"என் மொழியில் நான் சிந்திக் கிறேன், என் சிந்தனையால் நான் வளர்கிறேன், என் மொழியை அழித்தால், சிந்தனையை அழிக்க லாம், சிந்தனையை அழித்தால் வளர்ச்சியை தடுக்கலாம், அடிமை ஆக்கலாம்.'' "மொழி' என் பது நமது அடையாளம், நமது வரலாறு என்ப தைத் தாண்டி, மொழி என்பது நமது நிகழ்கால மும் எதிர்காலமும் கூட என்பதை அடிப்படை யாகக் கொண்டு வந்திருக்கிறது "பராசக்தி'. 

Advertisment

கலைஞர் எழுத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் நடிகர் திலகம் அறிமுகமான 1952-ன் "பராசக்தி', அந்த காலகட்டத்தின் தமிழ்த் திரையுலகின் பெருவெடிப்பாக நிகழ்ந்தது. திராவிட அரசியலின் முழக்கமாக பகுத்தறிவின் முரசாக அமைந்து, தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதியாருக்கு நெருக்கமான வார்த்தையாக அறியப்பட்ட 'பராசக்தி' கலைஞரால் கையாளப்பட்டது, பாமரரை சென்றடைந்தது. 

Advertisment

அத்தகைய வலிமையான வார்த்தையான "பராசக்தி'யை தலைப்பாகக் கொண்டு வந்தி ருக்கிறது சுதா கொங்கரா இயக்கத்தில் வெளி யாகியிருக்கும் 2026-ன் பராசக்தி. சிவ கார்த்திகேயனின் 25ஆவது படம் இது. சிவ கார்த்திகேயன் தொடங்கிய இடத்திலிருந்து இன்று வந்தடைந்திருக்கும் உயரம் மிகப் பெரியது. எப்போதுமே மக்களை மகிழ்ச்சிப் படுத்திக்கொண்டேயிருக்கும் கலைஞன் அவர். சினிமா நடிகரானதும் ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்ற அவரது படங்கள் குறித்து இருந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு தற்போது மிக பொறுப்பான, பக்குவமான, முக்கியமான நடிகராகியிருக்கிறார். அமரன், பராசக்தி என அவரது தேர்வுகள் குறிப்பிடத்தக்கவை. இது தொடர வாழ்த்துகள்.    

AI காலகட்டத்தில் நொடியில் மொழி பெயர்ப்பு நடக்கிறது. எல்லாவிதமான தகவல் தொடர்புகளும் எளிதாகிவிட்டது. மனதில் நினைக் கும் பொருளின் விளம்பரம் கூட மறுநொடி கைபேசியில் வருகிறது. இந்த காலகட்டத்திலும் மாறாத சில செய்திகள் இருக்கின்றன. திருவண்ணா மலை பக்கத்தில் உள்ள கிராமத்து வங்கிக் கிளையில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த காசாளர்... மும்பை மராத்தியருக்கே சொந்தம் என்று சொல்லும் தாக்கரேக்கள்... சிவில் சர்வீஸ் தேர்வுகள் இந்தியில் எழுதுபவர்களுக்கு எளிதாக இருக்கின்றது... போன்ற செய்திகள் இன்றும் வருகின்றன. "இந்தியன் பீனல் கோட்' என்பது "பாரதீய நியாய சன்ஹிதா'வாகிறது. கிராம வேலை திட்டத்தின் பெயரி லிருந்து "மகாத்மா காந்தி' மாற்றப்படு கிறது. கொஞ்சம் அசந்தால் பெயர் பலகைகள் மாறிவிடுகின்றன. பள்ளிக் கல்வி வழியாக சில முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்க, அதை அரசும் தமிழ் கல்வியாளர்களும் தடுத்துக்கொண்டேயிருக்கின்ற னர். இப்படி மொழி படையெடுப்பு இருக்கும்வரை, அதை தடுப்பதற்கான பதில் தாக்குதல் தேவைப் பட்டுக்கொண்டேயிருக்கிறது.

Advertisment

"காஷ்மீர் ஃபைல்ஸ்' முதல் "பெங்கால் ஃபைல்ஸ்' வரை, கடந்த சில வருடங்களில் இருபது படங்களேனும் பா.ஜ.க. பேசும் கருத்தியலை, சித்தாந்தத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசி வெளிவந்திருக்கின்றன. சிறந்த உருவாக்கத்தில், மனம் நிறையும் இசையில், கவனத்தை ஈர்க்கும் அழகியலோடு இப்படங்கள் இளைஞர்கள் மனதில் சில கருத்துக்களை மெல்ல, அதே நேரம் அழுத்த மாக ஊன்றி வைக்கின்றன. ஏன் இன்னும் கூடுத லாகச் சென்று "துரந்தர்' போன்ற மிகப்பெரிய வெற்றிபெற்ற, பெரும் மக்கள் தொகையை சென்ற டைந்த படங்களில் நாசூக்காக "ஒரு நாள், தேச பக்தியுள்ள நல்ல பிரதமர் ஒருவர் வருவார்' போன்ற வசனங்கள் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி குறித்த தாழ்வான பிம்பத்தை பார்வையாளர்கள் மனதில் ஒட்ட வைக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான "ச்சாவ்வா' திரைப்படம் ஓடிய அரங்குகளில் படம் முடிந்ததும் சிறுவர்களும் இளைஞர்களும் "ஜெய் சத்ரபதி சிவாஜி மஹாராஜ்' என்று உணர்வெழுச்சி பொங்க முழங்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது. இது சரியா? இப்படி உணர்வூட்டுவது வெறியேற்றுவதாகாதா? விவாதிக்கப்படும் விசயம்தான். ஆனால், கற்பனை கலந்த ஒரு சார்பான வரலாறும் உணர்வும் பரப்பப்படும்போது சரியான, எதிர்க்கருத்துகளும் சென்று சேரவேண்டும். அந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தபோது தமிழில் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அந்த காலகட்ட அரசியல் -சமூகச் சூழலைச் சொல்லும் படங்கள் வராதா என்று தோன்றியது. இப்போது பராசக்தி வந்திருக்கிறது. 

