ரிக்கிராதன் பண்டிட் வெற்றிவேல். மேற்கு மண்டலம் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். சிங்கப்பூர் யூ டியூப்களில் விஜய் வெற்றி பெறுவார் என பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யை சந்திக்கும் அனைவரும் விஜய்க்கு சால்வை போடுவது போல புகைப்படம் வரும். அனால் விஜய், இவருக்கு சால்வை போடுகிறார். அத்துடன் இவரை மாநில செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் என விஜய் அறிவிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு உதயநிதியின் ஜாதகத்தை ஆராய்ந்து உதயநிதிதான் அடுத்த முதல்வராக வருவார் என யூ டியூபில் பிரச்சாரம் செய்துவந்தவரும் இவர்தான். திடீரென விஜய் முதல்வராவார் என தனது பிரச்சாரத்தை மாற்றிக்கொண்டார். 

Advertisment

யார் இந்த நபர்? என விசாரித்தபோது, ஊத்துக்குளி பகுதியில் மரத்தடியில் கைரேகை ஜோஸ்யம் பார்ப்பதுதான் இவரது அடிப்படைத் தொழில். ‘நான் இப்போதுதான் அமெரிக்க 

Advertisment

அதிபர் ட்ரம்பிடம் பேசினேன்’ என அளந்துவிடுவார். 

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவால் தண்டனை அளிக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்தார். அவரை திருப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் சந்தித்தனர். அவர்களிடம், “"நான் இந்த வழக்கிலிருந்து வெளியே வருவது கடினம். என்னுடன் இருக்கும் நபர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள். இத்துடன் எனது அரசியல் வாழ்வு முடிந்தது'’என ஜெயலலிதா மிகமிக விரக்தியுடன் பேசினார். ‘ஜெ.வின் வார்த்தைகள் விரக்தியின் உச்சியில் இருக்கவே, அந்த கோவை தம்பதியர் வெற்றி வேலை அழைத்துவந்து ‘ஜெ.வுக்கு அறிமுகப் படுத்தினார்கள். ‘"அடுத்த ஆட்சி உங்களதே அம்மா'’என வெற்றிவேல் அடித்துவிட... அது இயல்பாக அப்படியே நடந்துவிட்டது. அன்று முதல் ‘ஜெ.வின் நன்மதிப்பைப் பெற்றார் வெற்றிவேல். மும்பையிலிருந்த டி.டி.வி. 

தினகரன் சென்னைக்கு வரமுடியாமல் தவிக்க, அவரிடமும் அதே தம்பதியினர் இவரை அழைத்துக்கொண்டுபோய் காட்டினார்கள். தினகரன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மன்னார்குடி கும்பலுக்கே ஜோசியம் சொன்ன வெற்றிவேலை, சசிகலாவுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. வெற்றிவேலை பினாமியாக வைத்து கோடிக் கணக்கில் அவர் பேரில் சொத்து வாங்கிக் குவித்தார் சசி. இதைப் பார்த்த அ.தி.மு.க. பிரமுகர்கள் அனைவருக்கும் ஜோசியர் ஆனார். ‘ஜெ.விடம் பேசி காரியம் முடித்துத் தருகிறேன் என அனைவரிடமும் கோடிக்கணக்கான பணத்தை ஆட்டையைப் போட்டார் வெற்றிவேல். இவர் மீதான புகார்கள் கார்டனுக்குப் பறக்க, ஜெ.,’

Advertisment

இவரை கார்டன் பக்கம் வரக்கூடாது என தடை விதித்தார். 

jauy-sasi1

இவர் பெயரில் வாங்கிய கோடிக்கணக்கான சொத்துக்கள் எங்கே என சசிகலா தேட, அவற்றை விற்றுப் பணமாக்கி அதை யாரும் கைப்பற்றிவிடக் கூடாது என சேஃப்டி ஆக்கியிருந்தார் வெற்றிவேல். சசிகலாவின் உறவினர் ராவணன் இவரை தாக்கினார். ராவணன் அடித்த அடியில் கதிகலங்கிப்போன வெற்றிவேல் ஊரை விட்டு ஓடினார். வெற்றிவேல் என்ற தனது பெயரை ராதன் பண்டிட் என மாற்றி  டெல்லியில் செட்டிலானார். இதற்கிடையே மர்மமான முறையில் இவரது மனைவி இறந்துவிட, பல பெண்களுடன் இவர் மீது விதவிதமான பாலியல் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களால் சிங்கப்பூருக்குப் பறந்தார் வெற்றிவேல். அங்கு தனது பெயருடன் ரிக்கி என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார். ரிக்கிராதன் பண்டிட் வெற்றிவேலாகி,  யூ-டியூப்களில் பேச ஆரம்பித்தார். 

டெல்லியில் இவரைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனாவிடம் பிரதமர் அலுவலகத் தொடர்பு களைப் பற்றியும், அங்கு காரியம் முடித்துக் கொடுக்கும் தனது திறமை பற்றி அளந்துவிட்டிருக் கிறார். அதன்பிறகு தனது சிங்கப்பூர் தொடர்புகள் மூலம் விஜய்யை தொடர்புகொண்டு பேசினார். விஜய் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கரூர் மரணங்கள் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு மற்றும் அமலாக் கத்துறை விஜய் மீது நடத்தப்போகும் தாக்குதல் ஆகியவற்றை தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் முறியடிக்க முடியும். கரூர் விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய்யை உட்படுத்தி அவரை சிக்கலுக் குள்ளாக்கும் பா.ஜ.க. அரசின் போக்கைப்பற்றி தனது டெல்லி சோர்ஸ் களிடம் கேட்டு எடுக்கச் சொல்லி யிருக்கிறார் வெற்றிவேல் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். வெற்றிவேலின் இந்த சேவை தங்களுக்குத் தேவை என விஜய்க்கு நெருக்கமானவர்கள் விஜய்க்கு எடுத்துக்கூற, அவரை அழைத்து சால்வை போர்த்தி அவர் யூ டியூப்பில் பேசுவதால் செய்தித் தொடர்பாள ராகவும் மாற்றினார் விஜய். 

இப்பொழுது சென்னை, டெல்லி, சிங்கப்பூர் என பறந்து பறந்து விஜய்யின் சிக்கல்களை தீர்க்க முயற்சி செய்கிறேன் என கதையளந்துகொண்டிருக்கிறார் வெற்றிவேல். ‘"இப்படி ஒரு சுத்த மான ‘டம்மிபீஸை மிகப் பெரிய ஆள் என நம்பும் வகையில்தான் விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் இருக் கிறார்கள். இவர்களது புத்திசாலித்தனத்தைப்  பாருங்கள்'’எனச் சொல்லி சிரிக்கிறார்கள் அ.தி. மு.க.வினர். 


_____________
இறுதிச் சுற்று!

அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் டி.டி.வி. தினகரனின் தலைமையில் திங்கள்கிழமை தஞ்சையில் நடந்தது. இதில், "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு செல்லமாட்டோம்' என்கிற வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "தினகரனும் ஓ.பி.எஸ்.ஸும் த.வெ.க. கூட்டணிக்கு வருவார் கள்' என்று செங்கோட்டையன் சுட்டிக்காட்டி யிருந்த நிலையில்... இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுறியுள்ளார் தினகரன். 

தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், திங்கள் கிழமை கூடிய அக்கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தில், "கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப் போம்'' என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா.