"ஹலோ தலைவரே.. அ.தி.மு.க. பொதுக்குழுவுல சி.வி.சண்முகம் பேச்சை எடப்பாடி ரசிக்கலையாம்.''”

Advertisment

"அரசியல் புரோக்கர்கள் அ.தி.மு.க. தலையெழுத்தைத் தீர்மானிப்பதான்னு சண்முகம் குறிப்பிட்டதைச் சொல்றியா?''”

Advertisment

“"ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.க. பொதுக் குழுவைப் பொறுத்தவரை எடப்பாடிக்கு ஏக சந்தோஷம். அவர் எதிர்பார்த்தபடியே கூட்டம் ஏக தடபுடலா நடந்திருக்கிறது. ஆனால் சி.வி. சண்முகம் பேசிய பேச்சை எடப்பாடி ரசிக்கலை யாம். "அரசியல் புரோக்கர், பத்திரிகையாளர் எனச் சொல்லிக்கொள்ளும்' என சண்முகம் குறிப்பிட்ட நபர் வேலுமணிக்கு வேண்டியவராம். இந்த பேச்சை வேலுமணிக்கும், சி.வி.சண்முகத்துக்குமான நேரடி மோதல் என அ.தி.மு.க.வி லேயே பேசிக்கிறாங்க.''

"திருப்பரங்குன்றம் விவகாரத்துல உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரா இருக்குதாமே உண்மையா?''”

Advertisment

rang6

"நிஜம்தான் தலைவரே, இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அரசுக்கு உளவுத் துறை அனுப்பிய ரிப்போர்ட் டுல, இந்தப் பிரச்சனைக்கு உள்ளூர் மக்கள் ஆதர வில்லை. தவிரவும் உள்ளூர் பா.ஜ.க. இந்தப் பிரச்சனைக்கு பெரிய அழுத்தம் கொடுக் கலை. திருப்பரங்குன்றம் விவகாரத்துல மாநில அரசு தீபம் ஏற்றாம இருந்தா பரவாயில்லை. வழக்கமா தீபமேத்துற இடத்துல மாநில அரசு தீபம் ஏத்திடுச்சு. தவிரவும் சமூக வலைத்தளங்கள்ல தி.மு.க.வினரும் பொதுவான நபர்களும் தர்கா பக்கத்துல இருக்கிற தூணை, அதனோட சர்வே எண்ணோட எடுத்துப் போட்டு அரசுக்கு சப்போர்ட் செய்யுறாங்க. தமிழக முதல்வரும் மதுரை மக்களிடம், மதுரைக்கு எய்ம்ஸ் இன்னும் வரலை, மெட்ரோ தரமாட் டேங்கிறாங்க, ஆனால் தீப விவகாரத்தை வெச்சு மக்களைப் பிரிக்கப் பார்க்கிறாங்கன்னு பேசுறார். இந்த விஷயமும் எடுபடுது. இந்த வழக்குல மனுதாரர் ஆதாரமா கொடுத்த புத்தகத்துலேயே தீபத்தூண்ல ஆஞ்சநேயர் உருவம் இருக்கும்னு குறிப்பிட்டிருக்கார். அந்த ஆஞ்சநேயர் உருவம் உச்சிப்பிள்ளையார் கோயில்ல இருக்கிற தூணில் இருக்கே தவிர, தர்கா பக்கத்துல இருக்கிறது தூணில் கிடையாது. ஆக இந்த விஷயம் பா.ஜ.க.வுக்கு எதிராத் தான் போகுது. இந்துக்கள் யாரும் இதைப்பற்றி பெரிசா பேசலைன்னு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்குதாம்.''”

"நயினார் நாகேந்திரனின் தலைமை மீது தேசிய பா.ஜ.க. தலைமை அதிருப்தி யடைந்திருப்பதா சொல்றது உண்மை தானா?''”

rang3

"நயினாரை பல சமயங்களில் தொடர்புகொள்ளவே முடியவில்லை. குறிப்பா, மாலை ஆறு மணிக்குமேல் அவரது எண்ணை ரீச் செய்யவே முடியவில்லை. அவர் அ.தி. மு.க. -பா.ஜ.க. கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என பா.ஜ.க. தேசியத் தலைமைக்கு புகார் வந்திருக்காம். இதுபற்றிய கேள்விக்கு ஆறு மணிக்கு மேல் என் சொந்த வேலை களைக் கவனிக்கிறேன் எனச் சொன்ன பதிலில் தலைமை திருப்தியடையவில்லை. எனவே அவரை தலைமை கூர்ந்து கவனித்துவருகிறதாம்.''”

“"பா.ஜ.க. மாஜி தலைவர் அ.மலை எடப்பாடியிடம் போனில் பேசியிருக் கிறாராமே''”

“"என் காதுக்கும் செய்தி வந்துச்சு தலைவரே, நீங்கள் எதிர்ப்பதால்தான் பா.ஜ.க. தலைமை என்னை நிராகரிக்கிறது. என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். டி.டி.வி.தினகரனையும் ஓ.பி.எஸ்.ஸையும் உங்களுக்குக் கீழே அ.திமு.க. அணிக்கு கொண்டுவருகிறேன் என டீல் பேசியிருக்கிறாராம். ஓ.பி.எஸ்.ஸையும், டி.டி.வி.தினகரனையும் தனக்கு எதிராக அ.மலைதான் நிறுத்தியிருக்கிறார் என்பது எடப்பாடிக்கு தெரியும். அதனாலும், அவரே இறங்கிவந்து கேட்டதாலும், அ.மலை டிமாண்டுக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார். இதையடுத்து அமித்ஷாவை தொடர்புகொண்டு பேசிய அ.மலை, நான் டி.டி.வி.தினகரனை வழிக்குக் கொண்டுவந்துவிட்டேன் எனத் தெரிவித்திருக் கிறார். இனிமேலாவது கட்சியில் தேசிய அளவில் தனக்கு ஒரு பதவி கிடைக்குமென எதிர்பார்க்கிறார் அ.மலை. அதேசமயம், எடப்பாடியை செல்லாக்காசு, விவரமில்லாதவர் எனப் பலவும் பேசியவர் அ.மலை. இன்று பதவிக்காக அதே எடப்பாடியின் காலில் விழுந்து கெஞ்சவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் என நமட்டுச் சிரிப்போடு பேசிக் கொள்கிறார்கள் பா.ஜ.க.வினர்.''”

“"புதுச்சேரியில் விஜய்யோட ரேஷன் கடை பேச்சுதான் சமூக வலைத்தள ட்ரெண்டாமே?''”

“"அரசியல்லயும் அதுதான் ட்ரெண்ட் தலைவரே! புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லைனு சொன்னார். நல்லவேளை பிராந்திக் கடை இல்லையென சொல்லாம விட்டுட்டார் என அவரைக் கலாய்க்கிறார்கள். புதுச்சேரியில் 3,53,000 ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கிறார்கள். 300-க்கும் மேலான ரேஷன் கடைகள் இருக்கின்றன. இதெல்லாம் தெரியாமல் புஸ்ஸி ஆனந்த் எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார். அதோட பாஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு ஆதரவா, அவருக்கு பதவி கொடுக்காதது பற்றியும் பேசினார். சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அந்தக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுபவர் ஜான்குமார். எதை எழுதிக் கொடுத்தாலும் பேசிவிடுவதா? என த.வெ.க.வினரே விஜய் பேச்சு பற்றி அதிருப்தியடைஞ்சிருக் காங்களாம்.''”

"வரும் புத்தாண்டில் காவல்துறையில் பலருக்கும் பதவி உயர்வு வரப்போகுதாமே''”

"வரும் ஜனவரியில் காவல்துறையில் பலருக்கும் புரமோஷன் கிடைக்கப்போகிறது.'' எஸ்.பி.யிலிருந்து டி.ஐ.ஜி., டி.ஐ.ஜி.யிலிருந்து ஐ.ஜி. என பல மட்டத்திலும் பதவு உயர்வு அளிக்கப் போகிறது அரசு. அதற்காக புதிதாக பல சிறப்புப் பதவிகள் உருவாக்கப்படுகிறது. பலரையும் திருப்திபடுத்தும் வகையிலும் புத்தாண்டுப் பரிசாகவும் இந்த பதவி உயர்வுகள் இருக்கும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.”

"அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனை அவமானப் படுத்திட்டதா அ.தி.மு.க.விலே எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்குதே''”

rang2

"இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், வருடத்திற்கு இரண்டு முறை, கட்சியின் பொதுக்குழு -செயற்குழுவைக் கூட்டவேண்டும். அதன்படி, டிசம்பர் 10-ஆம் தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவை சென்னையில் கூட்டியிருந்தார் எடப்பாடி பழனிச் சாமி. அவைத்தலைவர் தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்பது அ.தி.மு.க. வின் சட்டவிதி. அந்தவகையில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் என அ.தி.மு.க. அறிவித்திருந்தது. சமீபகாலமாக உடல்நலம் குன்றி  ஓய்விலிருந்தார் தமிழ்மகன் உசேன். தனது தலைமையில்தான் பொதுக்குழு நடப்பதால், காலதாமதம் செய்யக்கூடாது என காலை 9:30 மணிக்கெல்லாம் பொதுக்குழு நடக்கும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் உசேன். ஆனால், அவரை மேடையேற்றாமல், ஒரு ஓரத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமியை அறிவித்து பொதுக்குழு, செயற்குழுவை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சம்பவம் அ.தி.மு.க.வின் சீனியர் உறுப்பினர்கள் பலரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. எடப்பாடியின் சர்வாதிகாரத்தை இது காட்டுகிறது. மூத்த தலைவர்களில் ஒருவரான உசேனை அவமானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. சீனியர்களையெல்லாம் அவமானப்படுத்தி கட்சியிலிருந்து விரட்ட எடப்பாடி திட்டமிடு கிறாரா? என்கிற கொந்தளிப்பு பொதுக்குழு உறுப்பினர்களிடம் எதிரொலித்திருக்கிறது.''”    

" "தமிழ்நாடு தலைகுனியாது' பரப்புரையின் இரண்டாம் கட்டத்தை தி.மு.க. தொடங்கிடுச் சாமே''”

rang1

" "தமிழ்நாடு தலைகுனியாது -என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' எனும் தி.மு.க. பரப்புரையின் முதல்கட்டமாக 68,463 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பூத் லெவல் அலுவலர் மற்றும் வாக்காளர்களுக்கு  உதவிட  தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் களமிறக்கப் பட்டனர். டிசம்பர் 10-ஆம் தேதி முதல் இந்த பரப்புரையின் இரண்டாம் கட்டத்தைத் துவக்கி யுள்ளது. 1 மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வின் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் அனைவருக்கும், 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கும் சென்று, அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறு வதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப் பட்டுள்ளது. எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1,900-க்கும் மேற்பட்ட கழகச் செயலாளர் களுடன், தி.மு.க.வின்  78  மாவட்டச் செயலாளர் கள், 33 எம்.பி.க்கள், 124 எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் இணைந்து, 68,463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்க வுள்ளனர். ஒவ்வொரு பூத்திலும் தெருமுனைக் கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரை யாடல்கள், வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் நடத்தி, 2021 சட்டமன்றத் தேர்தலைவிட கூடுதல் வாக்குகளுடன் அவரவர் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி, வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக் காட்டவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.''”       

“"ப்ரவீன் சக்கரவர்த்தி -விஜய் சந்திப்பு விவகாரத்துல கதர்ச்சட்டைகளே ப்ரவீன் மீது புகார் தெரிவிச்சிருக்காங்கபோல''”

“"ஆமாம் தலைவரே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு மற்றும் பகுப்பாய்வுத் துறையின் தலைவர் ப்ரவீன் சக்ரவர்த்தி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தினார். ப்ரவீன்-விஜய்யின் இந்தச் சந்திப்பை தி.மு.க. தலைமை ரசிக்கவில்லை. இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சியையும், தி.மு.க.வில் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. கூட்டணிக்குள் இருந்துகொண்டு, தி.மு.க.வின் எதிரியோடு (விஜய்) உறவாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும், நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்றும் காங்கிரஸின் சீனியர் லீடர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், மேலிடத்தின் அனுமதியுடன் விஜய்யை, ப்ரவீன் சந்தித்து அரசியல் பேசியிருந்தால் அது ஏற்புடையதில்லை. அதுகுறித்து தெளிவான விளக்கத்தை மேலிடம் அறிவிக்கவேண்டும். இல்லையேல், கூட்டணிக் குள் சர்ச்சைகள் உருவாவது தடுக்கமுடியாது. அதேசமயம், மேலிடத்தின் அனுமதியில்லாமல் அவர் சந்தித்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ப்ரவீன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலிடத்துக்கு புகார் தெரிவித்துவருகிறார்கள் கதர்ச்சட்டையினர். ஆனால், இந்த புகார்கள்மீது எந்த நடவடிக் கையையும், கருத்தையும் தெரிவிக்காமல் காங்கிரஸ் மேலிடம் இருந்துவருகிறது.''” 

“"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான நடவடிக்கைகளில் தி.மு.க. மும்முரமா இருக்கு போலிருக்கே''”

rang4

"சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வலி யுறுத்தி நாடாளுமன் றத்தில் அவருக்கெதி ராக இம்பீச்மெண்ட் கொண்டுவர தி.மு.க. முயற்சித்துவருகிறது. இதற்காக 120 எம்.பி.க்களின் கையொப்பத்தைப் பெற்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் தந்திருக்கிறது தி.மு.க. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எளிதாக நீக்கிவிட முடியாது. இதற்கான நெறிமுறைகளும், விதிகளும் கடுமையானவை. லோக்சபாவில் கொண்டுவரவேண்டுமாயின் 100 எம்.பி.க்களின் ஒப்புதல் அவசியம். அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஒருவேளை சபாநாயகர் திமு.க.வின் இம்பீச்மெண்ட் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் உள்பட ஒரு கமிட்டியை அமைப்பார் சபாநாயகர். அந்த குழு, தங்கள் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் விளக்கம் கேட்டு அதன்பிறகு விவாதம், ஓட்டெடுப்பு, ஜனாதிபதி முடிவெடுப்பு என பல விஷயங்கள் இருக்கிறது. இத்தகைய நடைமுறைகள் இருப்பதால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக தி.மு.க. கொடுத்துள்ள இம்பீச்மெண்ட் சாத்தியமாகுமா? என்பது உற்றுக் கவனிக்கவேண்டிய விசயம் என்கிறார்கள் பார்லிமெண்ட் சட்டவிதிகளை அலசும் சீனியர் வழக்கறிஞர்கள்.''”   

"திடீர்னு போடி ஏலக்காய் விவகாரம் சூடுபிடிக்குதே என்ன விவரம்''”

"அதுவா தலைவரே, கடந்த 2025 ஆக.23-26 இதழிலேயே, ‘"பினாமி பெயரில் களைகட்டும் ஏலக்காய் வியாபாரம். பின்னணியில் வருமான வரித்துறையா?'’என்ற தலைப்பில், முறையான ஆவணமின்றி விற்பனை செய்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதனையே லீடாகக் கொண்ட அமலாக்கத்துறையினர் ஏலக்காய் மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரணையைத் துவங்கினர். இந்நிலையில் சுமார் 300 டன் ஏலக்காய் மூட்டைகளை போடியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு முறையான ஆவணமின்றி விற்பனை செய்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதியன்று தேனி மாவட்டம் போடி நகராட்சி தி.மு.க. தலைவர் ராஜராஜேஸ்வரியின் கணவரும் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான சங்கரிடம் விசாரணையைத் தொடங்கினர். இதேவேளையில், கேரளாவில் சேத்துக்குழி என்னுமிடத்தில் மற்றொரு அமலாக்கத்துறை சோதனையில் சுமார் 1200 கோடிவரை மோசடி நடந்திருப்பதும் தெரியவந்ததால், கடந்த 6-ஆம் தேதி வருமானவரித்துறை, வணிகவரித்துறையோடு, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அமலாக்கத்துறையும் இணைந்து திடீர் சோதனையில் இறங்கியிருக்காங்க. சங்கருடன் நெருங்கிய தொடர்பிலுள்ள தனியார் பள்ளி தாளாளர் வேதா ஜெயராஜ், கவுன்சிலர் முருகேசன், முன்னாள் நகராட்சி தலைவரும், ஓ.பி.எஸ். அணியின் நகரச் செயலாளருமான பழனிராஜன், சங்கரின் கார் ஓட்டுநர் வடிவேலு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்திருக்கு. இத்தனைக்கப்புறமும், ‘"இந்த விசாரணை என்னைக் குறிவைத்து அல்ல, நான் வெறும் அம்புதான். நான் சிக்கிக்கொண்டால் அவர்களையும் சிக்கவைப்பேன்' ’என்றிருக்கிறாராம்.''

“"மாநகராட்சி விளம்பர போர்டு யுக்திக்கு நீதிமன்றம் செக் வச்சிருக்கு போலிருக்கே''…”

“"உங்க காதுக்கும் விஷயம் வந்துடுச்சா தலைவரே, கோவை மாநகராட்சியின் மரக்கடை பகுதியில் அதிகமான வணிகக் கடைகள் இருக்கின்றன. சமீபத்தில் அப்பகுதியில் ஒரு கட்ட டத்தை வட இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி யிருக்கிறார். அந்த கட்டடத்தின் முன் மாநகராட்சியின் விளம்பரப் பலகை வைக்காமலிருக்க சில லட்சங்களை தி.மு.க. கவுன்சிலரின் ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, கட்டடத்தின் முன் பேருந்து நிலையம் அமைக்க விருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகாரளித்தும் நட வடிக்கை இல்லாத தால், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றுள்ளார். தனியார் கட்டடம் முன் எப்படி நீங்கள் பேருந்து நிலையம் வைப்பீர்கள்? அரசு இடம் இல்லையா? எந்த நோக்கத்திற்காக செய்கிறீர்கள்? இதுவே தொடர்ந்தால் ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து அனுப்பியுள்ளார் நீதிபதி.''”

"வழக்கமா டாஸ்மாக் எக்ஸ்ட்ரா வசூலைப் பற்றிதான் மற்றவங்க முறையிடுவாங்க, இப்ப டாஸ்மாக்காரங்களே புலம்புறதா செய்தி வருதே?''”

“"வல்லவனுக்கு வல்லவன் உண்டுங் கிறதுதானே உண்மை தலைவரே. கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வடக்கு, தெற்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கென தனியாக 2 டி.எம். அதிகாரிகள் இருக்கின்றனர். தெற்குப் பகுதியிலுள்ள 129 கடைகளுக்கு டி.எம். ஆக இருப்பவர் ஜோதிசங்கர். இவருடைய உதவியாளர் எனக் கூறிக்கொண்டு அன்பு என்பவர் கடைகள், பார்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்காம். இருக்கின்ற பணத்தைக் கொடுத்தால் இவர் வாங்கமாட்டார். ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை அவரிடம் கொடுத்தால்தான் நாங்க பிழைப்பு நடத்த முடியும். பார் நடத்த அரசுக்கு டி.டி., போலீ ஸிற்கு மாமூல், அது தவிர வட்டச் செயலாளர் மாமூல். இதனைத் தாண்டி இந்த மாமூல். நாங்க எங்கதான் போகமுடியும்? இதுகுறித்து யாரிடம் முறையிடுவது? எனப் புலம்பிவருகின்றனர் டாஸ்மாக், பார் கடைவாசிகள்.''”

"மாஃபா.பாண்டியராஜன், த.வெ.க. பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறதா செய்தி அடிபடுதே''…”

rang5

"ஓ.பி.எஸ். என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதற்கு முன்னதாகவே, அவரின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதா செய்தி வந்துச்சு. ஓ.பி.எஸ். ஏற்கெனவே, தி.மு.க.விடம் பேசிவந்தார். ஒருவேளை அவர் அந்த முடிவெடுத்தால், தன்னுடைய அடுத்த இன்னிங்சை த.வெ.க.விலிருந்து ஆரம்பிக்க முடிவெடுத்திருந்தார் வைத்தி லிங்கம். இந்நிலையில், ஓ.பி.எஸ்.ஐ டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்தியது போல, சி.எம்.டி.ஏ. வழக்கை காரணம்காட்டி டெல்லி மேலிடம் வைத்திலிங்கத்துக்கு செக் வெச்சிருக்காம். அதேசமயம், எடப்பாடி பக்கமிருக்கும் மாஃபா பாண்டியராஜன் த.வெ.க.வில் துண்டுபோட்டு வைக்கும் முயற்சியிலிருப்பதாவும் தகவல் வருது. இது ஒருபக்கமிருக்க, 2026 தேர்தலில் அ.தி.மு.க. வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நமக்குக் கிடைக்கும் என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடியார். அதனால ஒருசில தினங்களில் ஓ.பி.எஸ். இணைப்பு குறித்து முடிவெடுக்கப்பட லாம் என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.''” 

“"சரி, நானும் ஒரு செய்தி சொல்றேன்.. சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கூட் டணியில் கட்சிகள் தங்களுக்கான தொகுதியை உயர்த்திக் கேட்க ஆயத்தமாகிவருகின்றன. கூட்டணிக்குள் புதிதாக நுழைந்திருக்கும் மக்கள் நீதி மையம், திருவெறும்பூரில் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துச்சு. கட்சியை வலுப்படுத்த இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பெறவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் தங்களுக்கு ஒரு இடத்தை உறுதிசெய்ய தொழிலதிபர் முருகானந்தம், கவிஞர் சினேகன், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா எனப் பலரும் கமலிடம் முண்டியடித்து வருகிறார் களாம்.''”