கரூர் துயரம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு தனது முகத்தைக் காட்டியிருக்கிறார் விஜய். முகத்தை அப்பாவியாய் எப்படி வைத்துக் கொள்ளலாம் என மூன்று நாட்களும் ரிகர்சல் எடுத்துக்கொண்டிருந்திருக் கிறார். அப்படி ஒரு அப்பாவி முகத் தோற்றத்தில் காணொலியை வெளி யிட்ட விஜய், "சி.எம். சார், பழி வாங்கவேண்டுமென்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய் யுங்கள்; என் தொண்டர்களை விட்டு விடுங்கள்''’என்று சொல்லியிருப்பது, பலத்த கண்டனங்களை ஏற் படுத்தியிருக்கிறது.
நடத்திய தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடுவதற்கு எந்த முயற்சியும் அவரது பேச்சில் இல்லை. குறைந்தபட்சம், "நடந்த துயரத்திற்கு நானே காரணமாகிவிட்டேன் ; இனி கவனமாக இருப்பேன்; என்னை மன்னித்துவிடுங்கள்' என பொறுப் பேற்கும் வகையில் ஒரு வார்த்தை கூட விஜய்யிடமிருந்து வரவில்லை. இது அவரது குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது. ஜனநாயகன் விஜய், பிணநாயகனாகியிருக்கிறார்.
பொறுப்பேற்கும் பொது புத்திகூட இல்லாத விஜய்யை, முதல்வர் பழிவாங்குகிறாராம். ஆப்ட்டரால் விஜய் ஒரு நடிகன். அவரை பழிவாங்க வேண்டிய அவசியம் முதல்வருக்கு என்ன இருக்கிறது? அவருக்கெல்லாம் நீ போட்டியா, என்ன? நான்சென்ஸ். அரசியல் கட்சியை துவக்கி, நாலு ரவுண்ட் வந்துவிட்டால் அவர் தலைவராகி விடுவாரா? முதல்வர் பழி வாங்குகிறார் என பைத்தியக்காரன்கூட சொல்லமாட்டான். ஆனால், விஜய் சொல்கிறார் எனில் அந்த பைத்தியத்திலும் பெரிய பைத்தியக்கார னாக இருக்கிறார் என்று தான் அர்த்தம்' என்கிற கண்டனங்கள் பெரும் பாலான ஜனநாயக சக்தி களிடமிருந்து எதிரொலித்த படி இருக்கிறது.
இந்த நிலையில், கரூர் துயரத்தை மையப்படுத்தி கூட்டணிக்குள் விஜய்யை இழுத்துக் கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறது பா.ஜ.க. இதற்காக டெல்லி எடுத்த அஸ்திரம் சி.பி.ஐ. விசாரணை.
இதுகுறித்து பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "2026 சட்டமன்ற த் தேர்தலிலும் தி.மு.க.தான் ஜெயிக்கும்; ஆட்சி மாற்றம் இல்லை என்கிற ரிப்போர்ட்தான் சமீபகாலமாக பா.ஜ.க. தலைமைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல். இதனை ஜீரணிக்க முடியாவிட் டாலும் கள நிலவரத்தைப் புரிந்துகொண்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. வை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அது நிறைவேறாமல் இழுத்தபடியே இருக்கிறது.
இதனையடுத்து, விஜய்யை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வர திட்டமிட்டனர். இதற்காக ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அடிப்படையில் தான் யார் என்பதை அவர்களிடம் மனம் திறந்த விஜய், "இயற்கையாகவே உங்களுடன் இணைவதற்கு சாத்தியமில்லை; என்னைச் சுற்றியிருப்பவர்களை வைத்து நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கே தெரியும்' என, தான் யார் என்பதை மறைமுகமாக உணர்த்தினார் விஜய்.
அவரது திமிர்த்தனமான பேச்சினை ஜீரணித்துக்கொண்ட பா.ஜ.க., நேரம் வரும்போது விஜய்யை டீல் செய்துகொள்ள லாம் என அமைதியானது. இத னால், 2026-ல் தி.மு.க.வை வீழ்த்துவதை விட, 15 எம்.எல். ஏ.க்களாவது பா.ஜ.க.விலிருந்து இந்தமுறை சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தத் தொடங்கியது
இப்படிப்பட்ட சூழலில்தான் கரூர் துயரம் நடக்க, விஜய்யை தூக்கினால் தி.மு.க.வை வீழ்த்திவிடலாம்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டுவந்துவிட முடியும் என கணக்கிட்ட தமிழக மாஜி தலைவர் அ.மலை, அவசரம் அவசரமாக களத்தில் குதித்தார், டெல்லியை தொடர்புகொண்டார். பகீரத முயற்சியில் அமித்ஷாவிடம் பேசும் வாய்ப்பு அ.மலைக்குக் கிடைத்தது. "விஜய்யை நான் கொண்டுவருகிறேன்' என வழக்கம்போல உதார்விட்டார். "முயற்சித்துப் பாருங்களேன்' என சொன்னது டெல்லி. இதனையடுத்து, விஜய்யிடம் பேசியிருக்கிறார் அ.மலை.
இப்போதெல்லாம் பயந்துபோய்க் கிடக்கும் விஜய், எதைத் தின்றால் பித்தம் தெளியும் கதையாக, முக்கிய நபர்கள் யார் தொடர்பு கொண்டாலும் உடனே பேசுகிறார் (கரூர் துயரத்திற்கு முன்பு வரை, தன்னை ஒரு ஜெயலலிதாவாகவே வரிந்து கட்டிக்கொண்டு அவரது மனநிலையில் இருந்துவந்தார் விஜய். எவ்வளவு பெரிய அரசியல் தலைவ ராக இருந்தாலும் அவர்களிடம் பேச மறுத்துவிடுவார். அவரது தொடர்பு கிடைக்க பலநாள் காத்திருக்க வேண்டும். அவ்வளவு மமதை).
அந்த வகையில், விஜய்யுடன் பேசினார் அ.மலை. ஆனால், பெரிய அளவில் இதற்கு பிடிகொடுக்கவில்லை விஜய். அதேசமயம், டெல்லியும் தனது ரூட்டில் முயற்சித்தது. அதாவது, அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய முக்கிய பிரமுகர் ஒருவர், விஜய்யிடம் பேசி எதார்த்தத்தை புரிய வைத்திருக்கிறார்.
அப்போது, "டெல்லியின் சப்போர்ட் உங்களுக்கு இல்லை யெனில், அருணா ஜெகதீசன் கமிசனின் ரிப்போர்ட்டை அடுத்த ஒரு மாதத்தில் பெற்று, அதனடிப்படையில் உங்களையும் வழக்கில் சேர்த்து கைதுசெய்ய தி.மு.க. அரசு கொஞ்சம்கூட தாமதிக்காது.
அந்த சூழல் வந்தால், ஒரு நாள்; ஒரு பொழுதுகூட உங்களால் ஜெயிலில் இருக்க முடியாது. உங்க கட்சிக்குத் தடை விதிக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் தி.மு.க. முறையிடும். அப்போது டெல்லியும் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தால், உங்கள் எதிர்காலம் என்ன? என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க. தேசியத் தலைமையின் ஆதரவு இல்லாமல் உங்களால் இனி அரசியல் செய்ய முடியாது. டெல்லியின் விருப்பம்ங்கிறது, பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வரவேண்டும். குறிப்பாக, பா.ஜ.க. வழியாக வரவேண்டும் என்பதுதான்'' என விரிவாகப் பேசி அழுத்தம் கொடுத்துள்ளார் அந்த பிரமுகர்.
