கடந்த ஆண்டு 27-9-25-ல் கரூரில் த.வெ.க. பொதுக்கூட்டத் தில் நடந்த 41 உயிர்ப்பலிகள் தொடர்பான விசாரணைக்கு காவல் துறை மற்றும் த.வெ.க. நிர்வாகிகளை விசாரிக்க 2025, டிசம்பர் 29-ல் டெல்லிக்கு வரச்சொல்லி சி.பி.ஐ. சம்மன் அனுப்பி யிருந்தது. மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு 8 மணி நேரத் துக்கு குறைவில்லாமல் விசாரணை என, மொத்தமாக 24 மணி நேரம் த.வெ.க.வினரையும், கரூர் காவல்துறையையும் விசாரணை செய்திருக்கிறது டெல்லி சி.பி.ஐ.
இதில் சி.பி.ஐ. தரப்பில் நடந்த விசாரணை குறித்து நம்பகமான, சி.பி.ஐ.க்கு நெருக்கமான தரப்பிலிருந்து நமது காதுக்கு சில விவரங்கள் எட்டின. அதன்படி...
காவல்துறை தரப்பில் கலெக்டர் தங்கவேல், அவரது பி.ஏ., மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்தன், டி.எஸ்.பி. செல்வ ராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அனைவருக்கும் சாட்சி சம்மன் அனுப்பி யிருந்தனர். த.வெ.க. தரப்பில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சி.பி.ஐ. அலுவலகத்தின் மாடியில்போய் அமர்ந்ததும் கலெக்டர் தங்கவேலிடம்
சி.பி.ஐ.: இரவு நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் பண்றதுக்கு உத்தரவு கொடுத்தது யார், எந்தெந்த இடத்துல கூட்டம் நடத்தலாம்னு எந்த அடிப்படையில் முடிவு பண்ணினீங்க?
கலெக்டர் தங்கவேல்: தலைமைச் செயலாளர், ஹெல்த் டைரக்டர்கிட்ட பேசிட்டு லெட்டர் கொடுத்தேன். எந்தெந்த சூழ்நிலை கள்ல இரவில் போஸ்ட்மார்ட்டம் உத்தரவு போடலாம்னு மத்திய அரசு விதிமுறைகள் இருக்கு. அதனடிப்படையில்தான் உத்தரவு கொடுத்தேன்.
(பெரும்பாலும் கலெக்டர் குறைவாகவே விளக்கமளித்தார். பெரும்பாலும் பேப்பர்கள் வழி சான்றிதழ்கள், ஆவணங் கள், விதிகள் இப்படியாகவே தனது விளக்கத்தை அளித்தார்.)
எஸ்.பி.ஐ. நோக்கி சி.பி.ஐ.: எந்தெந்த இடத்துல கூட்டம் நடத்தலாம்னு எதை வெச்சு முடிவெடுத்தீங்க? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?
எஸ்.பி. ஜோஸ் தங்கையா: இந்திய காவல் சட்டம் செக்சன் 30ன்படி போலீஸுக்கு அதிகாரம் கொடுத்திருக்கு. அதனடிப்படை யில் முடிவுபண்ணலாம். ரெவின் யூவோ, கார்ப்பரேஷனோ பொதுக் கூட்டம் நடக்கிற இடங்களுக்கு ஓனரா இருப்பாங்க. அவங்க சில இடங்களை செலக்ட் பண்ணி அனுமதி கொடுப்பாங்க. அந்த இடத்துல மக்கள் எவ்வளவு கொள்ளளவு பிடிக் கும்னு பார்த்து அதன்படி அனுமதி தரமுடியும்.
(இவரும் அந்த இடங்களை ஏற்கெனவே எடுத்துவைத்திருந்த வீடியோ, ஆவணங்கள் போன்றவற்றை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார்.)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur1-2026-01-05-18-33-18.jpg)
சி.பி.ஐ.: இவ்வளவு கூட்டம் நாமக்கல்லில் இருந்து வந்திருக்காங்க. அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
ஜோஸ் தங்கையா: (அதுக்கான வீடியோ ஆதாரங்கள் காண்பித்ததை நினைவுபடுத்துகிறார்.) ஹைவேஸ்ல இரண்டு இடத்துல போலீஸ் கூட்டத்தினரை வழிமறைத்ததையும் மீறி அவங்க வந்தாங்க.
ஆதவ் அர்ஜுனா: போலீஸ்தானே கும்ப லைத் தடுக்கணும். அதுதானே அவங்க கடமை.
