விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை, நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தெருவிளக்கு பராமரிப்பு சம்பந்தமான ஃபைலைக் கேட்டுள்ளார் ஆணையாளர் சரவணன். ஃபைல் தேடிக்கொண்டிருந்த போது அங்கே கவுன்சிலர் ரம்யா ராஜா வந்துள்ளார். அப்போது நடந்த பிரச்சினை சாதிய பிரச்சினையாக உருமாறிநிற்கிறது.
இதுகுறித்து நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பன் காவல்நிலையத் தில் தந்துள்ள புகாரில், “"நான் ஃபைல் தேடிக்கொண்டிருந்தபோது அங்கே வந்த 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜா, அந்த கோப்பை எடுத்துத் தர மாட்டியா எனக் கேட்டார். நான் "பார்த்துக்கிட்டு இருக்கேன்'னு சொன்னேன். "என்னை எதிர்த்துப் பேசுறியா?'ன்னு மிரட்டி னாங்க. அதன்பின் இன்னும் நான்குபேரோடு வந்து என்னைத் திட்டினார். அதன்பின் ரம்யாவும் அவரது கணவர் ராஜாவும் வந்து, கணவன், மனைவி இருவரும் பறையன்னு என் சாதி பெயரைச் சொல்லியும், ஒழிச்சிடுவேன்னும் மிரட்டினாங்க. அன்று மாலை ஆணையாளர் அறையில் சேர்மன் கணவரான கவுன்சிலர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யா இன்னும் சிலர் இருந்தனர். "நான் பேசினதுக்கு மன்னிச்சிடுங்க'ன்னு சொன்னேன், "வாயால மன்னிப்பு கேட்டால் போதுமா?'ன்னு என்னைக் கட்டாயப்படுத்தும்விதமா ரம்யா, ரவிச்சந்திரன் சொன்னதால் காலில் விழுந்தேன்'' என புகாரில் தெரிவித்துள்ளார். அவர்களோடு காமராஜ், பில்லா.செல்வம், அதிகாரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கவுன்சிலர் ரம்யா ராஜாவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “"ஆணையாளர் ஒரு பைலை தேடச்சொல்லி ஊழியர் முனியப்பனிடம் கூறியிருந்தார். அவர் ரொம்ப நேரமாக தேடிக்கொண்டிருந்தார். இன்னொரு பெண் ஊழியரான மகாவையும் அழைச்சி தேடுங்கன்னு சொன்னேன். "உனக்கென்ன தெரியும் நீ வாயை மூடு, நீ யார் எனக்குச் சொல்றது?'ன்னு சொன்னாப்பல. அவர் அப்படி சொல்லும் போது ஆணையாளர் அங்கே இருந்தார். "இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி சொல்றே'ன்னு கேட்டதுக்கு "நான் அப்படித்தான் பேசுவேன்'னாரு. "இது சரியா சார்?' அப்படின்னு ஆணையாளரிடம் கேட்டேன். "நீங்க எழுத்துப்பூர்வமா ஒரு புகார் தாங்க'ன்னு சொன்னார். மாலை புகார்தரப் போகும்போது கமிஷனர் இல்ல. அப்போ அவராதான் வந்து திடீர்னு கால்ல விழுந்து என்னை மன்னிச் சிடுங்கன்னு சொன்னாரு, யாரும் அவரை கால்ல விழச்சொல்லல. அப்படி அவர் கால்ல விழும்போது என்னை என்ன செய்தாருன்னு நீங்களே வீடியோவை பாருங்க, அசிங்கமாயிருக்கு. அதனாலதான் நானும் புகார் தந்துருக்கேன். அவர் சாதியை சேர்ந்த எங்க கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என 5 பேர் சேர்ந்துக்கிட்டு இதை சாதிய பிரச்சினையா மாத்தி பிரச்சினை செய்யறாங்க''’என்றார்.
கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்த கவுன்சிலர் ஜனார்த் தனனிடம் கேட்டபோது, "எஃப்.ஐ.ஆர் போட்டுட்டாங்க, எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே அதைப்பத்தி பேச என்ன இருக்கு''’என தொடர்பைத் துண்டித்தார்.
ரம்யாவின் கணவர் மரூர்.ராஜா பிரபல சாராய வியாபாரி. மூன்று ஆண்டுக்கு முன்பு மரக்காணத்தில் சாராயம் குடித்து சிலர் இறந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர், முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மா.செ. செஞ்சி மஸ்தான், திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரன்தான் ஆக்டிங் சேர்மனாக இருப்பதால் அவர்களுக்கு மிக நெருக்கம். முனியப்பன் ஒருமையில் பேசுகிறார், யாரையும் மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு அலுவலகத்தில் உள்ளது. கவுன்சிலர் புகார்தந்தால் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கிறேன் என ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
அலுவலக மேலாளர் முன்னிலை யில் ஆக்டிங் சேர்மனான ரவிச்சந்திரன் விசாரிக்கும்போது, முனியப்பனை யாரும் காலில் விழச்சொல்லவில்லை, அவராகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். உடனே அவரை அந்த அறையிலிருந்து வெளியே அனுப்பிவிடு கிறார்கள். அதன்பின் அந்த வீடியோ வை அலுவலக சி.சி.டி.வி.யிலிருந்து எடுத்து வெளியிட்டதும், திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அர்ஜுனன் பிரச்சினையாக்கினார். விவகாரம் பெரி தானதால் சேர்மனின் கணவர் ரவிச்சந்தி ரன், கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் மரூர் ராஜா, அந்த அறையிலிருந்த காமராஜ், பில்லா.செல்வம் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக் குப் பதிவுசெய்துள்ளது காவல்துறை. இதனையடுத்து சேர்மனின் கணவர் ரவிச்சந்திரன் தலைமறைவாகவே இருக்கிறார்.