இது ஒரு வகையில் அழுத்தமான மிரட்டல்தான். இதில் விஜய்யின் சப்தநாடியும் ஒடுங்கிப்போயிருக்கிறது. ஒருவேளை விஜய் எதிர்பார்க்கிற சி.பி.ஐ. என்கொயரிக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தாலும், டெல்லியின் ஆதரவு இல்லையெனில், சி.பி.ஐ. என்கொயரி கூட விஜய்க்கு எதிராகப் போகலாம். அதுவே ஆதரவு இருந்தது எனில், என்கொயரி விஜய்க்கு சாதகமாகவும் அமையலாம். இதெல்லாம் சொல்லப்பட்டதும், வேறு வழியில்லாமல் டெல்லியின் விருப்பத்துக்கு ஓ.கே. சொன்ன விஜய், "ஆனால் இப்போதைக்கு என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது; நேரம் வரும் போது இதனை (கூட்டணி) அறிவிக்கிறேன். இதற்கு நீங்கள் சம்மதியுங்கள்' என தெரிவித்திருக்கிறார். இந்த விசயங்கள் எதுவும், விஜய்க்கு ஆலோசகர் கள் என சொல்லிக்கொண்டு அவரை தவறாக வழிநடத்தும் கோஷ்டிகளுக் குக் கூட தெரியாது. அந்தளவுக்கு ஒன் டூ ஒன் என்றளவில் பேசி முடித் திருக்கிறது டெல்லி. இதனையடுத் துத்தான், கரூர் துயரத்துக்கு யார் காரணம்? என ஹேமமாலினி தலைமையில் பா.ஜ.க.வின் தோழமை கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது டெல்லி.
இதற்கிடையே, "அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு கூட்டணி, சீட் பகிர்வு குறித்து புதிதாக ஒரு எண்ணிக்கையை மையப்படுத்தி பேச்சுவார்த்தையையும் தொடங்கியிருக்கிறார் அமித்ஷா. அப்போது சொல்லப்பட்ட விசயங்கள், எடப்பாடிக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது'’என்று விரிவாக சுட்டிக்காட்டுகின்றனர் மேலிட தொடர்பாளர்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, கரூர் சம்பவத்தை வைத்து தன்னையும் தனது கட்சியையும் முடக்க தி.மு.க. திட்டமிடுவதாக நினைக்கும் விஜய், ஒரு சிக்கலான சூழலில் தனக்காக எடப்பாடி குரல் கொடுத்தார் என்பதை கணக்கில் கொண்டிருக்கிறார். இனி தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமெனில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் உதவி அவசியம் எனவும் உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து, எடப்பாடியிடம் விஜய் தரப்பில் பேசப்பட்டி ருக்கிறது. அப்போது, விஜய்யை பா.ஜ.க. இழுக்கிறது என ஏற்கனவே அறிந்திருக்கும் எடப்பாடி, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு நம் மூலமாகத்தான் விஜய் வரவேண்டும் என்கிற திட்டத்தை ஆலோசித் தார். கரூர் சம்பவத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியில் தத்தளிக்கும் விஜய், எப்படியும் கூட்டணிக்கு வந்துவிடுவார் எனும் யோசனையில் இருந்தார். அதற்கேற்ப விஜய் தரப்பிலிருந்து பேச முயற்சித்த நிலையில், "25 சீட் வரை தரலாம்; மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்... சம்மதமா?' என்றிருக்கிறார் எடப்பாடி. அதற்கு விஜய் தரப்பினர் எதுவும் சொல்லவில்லை.
அதேசமயம், ஏற்கனவே விஜய்யை கூட்டணியில் சேர்ப் பது தொடர்பாக எடப்பாடி யிடம் பேசிய அமித்ஷா, "தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜய் யை கொண்டு வருவது எங்கள் பொறுப்பு. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 134 தொகுதிகளை அ.தி.மு.க. வைத்துக்கொள்ள லாம். மீதமுள்ள 100 தொகுதி களை பா.ஜ.க.விடம் ஒப்படைத்து விடுங்கள். விஜய் உட்பட மற்றவர்களுக்கு நாங்கள் சீட் ஒதுக்கிக் கொடுக்கிறோம்'' என சொன்னதில் ஏக அப்-செட் டானார் எடப்பாடி.
மேலும், மத்திய அரசு அனுப்பி வைத்த ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் யாரும் இல்லாதது எடப்பாடிக்கு வருத்தம். இந்தச் சூழலில், "கூட் டணிக்குள் கூட்டணி போடும் விதமாக சீட் பேரங்களை விஜய்க் காக டெல்லி தொடங்கி யிருப்பதும் எடப்பாடிக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது'’ என் கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள்.
கரூர் துயரத்தை வைத்து நெருக்கியதில் பா.ஜ.க.விடம் சரணடைந்திருக்கிறார் விஜய். ஆனால், யார் மூலம் கூட் டணிக்குள் அவர் வரவேண்டும் என்பதில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே குஸ்திகள் தொடங்கியிருக் கின்றன.