(குற்றச்சாட்டு வைக்கிறார்.)
அப்போது விசாரணை அதிகாரி முகேஷ் குமார் குறுக்கிட்டு: சரிதான். போலீஸ் தடுக்கிறாங்க. தடுக்கத்தான் முடியும். போலீஸ் அறிவுரை வழங்கும்போது கேட்டுக்கணும். நீங்க கேட்டீங்களா?
(அதற்கு ஆதவ்கிட்ட பதி லில்லை. பதிலின்றி முழிக்கிறார்.)
ஆதவ் அர்ஜுனா: நாங்க கேட்டிருந்த இடத்தைக் கொடுத் திருந்தா இந்தளவு பிரச்சனை வந்திருக்காது.
சி.பி.ஐ.: அந்த இடத்தையெல்லாம் நீங்க பார்த்திருக்கிங்களா?
ஆதவ்: நான் பார்க்கலை.
சி.பி.ஐ.: (நிர்மல்குமாரிடம்): நீங்க இந்த இடத்தையெல்லாம் போய் சுத்திப்பார்த்தீங்களா?
நிர்மல்குமார்: எனக்குத் தெரியாது. நான் பார்க்கலை.
சி.பி.ஐ: நீங்க அந்த இடங்களைப் பார்த்தீங்களா?
புஸ்ஸி ஆனந்த்: இல்லை. லைட் ஹவுஸ், வேலுச்சாமிபுரம் மட்டும்தான் பார்த்தேன். மற்ற இடங்களை எல்லாம் பார்க்கலை.
சி.பி.ஐ.: நீங்க இந்த இடங்கள் லாம் பார்த்திருக்கீங்களா?
மதியழகன்: இந்த இடங்கள் எல்லாம் தெரியும். எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்திருக்கேன்.
(சி.பி.ஐ. காவல்துறையிடம் இதே கேள்வியைக் கேட்க, அவர்களும் இந்த இடத்தையெல்லாம் பார்த்திருக்கோம். நல்லா தெரியும் எனச் சொல்கின்றனர்.)
சி.பி.ஐ. விசாரணை அதிகாரி: அந்த மற்ற இடங் கள் எல்லாம் எவ்வளவு குறுகின இடங்கள் தெரியுமா? நாங்களே அளந்துபார்த்தோம். லைட்ஹவுஸ்ல 2000 பேர்தான் நிற்கமுடியும். 1000 பேர் உட்காரமுடியும். அங்க எம்.ஜிஆர்., ஜெ சிலையெல்லாம் இருக்கு. அங்க கூட்டம் நடந்திருந்தா உங்க தொண்டர்கள் அதுமேலெல்லாம் ஏறி உடைச்சிருப்பாங்க.
(அப்போது டி.எஸ்.பி. செல்வராஜ், 27-ஆம் தேதி தினத்தந்தி நாளிதழ் ஒன்றை சி.பி.ஐ. வசம் எடுத்துக்கொடுக்கிறார். அதில் காலை 12 மணிக்கு விஜய் வருகிறார் என முன்பக்கம் பாதிப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரம் யாருக்கு கேடர்ஸுக்கா என போலீஸ் தரப்பில் கேட்கின்றனர். அதனை சி.பி.ஐ. தரப்பிலுள்ள எஸ்.பி. படம் எடுத்துக்கொள்கிறார். தவிரவும் த.வெ.க. எக்ஸ் பக்கத்திலும் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.)
சி.பி.ஐ. எஸ்.பி.: இந்த விளம்பரம் யார் கொடுத்தா? இதெல்லாம் யார் பொறுப்பு?
ஆதவ்: இதெல்லாம் மதியழகன் பொறுப்பு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur2-2026-01-05-18-33-36.jpg)
சி.பி.ஐ. எஸ்.பி.: மதியழகன் யார்?
மதியழகன்: துணைச்செயலாளர் விக்னேஸ்வரன் பொறுப்பு. காசு கொடுத்து விளம்பரம் கொடுன்னுதான் அவன்கிட்ட சொன்னேன். 12 மணின்னு நான் அவன்கிட்ட சொல்லலை.
சி.பி.ஐ.: ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்குச் செயல்படுவீங்களா?
(த.வெ.க. தரப்பில் பதில் இல்லை. இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது புஸ்ஸி ஆனந்த் தூங்கிவழிய, ஜி.. ஆனந்த் ஜி, என விசாரணை அதிகாரிகள் எழுப்பிக் கேள்விகேட்டனர்.)
சி.பி.ஐ.: 3 மணிக்குதான காவல்துறை பெர் மிஷன் கொடுத்தாங்க. எட்டே முக்காலுக்கு நாமக்கல் வர்றாரு. 12 மணிக்கே கரூர் வர்றதா எப்படி அறிவீச்சீங்க?
புஸ்ஸி ஆனந்த்: பார்ட்டி கேடர்ஸுக் காகத்தான் அறிவிச் சேன்.
சி.பி.ஐ. எஸ்.பி.: அறிவிப்புல பார்ட்டி கேடர்ஸுக்காகன்னு தனி அறிவிப்பு, கட்சி நிர்வாகிகளுக்காகன்னு ஒரு அறிவிப்பு இருக்கா? மொட்டையா விஜய் 12 மணிக்கு வர்றாருன்னுதானே அறிவிச்சிருக்கு?
புஸ்ஸி ஆனந்த்: ஆமா (பதிலளித்தபடியே தூங்கிவிடுகிறார்)
சி.பி.ஐ.: நீங்களும்தானே பெட்டிஷன் கொடுத் திருக்கீங்க, 3 மணிக்குத்தானே பெர்மிஷன் கொடுத் திருக்கு. இப்பவே அறிவிக்கிறீங்களேனு, மேல கேட்டீங்களா?
மதியழகன்: நான் அதையெல்லாம் கேட்கமுடியாது. அவங்க சொல்றதை செய்றது மட்டும்தான் என் வேலை.
(அடுத்து சி.பி.ஐ. பாதுகாப்பு ஏற்பாடுகள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டார்கள். நாமக்கல்ல இருந்து வரும்போதே இரண்டு இடத்துல போலீஸ் தடுக்கிறாங்க, தடுக்கிறதையும் மீறி வர்றாங்க. அந்த வீடியோ இரண்டையும் எடுத்து போலீஸ் தரப்பில் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur4-2026-01-05-18-33-51.jpg)
சி.பி.ஐ.: போலீஸ் தடுக்கணும்னு சொல்றீங்கல்ல.. அவங்க தடுக்கிறாங்கல்ல, சொல்றதை தொண்டர்கள் எங்கேயாவது எப்பவாவது கேட்டாங்களா?
(அப்போது ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் மேல் பழியைப் போட, ஆனந்த் மதியழகன்மேல் பழியைப் போடுகிறார். மதியழகன் விக்னேஸ்வரன் மேல் பழியைப் போடுகிறார்.)
சி.பி.ஐ.: தொண்டர்களுக்கு அடிப்படை வசதிகள் தண்ணீர், பாத்ரூம் ஏற்பாடு பண்ணினாங்களா?
த.வெ.க. தரப்பிலிருந்து பாத்ரூ மெல்லாம் ஏற்பாடு பண்ணலை, தண்ணீர் இருபதாயிரம் பாட்டில் கள் வாங்கிக்கொடுத்தோமென்று கூறுகின்றனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண் ணன்: ஒரேயொரு தடவை டாட்டா ஏஸ்ல தண்ணி கொண்டுவந்தாங்க. கொடுத்தாங்க. காலியானதும் தண்ணி ஏதும் கொடுக்கலை. அப்புறம் பக்கத்துல உள்ள கடைகள்ல வாங்கிக் குடிச்சாங்க. பக்கத்துல இருந்த வீடுகள்ல போய் குடிச்சாங்க. இவங்கள்ல பலர் குடிச்சிருக்கிறதைப் பார்த்துட்டு கடைகளையும் அடைச்சுட்டாங்க. வீடுகளையும் கதவைச் சாத்திட்டாங்க
மதியழகன்: இல்லை அதுக்கப்புறமும் ஆட்களை வெச்சுக் கொடுத்தோம்
சி.பி.ஐ:. யாரை வெச்சு கொடுத்தீங்க?
மதியழகன்: விக்னேஸ்வரனை வெச்சுக் கொடுத்தோம்
சி.பி.ஐ.: கொடுத்தீங்க சரி, அவ்வளவு செருப்பு கிடந்துச்சே, ஏன் பாட்டில்களை பெரிசா காணோம்?
மதியழகன்: பாட்டிலை ஓரமா போட்டிருப்பாங்க.
சிபி.ஐ.: கால்ல போடுற செருப்பை விட்டுட்டுப் போறவங்க, தூக்கி போடுற பாட்டிலை மட்டும் ஓரமா போட்டிருப்பாங்களா?
(இதற்கு த.வெ.க. தரப்பில் பதிலில்லை)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur5-2026-01-05-18-34-05.jpg)
சி.பி.ஐ.: போலீஸ் ஒரு பக்கம் பாதுகாப்பு கொடுத்தாங்க. சரி, நீங்க வாலன்டியர்ஸ் ஏற்பாடு பண்ணினீங்களா?
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்: சபிபுல் லானு ஒரு ரிட்டயர்டு டி.எஸ்.பி. தலைமையில 130 வாலண்டியர்ஸ் வருவாங்க. அவங்க வந்து போலீஸுக்கு உதவியா இருப்பாங்கன்னு சொன் னாங்க. கடைசி வரை ஒருத்தன்கூட வரலை. முனியப்பன் கோயில்ல நிற்கையில் மதியழகனி டம் கேட்டேன். இதோ வர்றாங்க, அதோ வர் றாங்கன்னு சொன்னார். கடைசி வரை வரலை. (இதை சி.பி.ஐ. பதிவு செய்து கொண்டது.)
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்: எஸ்.பி. யுடன் ஒரு மீட்டிங் நடந்துச்சு. அனுமதி கொடுக்கிறதுக்கு முன் கூட்டத்தை எப்படி நடத்துவீங்க, அப்ப பஸ்ஸை எங்க நிறுத்து வீங்கன்னு கேட்டோம். அதை செக்யூ ரிட்டி கமிட்டி முடிவு பண்ணிச் சொல்வாங்கன்னு சொன்னாங்க. செக்யூரிட்டி கமிட்டின்னா யார்னு கேட்டதுக்கு இதுவரை பதில் சொல்ல லை. அ.தி.மு.க. எதிர்க்கட்சிதான். பஸ்ஸை நாங்க சொன்ன இடத்துல நிப்பாட்டினாங்க. நாங்க சொன்னதைக் கேட்டுக்கிட்டாங்க.
(அதுக்கான ஆடியோ வீடியோ எல்லாத்தையும் போலீஸ் காண்பித்தது.)
எஸ்.பி. ஜோஸ் தங்கையா, நிர்மல்குமார்ட்ட எத்தனை முறை பேசியிருக்கிறார் என்ற தன்னோட கால் டீட்டெய்லை சி.பி.ஐ.யிடம் கொடுத்தார். அடுத்து போலீஸ், டி.எஸ்.பி. எல்லாரும் கையைக் காட்டி மறைக்கிற வீடியோவை 65 பி சர்டிபிகேட்டோட போலீஸ் காண்பித்தது. அ.தி.மு.க. கூட்டம் நடத்தும்போது கூட்டத்தைப் பார்த்துப் பேசியது, விஜய் கூட்டத்துக்கு மத்தியில போய் பேசினார், கூட்டத்துக்கு மத்தியில போகாதீங்கன்னு பலமுறை சொன்னது போலீஸ் என்பதையும் காவல்துறை பதிவுசெய்தது.
இதற்கிடையில் கரூரில், விஜய்யின் கேரவனில் இருந்து ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை ஏ.ஐ. துணையுடன் சில மாறுதல்கள், எடிட்டிங்குக்கு உட்படுத்தி ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி யிருப்பார்கள் என்ற சந்தேகம் காவல்துறைக்கு இருக்கிறது. அதை சி.பி.ஐ. கைப்பற்றி விசாரிக்கவேண்டும் என விரும்புகிறது. அதேபோல, அடுத்தகட்டமாக விஜய்யை அழைத்து விசாரிக்கும்போது கேரவன் வீடியோவை ஏன் ஒப்படைக்கவில்லை என்பது பற்றிய கேள்விகள் சி.பி.ஐ. தரப்பில் பிரதானமாக இருக்கும் என சி.பி.ஐ.க்கு நெருக்கமானவர்கள் அழுத்தமாகச் சொல்கிறார்கள். அதை ஒப்படைக் காத பட்சத்தில் அதற்காகவே ஒரு ரெய்டுகூட நடத்தப்படலாம். இதுதவிர போலீஸ் தரப்பிலிருந்து இன்னும் சில ஆவணங்களையும் சி.பி.ஐ. கேட்டிருக்கிறதாம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur3-2026-01-05-18-34-20.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/vijay-karur-2026-01-05-18-32-45.jpg)