தமிழில் அரசியல் பேசிய படங்கள் எப்போதுமே வந்திருக்கின்றன, வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய அலையை உருவாக்கியது பா.ரஞ்சித், வெற்றிமாறன், ராஜுமுருகன், இரா.சரவணன், ஞானவேல், மாரி செல்வராஜ் உள்பட பல இயக்குனர்கள். சுதா கொங்கரா பற்ற வைத்திருப்பது மொழிப்போர் நெருப்பு. 

மதிமாறனின் ஒரிஜினல் ஐடியா வில் பேராசிரியர் அ.ராமசாமியின் வழிகாட்டுதலில் இன்னும் பலரின் பங்களிப்பில் 1959 -1967 காலகட்டத்தில் நடந்த இந்தித் திணிப்பு, அதற்கெதிரான மாணவர் படையின் எழுச்சி மிகுந்த போராட்டம் என பரபரப்பான களத்தில் கற்பனை கலந்த கதை சொல்லப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் "செழியன்' பாத்திரம் "புறநானூற்றுப் படை' என்ற பெயரில் ஒரு வலிமையான மாணவர் படையை அமைத்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தில் ஏற்படும் இழப்பு, ஏற்படும் தடைகள், பின்னர் உருவாகும் மக்கள் எழுச்சி, தொடர்ந்து நிகழும் அரசியல் மாற்றங்கள், அத னால் இந்தித் திணிப்பை வென்று வாழும் தமிழ் என மிக முக்கியமானதொரு கதையை உணர்வோடு தர முயன்று உழைப்பை தந்திருக்கிறது படக்குழு. 

ஒரு திரைப்படமாக மெருகேற வேண்டிய விசயங்கள் இருந்தாலும் பேசியிருக்கும் கருத்துகள் வலிமையானவை. "இதன் பின்னணியில் நான் இல்லை, ஆனால் செய்தவன் யாராக இருந்தாலும் அவன் என் தம்பியே' என்று அறிஞர் அண்ணா (சிறப்பாக நடித்திருப்பவர் சேத்தன்) சொல்லும் காட்சி சிலிர்ப்பு. "சூரியன் உதிக்கும்போது முரசொலிக்கும்' என்று கலைஞர் (நடித்திருப்பது குரு சோமசுந்தரம்) முழங்கும் காட்சி சிறப்பு. அதர்வா ஏற்றிருக்கும் "சின்னத்துரை' பாத்திரம் மொழிக்காக உயிர் துறந்த இளைஞர்களின் தியாகத்தை பிரதிபலிக்கிறது. ரவிமோகன் வில்லன் பாத்திரம் ஏற்றிருப்பது இந்தக் கதையை அவர் எவ்வளவு முக்கியமாகக் கருதினார் என்பதை காட்டுகிறது. தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் என அனைவரும் சேர்ந்து போராடுவதாக அமைந்த காட்சிகள் படைப்பாளருக்கு மட்டுமல்லாது பலரது கனவு. தேசிய அரசியலில் அது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

சென்சாரின் விளையாட்டுக்களைத் தாண்டி சொல்லவந்ததை படம் சொல்லிவிட்டது என்றா லும், எத்தனையோ ஆபாசங்கள், வன்முறைகள் தடையில்லாமல் வெளிவரும்போது, பராசக்தி சந்தித்த தடைகளே அப்படத்தின், படம் பேசும் கருத்தின் முக்கியத்துவத்தை சொல்லிவிடுகிறது. ஒன்றிய அரசாக காங்கிரஸ் இருந்தபோதும் சரி, பா.ஜ.க. வந்த பிறகும் சரி... மாநிலங்களின் முக்கியத் துவத்தைக் குறைக்க முயல்வது மாறாமல் நிகழ்கிறது. மாநில மொழிகளை காக்கவேண்டிய தேவை, மொழியை காக்க நடந்த தியாகம் ஆகியவற்றை இயக்குர் சுதா கொங்கராவின் "பராசக்தி' நினைவு படுத்தியுள்ளது. இந்த "பராசக்"தீ' பரவட்டும்!