை. ரவுடிகளுக்கு மாமூல் செல்லும் வழியை கட் செய்தாலே பாதி ரவுடிகள் தானாக ஒழிந்துவிடுவார்கள்'' என்றார் வழக்கறிஞரான அரசியல் பிரமுகர். 

கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் என்.ஆர்.சி.- பா.ஜ.க. ஆட்சியை விமர்சித்து மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெஸ்டோ பார்களால் பல சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் நடக்கிறது. ஒரு கொலை நடந்தபின் விதிகளை மீறி செயல்பட்டது என 13 பார்களுக்கு சீல் வைத்துள்ளது காவல்துறை. 

pondy2

புதுவை மாநில காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ""ஆபரேஷன் திரிசூலம் என்கிற பெயரில் டி.ஐ.ஐ. சத்தியேந்திரன், எஸ்.எஸ்.பி. கலைவாணன் டீம், அதிரடியாக ரவுடிகளின் வீடுகளுக்குள் புகுந்து கைதுசெய்தது. ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் முக்கிய பிரமுகர்கள் கைதானவர்களை விடுவிக்கச்சொல்கிறார்கள். பல ரவுடிகள் பாதுகாப் புக்காக அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளார்கள். இதனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்கள் கைகளை கட்டிப்போட்டு வைத்துள்ளார்கள். எங்கள் ஆவணக் கணக்குப்படி ரவுடிகள் பட்டியலில் 700 பேர் இருக்கிறார்கள். அதில் 100 ரவுடிகள் ஆக்டிவாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஜாமீனில் வெளியே வந்தபின் புதுவைக்கு வெளியே தலைமறைவாக இருக்கிறார்கள். இங்கு ஆண்டுக்கு 25 முதல் 30 கொலைகள் நடக்கின்றன. அதில் 3 அல்லது 4தான் கூலிக்கு கொலை செய்வது, மற்றது அப்படியல்ல. ரவுடிகளை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்துக்     கொண்டிருக்கிறோம்''’என்றார்.

ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் திக்கு முக்காடுகிறது புதுச்சேரி.