Advertisment

சூடு பிடித்த தேர்தல் களம் முந்துவது யார்?

elect1

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. தனது வலுவான கூட்டணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தங்களது கூட் டணிக்குள் பிற கட்சிகளை இணைக்க கடுமையாக முயற்சித்து வருகின்றன. இதனால், தேர்தல் களத்தில் முந்துவது யார்? என்கிற பட்டிமன்றம் தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது. 

Advertisment

சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த  தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க.வின் தேர்தல் பணியை முடுக்கிவிடும் வகையில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

Advertisment

தி.மு.க. ஆட்சியில் இதுவரை பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்திய திட்டங் களையும், அதனால் நிகழ்ந்த சாதனைகளையும் எடுத்துக்கூறி பெண்களின் முழுமையான ஆதரவைப் பெறும் வகையில் மகளிரணியினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யவும் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!'’ என்ற பெயரில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சி மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. இதில் சுமார் 8 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படவிருக்கிறது. 

மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டி ‘"ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!'’ என்கிற தலைப்பில் மாபெரும் மாநில மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணியையே இன்னும் இறுதிசெய்ய முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் சூழலில், தேர்தல் பணிகளின் இறு

மிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. தனது வலுவான கூட்டணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தங்களது கூட் டணிக்குள் பிற கட்சிகளை இணைக்க கடுமையாக முயற்சித்து வருகின்றன. இதனால், தேர்தல் களத்தில் முந்துவது யார்? என்கிற பட்டிமன்றம் தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது. 

Advertisment

சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த  தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க.வின் தேர்தல் பணியை முடுக்கிவிடும் வகையில் நான்கு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

Advertisment

தி.மு.க. ஆட்சியில் இதுவரை பெண்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்திய திட்டங் களையும், அதனால் நிகழ்ந்த சாதனைகளையும் எடுத்துக்கூறி பெண்களின் முழுமையான ஆதரவைப் பெறும் வகையில் மகளிரணியினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யவும் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!'’ என்ற பெயரில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சி மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. இதில் சுமார் 8 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படவிருக்கிறது. 

மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டி ‘"ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!'’ என்கிற தலைப்பில் மாபெரும் மாநில மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. 

எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணியையே இன்னும் இறுதிசெய்ய முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் சூழலில், தேர்தல் பணிகளின் இறுதிக்கட்டத்தையே எட்டிவிட்டது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சார சந்திப்பு, மாநில மாநாடு என மிக வேகமாகவும், பல நுணுக்கங்களுடனும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறார் ஸ்டாலின். 

தி.மு.க.வின் கூட்டணியைப் பொருத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலிருந்து எந்த மாற்ற மும் இல்லாமல் தொடர்ந்துவருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் சேர்த்து 21 கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியாக தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கிறது. 

இந்தக் கூட்டணியில் புதிதாக சில கட்சி களும் கூட்டணியில் இணைவதற்கான சூழலும் நிலவுகிறது. 2019, 2021, 2024 ஆகிய பொதுத்தேர்தல் களிலும், உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல்களி லும் தோல்வியையே சந்திக்காமல் தொடர் வெற்றிகளை இந்தக் கூட்டணி பெற்று வருகின்றது. 

அ.தி.மு.க.வோ கடந்த சட்டமன்றத் தேர் தலில் அமைத்த கூட்டணியையே மீண்டும் அமைக்க முயற்சித்துவருகிறது.  கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துவிட்டு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வலைவீசிப் பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த முயற்சியும், தேர்தல் முடிவுகளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு படுதோல்வியையே கொடுத்தன. வேறு வழியின்றி கடந்த ஆண்டு மீண்டும் பா.ஜ.க.வுடன் கரம்கோத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார். 

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட் டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்குவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறிவந்தாலும், கூட்டணி முடிவுகளை பா.ஜ.க.வே எடுத்து வருகிறது.  ஒருபுறம் கூட்டணி ஆட்சி என்று மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பேசிவர... எடப்பாடி பழனிசாமியோ, அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகிறார். ஆனால், இதற்கு பெரிய தாக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. 

மேலும் தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கத் தடுமாறி வந்தார். அதனால் பா.ஜ.க.வே நேரடியாகவே களத்தில் இறங்கி கூட்டணியமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. கடந்த தேர்தல்களில் தங்கள் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை இணைக்கும்விதமாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை களமிறக்கி செயலாற்றிவருகிறது பா.ஜ.க. 

கடந்த காலங்களில் தங்களது கூட்டணியிலிருந்த கட்சிகளை மீண்டும் இணைப்பதும், விஜய்யின் த.வெ.க. பக்கம் அவர்கள் சாய்ந்துவிடா மல் தடுப்பதும்தான் டெல்லியின் டாப் அசைன் மெண்ட். அதற்காக அனைத்து அஸ்திரங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. 

இதன் தொடக்கமாக அன்புமணியின் தலைமையிலான பா.ம.க.வை, அ.தி.மு.க. கூட்டணிக்குள் இழுத்து வந்தது, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதலால் பா.ம.க.வின் வாக்கு வங்கியும் பிளவுபட்டே கிடக்கிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தாலும், கடந்த காலங்களில் பெற்ற வாக்குகள் மீண்டும் பா.ம.க.விற்கோ, அக்கட்சி சார்ந்துள்ள கூட்டணிக்கோ கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மை யில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக எடப்பாடியை முதலமைச் சர் வேட்பாளராக ஏற்கமுடியாது என்றும், விஜய்க்கு ஆதரவான குரலிலும் பேசிவந்த டி.டி.வி. தினகரனை திடீரென கூட்டணியில் இணைத்திருக் கிறது பா.ஜ.க.  இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கூட் டணிக்குத் தலைமை தாங்கும் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை குறித்து எதுவும் பேசவில்லை, தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்குவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னிலையில் கூட்டணியில் இணையாமல், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பதன் மூலமே அந்தக் கூட்டணியின் விரிசல் வெளிப்படையாகத் தெரிகிறது. எங்களுக்குள் இருப்பது பங்காளிச் சண்டைதான் என்று தினகரன் கூறினாலும், தேர்தல் களத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து இணக்கமாக பணியாற்றுவார்களா? என்கிற கேள்வி வலிமையாக முன்வைக்கப்படுகிறது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட் டணியில் இணைவதில் ஆர்வம் காட்டாத டி.டி.வி. தினகரன் திடீரென, தேசிய ஜனநாயக கூட்டணி யில் இணைந்தற்கான காரணம் அவர் மீது நிலுவை யிலிருக்கும் வழக்குகளை சுட்டிக்காட்டி பா.ஜ.க. கொடுத்த நிர்பந்தம்தான் என அ.ம.மு.க. வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. 

கடந்த தேர்தல்களில் அ.ம.மு.க. பிரித்த வாக்குகளை, டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைத்ததன் மூலம் ஈர்த்துவிடலாம் என பா.ஜ.க.வின் தலைமையும் அறிவுஜீவிகள் குழுவும் கணக்குப் போட்டிருக்கின்றன. ஆனால் அ.ம.மு.க.வின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்தே வந்திருக்கிறது. 

குறிப்பாக, அ.ம.மு.க. 2019 நாடாளு மன்றத் தேர்தலின்போது 5.27% பெற்றது.  இந்த சதவீதம் அடுத்து வந்த 2021-சட்ட மன்றத் தேர்தலில் 2.35 சதவீதமாகவும், 2024-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 0.90 சதவீதமாகவும் தேய்ந்து சுருங்கி விட்டது, இந்த வாக்குகளும் கூட சமுதாய ரீதியில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு எதிராக விழுந்த வாக்குகள். ஆக, எடப்பாடியுடன்  ஓரணியில் கூட்டணி வைப்பதன் மூலம், இந்த வாக்குகள் மேலும் குறைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியின் மீது வெளிப்படும் எதிர்ப்பலையே எதிர்க் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும். ஆனால் தி.மு.க. ஆட்சியின் மீது அத்தகைய எதிர்ப்பலை இல்லை. ஊடக கருத்துக் கணிப்புகளும் மத்திய -மாநில அரசுகளின் உளவுத்துறையினரின் கருத்துக்கணிப்புகளும் அதையே கூறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்தச் சூழ்நிலையில் தீவிரமாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள தி.மு.க.வை ஒப்பிடு கையில் அ.தி.மு.க. இன்னும் குழப்பத்திலேயே தத்தளித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்காத சூழலில், தேர்தல் வாக்குறுதிகளாக 5 விசயங்களை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதை அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களே ரசிக்கவில்லை. 

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, தேர்தல் ரேஸில் அ.தி.மு.க. முதலடியை எடுத்து வைப்ப தற்கு முன்பே தி.மு.க.வின் அதிரடிப் பாய்ச்சல், வெற்றிக் கோட்டையை நோக்கி இருக்கிறது என்பதே தமிழக தேர்தல் களத்தின் நிதர்சனம்! 


___________
இறுதிச்சுற்று!

தி.மு.க.வில் இணைந்த வைத்திலிங்கம்!

elect

குடியரசுத் தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பின்பு, ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்துவிட்டு, உடனடியாக தனி விமானம் பிடித்து திருச்சிக்கு வந்தார்.  ஜனவரி 26 அன்று மாலை மகளிர் மாநாடு நடைபெறும் செங்கிப்பட்டிக்கு வந்த அவர், மகளிர் விழா நடைபெறும் மேடைக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட தனி மேடையில் அ.தி.மு.க.வின் வைத்திலிங்கம் தலைமையில் பத்தாயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்துகொண்டார். சுயமரியாதை முக்கியமென கருதி தி.மு.க.வுக்கு வைத்திலிங்கம் வந்திருப்பதாக தனது உரையில் முதல்வர் குறிப்பிட்டார்.

nkn280126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe