Advertisment

காக்கிச் சட்டையின் காமச் சேட்டை! -குமுறும் பெண்கள்!

police

"இது அசிங்கமா இருக்கு. இதப் போயி நாம விசாரிக்கணுமா? ரொம்ப யோசனையா இருக்கு. இந்த அசிங்கத்த நாம எப்படி விசாரிக்கிறது?'' -சில பெண்கள் தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் வெளிப்படுத்திய ஆதங்கம் இது!

Advertisment

யார் அந்தப் பெண்கள்? என்ன விவகாரம் இது?

(சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதால் அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) 

Advertisment

அரசி என்பவர் விருதுநகரில் அழகுநிலையம் நடத்துவதோடு பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து வருகிறார். 1998-ல் சேகருடன் திருமணம் நடந்து,  2002-ல் நதியா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2019-ல் கணவர் சேகர் இறந்துவிட, அதற்கு முன்பிருந்தே தன்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துவரும் சுந்தர்ராஜ் என்ற போலீஸ்காரர் மீது தற்போது பண மோசடி புகார் அளித்திருக்கிறார் அரசி. 

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷில்வியா ஜாஸ்மின்“அரசி "எல்லாத்தயும் ஓபனா பேசும்போது டி.எஸ்.பி.யால அத கேட்க முடியல. நமக்கே ஒரு அருவருப்பா இருக்குல்ல. அதனால.. என்கிட்ட வான்னு சொல்லி நான் பேசினேன். சுந்தர்ராஜ் பண்ணுன இல்லீகல் அஃபன்ஸ் நெறய இருக்கு. நெறய பேர்கிட்ட இருக்கு. அவன் ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர்.

police1

அரசியோட லாயர் வந்து சொல்றாரு. மேடம், இந்தம்மா என்கிட்ட பேசுறதுல பாதி பொய்யா இருக்கு. நீங்க சுந்தர்ராஜ் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னா..  ரொம்ப டார்ச்சர் பண்ணு றான். செக்ஸுவலி ஹராஸ் பண்ணுறான். நெறய வீடியோஸ் நீங்க பார்த்திருப்பீங்க. நடவடிக்கை எடுங்கன்னாரு. 

ஆக்சுவலி அரசி வெல் செட்டில்ட். மூ

"இது அசிங்கமா இருக்கு. இதப் போயி நாம விசாரிக்கணுமா? ரொம்ப யோசனையா இருக்கு. இந்த அசிங்கத்த நாம எப்படி விசாரிக்கிறது?'' -சில பெண்கள் தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் வெளிப்படுத்திய ஆதங்கம் இது!

Advertisment

யார் அந்தப் பெண்கள்? என்ன விவகாரம் இது?

(சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதால் அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) 

Advertisment

அரசி என்பவர் விருதுநகரில் அழகுநிலையம் நடத்துவதோடு பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து வருகிறார். 1998-ல் சேகருடன் திருமணம் நடந்து,  2002-ல் நதியா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2019-ல் கணவர் சேகர் இறந்துவிட, அதற்கு முன்பிருந்தே தன்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துவரும் சுந்தர்ராஜ் என்ற போலீஸ்காரர் மீது தற்போது பண மோசடி புகார் அளித்திருக்கிறார் அரசி. 

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷில்வியா ஜாஸ்மின்“அரசி "எல்லாத்தயும் ஓபனா பேசும்போது டி.எஸ்.பி.யால அத கேட்க முடியல. நமக்கே ஒரு அருவருப்பா இருக்குல்ல. அதனால.. என்கிட்ட வான்னு சொல்லி நான் பேசினேன். சுந்தர்ராஜ் பண்ணுன இல்லீகல் அஃபன்ஸ் நெறய இருக்கு. நெறய பேர்கிட்ட இருக்கு. அவன் ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர்.

police1

அரசியோட லாயர் வந்து சொல்றாரு. மேடம், இந்தம்மா என்கிட்ட பேசுறதுல பாதி பொய்யா இருக்கு. நீங்க சுந்தர்ராஜ் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னா..  ரொம்ப டார்ச்சர் பண்ணு றான். செக்ஸுவலி ஹராஸ் பண்ணுறான். நெறய வீடியோஸ் நீங்க பார்த்திருப்பீங்க. நடவடிக்கை எடுங்கன்னாரு. 

ஆக்சுவலி அரசி வெல் செட்டில்ட். மூணு வீடு வச்சிருந்தாப்ல. சுந்தர்ராஜுக்காக ஒரு வீட்ட வித்துட்டாப்ல. நான் கேட்கிறேன், அவன் சொன்னான்னு நீ ஏன் விக்கிற? அவன்கூட ஒண்ணா இருக்கும்போது எல்லாத்தயும் வித்த. இப்ப வந்து குத்துதே குடையுதேன்னா என்ன பண்ணமுடியும்? 

சுந்தர்ராஜோட முதல் கீப் ஈஸ்வரிதான்.  ஹஸ்பெண்ட் கிடையாது. சுந்தர்ராஜோட பொண்டாட்டியும் ஒருமாதிரின்னு சொல்லு றாங்க. அது அவங்க பெர்சனல் லைஃப். அதுக் குள்ள எதுக்கு போகணும்? நெறய மோசடி பண்ணி சுந்தர்ராஜ் ஒன்றரை கோடில வீடு கட்டி ருக்கிறதா சொல்லுறாங்க''’என்றார். 

என்ன விதமான மோசடி?

லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் சுந்தர்ராஜும் வணிகவரித்துறை ஊழியரான ஈஸ்வரியும் ஒன்றாக இணைந்து, வெளிநாட்டு நிறுவனத் தில் பண முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று நெருக்கமானவர்களிடம் பணம் கறந்தனர்.  2023-ல் ஈஸ்வரியின் மகள் பரமேஸ்வரியை ரஷியாவில் ஙஇஇந படிக்க வைப்பதற்கான செலவினங்களுக்காக ரூ.20 லட்சம்வரை பெற்றுள்ளார் சுந்தர்ராஜ். வெளிநாடு போவதற்கு பரமேஸ்வரிக்கு விருப்பம் இல்லாததால், அரசியின் மகள் நதியா ரஷியாவுக்கு அனுப்பப்பட்டார். நதியாவின் அம்மா அரசியிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறிய சுந்தர்ராஜ், தங்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக ஈஸ்வரியின் இன்னொரு மகள் லோகேஸ்வரி புகாரளித் துள்ளார். 

அரசியோ, "சுந்தர்ராஜ் எனக்கு வீடியோ கால் செய்து தகாத முறையில் நடந்துகொள் கிறார். அவருடைய மனைவி ஒரே நாளில் பத்து முறை உறவு வைத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், அவரால் அது முடியவில்லை என்றும் ஆபாசமாகப் பேசுகிறார். அடுத்தடுத்து  என்னிடம் வாங்கிய பல லட்சங்களை திரும்பக் கொடுக்கும்படி கேட்டால், நேரில் வந்தால் பணம் தருகிறேன் என்று கூறி வரச்செய்து, என்னுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, என் மனைவியிடம் கிடைக்கும் ஆனந்தம் உன்னிடம் கிடைக்கவில்லை என்று கேவலப்படுத்தி, இவ்வளவு நேரம் என்னுடன் படுத்ததற்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள் என்று பணத்தை வைத்துவிட்டுச் சென்று விடுவார்''’என்று காவல்துறையிடம் முறை யிட்டுள்ளார்.  

நம்மிடம் அரசி, "விசாரணைக்கு போகும்போது மிரட்டுறாங்க. ஸ்டேஷன்ல வச்சு கதறி அழுதுட்டு வந்தேன். எனக்கு ஆதரவா யாரும் ஒரு வார்த்தைகூட பேசல. அந்தம்மா (இன்ஸ்பெக்டர் ஷில்வியா ஜாஸ்மின்) என்னை அவ்ளோ பேசுறாங்க. வீடியோங்கிற ஆயுதத்தை வச்சு சுந்தர்ராஜ் என்னை மிரட்டுறான்.   சுந்தர் ராஜும் அவன் பொண்டாட்டியு மாக ரெண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றி, என் வாழ்க்கைல என்னோட சேவிங்ஸ் எல் லாத்தயும் பறிச்சிட்டு,  மானம் மரியாதைய பிடுங்கிட்டு, அவங்க நல்லா இருக்காங்க. ரஷியாவுல படிக்கிற  என் மகளுக்கு சாப்பாட்டுக்குக்கூட பணம் அனுப்ப முடியாத நெலமைல நான் இருக்கேன். அவன் என்னை செத்துருன்னு சொல்லுறான். நான் செத்துட்டா அவன் பொண்டாட்டி சந்தோஷமா இருப்பாளாம். அவன் பொண்டாட்டி சிரிக்கிறதுக்காக நான் சாக முடியுமா?''’என்று பரிதாபமாகக் கேட்டார். 

police2

லோகேஸ்வரி காவல்துறையிடம், "எங்க அம்மா, நான், மொத்த குடும்பமும் சுந்தர்ராஜ் பண்ணுன பிளாக்மெயில் சீட்டிங்ல நிம்மதி இல்லாம தவிச்சிட்டு இருக்கோம். அப்ப பிரபாகரன்னு ஒருத்தன். கொலை, கொள்ளை வழக்குல தொடர்புடையவன். அவன் டாக்டருக்கு படிச்சிருக்கான். உனக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறேன்னு சொன்னான். நானும் நம்பி அவன்கிட்ட பழகினேன். அத வீடியோ எடுத்து எங்க அம்மா ஈஸ்வரிகிட்ட, உன் மகள் வீடியோ வெளிவராம இருக்கணும்னா ரூ.8 லட்சம் கொடுன்னு  20-1-2021ல மிரட்டி பணம் பறிச்சான்.  இப்ப எனக்கு வேறொருத்தரோட கல்யா ணம் ஆயிருச்சு. என் புருஷன்கிட்ட அந்த வீடியோவ காட்டிருவேன்னு மிரட்டி அப்பப்ப பணம் வாங்கிட்டே இருந்தான். அவன் போலீஸ்ங் கிறதுனால, அவனுக்கு தெரிஞ்சவங் கள என்கிட்ட அனுப்பி, இதுவரைக் கும் ரூ.10 லட்சம் வரை பிடுங்கிட்டான். அது மட்டுமில்ல.. அவன் ஆசைய நான் தீர்த்து வைக்கணுமாம். இல்லைன்னா, நிம்மதியா வாழவிடமாட்டானாம். அவனுக்கு ஆரோக்கியராஜ், விஜயராஜன், யஆஞ செல்வபாண்டின்னு ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க மூலமாவும் என்னை சித்ரவதை பண்ணிட்டு இருக்கான். 

எங்களோட 40 பவுன் நகை போச்சு.  இடத்த விற்றோம். எங்க சக்திக்குமீறி அவன்கிட்ட எல்லாத்தயும் கொடுத்துட்டோம். இனிமே கொடுக்கிறதுக்கு எதுவும் இல்ல. பேங்க்ல பேருக்கு லோன் வாங்கிட்டு, எங்ககிட்ட அடிச்ச பணத்த வச்சு கோடிகளைக் கொட்டி பங்களா கட்டி சொகுசா வாழ்ந்துட்டு இருக்கான். போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்துக்கிட்டு அபலைப் பெண்கள்கிட்ட மோசடி பண்ணுறதே அவனுக்கு பொழப்பா போச்சு. நானும் எங்க அம்மாவும் அவனால நிம்மதி இல்லாம தவிக்கிறோம். எங்கள ஏமாற்றி பறிச்ச ரூ.38 லட்சத்தை மீட்டுக் கொடுங்க''’என்று முறையிட்டுள்ளார். 

நாம் போலீஸ்காரர் சுந்தர்ராஜிடம் பேசினோம். "என் மேல சொல்லுற புகார்ல 100 பெர்சன்ட் உண்மை கிடையாது. விசாரிச்சிட்டு இருக்காங்க. நம்ம பக்கம் தவறு இருந்தா ரைட்னு சொல்லலாம். என் பக்க நியாயத்த ரெகார்டிகலா வச்சிருக்கேன். இது, உதவின்னு உள்ள போயி, அவங்க மகளை படிக்க வைக்கப்போயி, என் குடும்பத்துல,  என்னோட பொருளாதாரத்துல,  நான் வேலை பார்க்கிற இடத்துல எனக்கு மிகப்பெரிய இழப்பை உண்டாக்கிருச்சு. அது அவங்களுக்கும் தெரியும், அவங்க புள்ளைங்களுக்கும் தெரியும். அதுக்கு மேலயும் புகார் சொல்றாங்கன்னா.. மேல இருக்கவன் பார்த்துப் பான்''’என்று ஒரே போடாகப் போட்டார். 

"புகாரைக் கிடப்பில் போட சுந்தர்ராஜிடம் பணம் பெற்று அப்பிரிவினரை வசமாகக் கவனித்துவிட்டார் சூலக்கரை தனிப்பிரிவு காவலர் செந்தில்நாதன்'’என தகவல் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டோம்.   

"இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. நான் தலையிட்டு முடிச்சி வைக் கிறேன்னு ராங் இன்ஃபர் மேஷன் கொடுத்திருக்காங்க. நான் நேர்மையான ஆளு''’என்று ஒரேயடியாக மறுத்தார்.  

‘"மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் சொதப்புகிறதாமே?’ ஆய்வாளர் ஷில்வியா ஜாஸ்மினிடம் கேட்டோம். "இந்த கேஸ்ல செந்தில்நாதன் தலையிடறதா இதுவரைக்கும் எனக்கு தகவல் வரல. 13 வருஷமா  சுந்தர்ராஜும் அரசியும் ஒண்ணா குடும்பம் நடத்திருக்காங்க. இப்ப எடுத்துட்டான், வச்சிட்டான்னு சொன்னா நான் எப்படி நம்பமுடியும்? பணம் கொடுத்து ஏமாந்த எதுக்குமே எவிடன்ஸ் இல்ல. இங்கே ஆவணங்கள் மட்டுமே பேசும்.   ஓகே.. நோ ப்ராப்ளம்.. பெண்ணுக்கு பிடிக்கலன்னா பிடிக்கலதான். ரெண்டு மூணு வீடியோஸ் பார்த்தேன். சுந்தர்ராஜ் மிரட்டுனது.. வச்சதெல்லாம் பார்த்தேன். இது வுமன் ஹராஸ்மெண்ட் கேஸ். DCB-ல போடமுடியாது. AWPS-லதான் போடணும். நான் கட்டாயம் சுந்தர்ராஜ் மேல ரிப்போர்ட் எழுதுவேன். அவன் சட்டைய               (Police Uniform) கழட்டுறது உறுதி. அதுல மாற்றுக் கருத்து கிடையாது''’என்றார் கொதிப்புடன்.  

காமச் சேட்டைகளினால் காக்கிச் சட்டையின் மானம் காற்றில் பறக்கிறதே!

nkn191125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe