திருச்செங்கோட்டில், த.வெ.க. மகளிரணி நிர்வாகி வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்து, மாவட்டச் செயலாளரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி யிருக்கிறது.
ராசிபுரத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த செந்தில்நாதன், த.வெ.க. தொடங்கப்பட்ட பிறகு, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
டிச. 18-ஆம் தேதி இரவு 10 மணியளவில், திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்த அக்கட்சியின் மகளிரணி அமைப்பாளர் முனிராபானுவின் வீட்டிற்கு செந்தில்நாதன் சென்றுள்ளார். முனிராபானுவின் கணவர் கார் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று அவர் சென்னை சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கணவர் ஊரிலில்

கணவர் ஊரிலில்லாதபோது, நேரம்கெட்ட நேரத்தில் முனிராபானுவின் வீட்டிற்குள் செந்தில்நாதன் நுழைவதைப் பார்த்துவிட்டு அவருடைய தம்பியும், உறவினர்களும் வீட்டின் கதவைத் தட்டினர். நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, படுக்கையறையில் கட்டிலுக்கடியில் செந்தில்நாதன் பனியனுடன் பதுங்கியிருந்தார். உறவினர்கள் அவரை வெளியே இழுத்துப்போட்டு சரமாரி யாகத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று, டிச. 20-ஆம் தேதி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
அந்த வீடியோவில் முனிராபானுவின் தம்பி முன்னா, ''இந்த ஆளோட நீ காரில் போனியா இல்லையா? நீங்க நாலுபேரு மெட்ராஸ் சென்றபோது, பஸ்ஸிலிருந்து இறங்கி அவரோடு எதற்காக காரில் போன? இப்போது நீ கூப்பிட்டு அவர் வந்தாரா? அல்லது அவரே வந்தாரா?'' என கேட்கிறார். அதற்கு மகளிரணி நிர்வாகி, அவருடன் காரில் போகவில்லையென்று மறுக்கிறார்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வீட்டிற்குள் வைத்து உறவினர்கள் பஞ்சாயத்து பேசியுள்ளனர். பிறகு காலில் விழுந்து கெஞ்சியதால் செந்தில்நாதனை விடுவித்துள்ளனர். இதுகுறித்து, இருதரப்பி லும் போலீசில் புகாரளிக்கவில்லை.
இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
''செந்தில்நாதன் மா.செ. ஆன பிறகு செந்தில்நாதனின் நடவடிக்கை அடியோடு மாறிவிட்டது. அரசியல், பொருளாதார பின்புல மில்லாத சாதாரண குடும்பத்துப் பெண்கள்தான் அவருடைய டார்கெட். அவர்களுக்கு கட்சியில் பதவி வாங்கிக் கொடுப்பதாகவும், விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் பிராக்கெட் போடுகிறார். இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் மகளிரணி நிர்வாகியும், செந்தில்நாதனும் ரொம்பவே நெருக்கமாக சுற்றிவந்தனர்.
இந்நிலையில்தான் செந்தில்நாதன் வசமாக சிக்கியிருக்கிறார்'' என்கிறார்கள் த.வெ.க. நிர்வாகிகள்.
செந்தில்நாதனின் 'கசமுசா' வீடியோ வெளியானதை அடுத்து, டிச. 20-ஆம் தேதி அவரை உடனடியாக கட்சிப் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார் பொதுச்செய லாளர் புஸ்ஸி ஆனந்த்.
இதுதொடர்பாக மா.செ. செந்தில்நாத னிடம் விசாரித்தோம். "மகளிரணி அமைப் பாளர் முனிராபானு, தன் மகளுக்கு கடும் வயிற்றுவலி தொந்தரவு இருப்பதாகக் கூறினார். நலம் விசாரிப்பதற்காக அன்று இரவு அவருடைய வீட்டிற்குச் சென்றேன். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் தி.மு.க.வைச் சேர்ந்த நளினியின் கணவர் சுரேஷ்பாபு, தனது ஆள்கள் மூலம் இந்த சம்பவத்தை ரகசியமாக வீடியோ எடுத்து பரப்பிவிட்டார்'' என்றார் செந்தில் நாதன்.
இந்த விவகாரம் குறித்து ராசிபுரம் நகர தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறுகிறார். சொந்தக் கட்சியிலுள்ள பெண்களையே, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பாதுகாக்க முடியாத நிலையில்தான் இருக்கிறார். கட்சித் தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியில்தான் நடப் பார்கள்'' என்றனர்.
இதற்கிடையே, த.வெ.க. மகளிரணி நிர்வாகி முனிராபானு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இந்தப் பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us