அமைச்சர்கள் ஐ.பெரிய சாமி, சக்கரபாணி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்ட திருமண நிகழ்வில், அமைச்சர் ஐ.பெரியசாமியும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லினும் காங்கிரஸை கலாய்த்து கலகலப்பாக்கியது பேசு பொருளானது!
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின், அன் றைய தினமே கட்சிக்காரர்களு டன் கலந்துரையாடும் நிகழ்வை யும் நடத்தினார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் ஸ்ரீகாந்த் திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த திருமண நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, காங் கிரஸ் எம்.பி. ஜோதிமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் காந்திர ôஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
"இந்த திருமண நிகழ்ச்சிக்கு தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியில் துணை முத லமைச்சரை அழைக்கலாமென்று வீராச்சாமிக்கு நாங்கள் கூறி னோம். நாம் தேதி கேட்டதும் உடனடியாக தேதி கொடுத்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர், மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் துணை முதலமைச்சரை வேறெங்கும் நம்மால் பார்க்க முடியாது. அதுதான் தி.மு.க. இங்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி இருக்கிறார். காங்கிரஸில் பெரிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள். அவர்களைக் குறைத்துக் கூறவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரையில் சாமானியர்களை உயர்த்திப் பிடித்து மதிப்பளிக்கக்கூடிய இயக்கம். அதுதான் இந்த இயக்கத்தினுடைய சிறப்பு'' என்ற அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சு பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், மேடையி லேயே நெளியும் நிலை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு!
இதனை சமாளிக்க வேண் டிய சூழல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு! அவரோ, "வீராசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து திருமணம் நடத்த வேண்டும் என ஆசைப் பட்டார். பல்வேறு தேர்தல் நிகழ்ச்சிகள் இருப்பதால் அவரை அழைக்க முடியாமல், வேறு வழியில்லாமல் என்னை அழைத் தார்கள். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் எழுச்சியான வரவேற்பு உள்ளது. இந்த திரு மண விழா அரங்கிற்கு வரும் போதுகூட எழுச்சியான அன்பை பார்த்துவிட்டுத்தான் வந்தேன். என்னுடைய கைகளுடன் இந்த நிகழ்ச்சி மேடைக்கு நான் வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. கை நம்மைவிட்டுப் போகாது! நான் என்னுடைய கையை கூறினேன். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை கூறினேன்!'' என ஐ.பெரியசாமிக்கு பதிலளிக் கும் விதமாகப் பேசினார் துணை முதல்வர். துணை முதல்வரின் பேச்சு ஜோதிமணிக்கு ஆறுத லளிப்பதாக இருந்தது!
-நா.ஆதித்யா