தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அந்த வகையில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை தற்போது மிகப்பிரமாண்டமாக நடத்துகிறது தி.மு.க. தலைமை. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இந்த கிறிஸ்துவ பெருவிழாவை சென்னையில் நடத்தும் தி.மு.க., இந்த முறை நெல்லைக்கு மாற்றியிருக்கிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜிடம் விழா பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 20-ந் தேதி நெல்லையில் நடக்கும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகப்பிரமாண்டமாக செய்திருக்கிறார் இனிகோ இருதயராஜ்.
பண்டிகைகளை எல்லா கட்சிகளும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கமாக இருந்தாலும், தி.மு.க. எப்போதுமே இதில் சிறப்பான கவனத்தைச் செலுத்தும். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை எந்தளவுக்கு விமரிசையாக முதல்வர் ஸ்டாலின் கொண்டாடு கிறாரோ, அதேபோல, கி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. அந்த வகையில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை தற்போது மிகப்பிரமாண்டமாக நடத்துகிறது தி.மு.க. தலைமை. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இந்த கிறிஸ்துவ பெருவிழாவை சென்னையில் நடத்தும் தி.மு.க., இந்த முறை நெல்லைக்கு மாற்றியிருக்கிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜிடம் விழா பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 20-ந் தேதி நெல்லையில் நடக்கும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகப்பிரமாண்டமாக செய்திருக்கிறார் இனிகோ இருதயராஜ்.
பண்டிகைகளை எல்லா கட்சிகளும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கமாக இருந்தாலும், தி.மு.க. எப்போதுமே இதில் சிறப்பான கவனத்தைச் செலுத்தும். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை எந்தளவுக்கு விமரிசையாக முதல்வர் ஸ்டாலின் கொண்டாடு கிறாரோ, அதேபோல, கிறிஸ்துவர்களின் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், முஸ்லீம்களின் ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவையும் விமர்சையாகக் கொண்டாடுவார்.
இவ்விழாவில் சீரோ-மலங்காரா கத்தோலிக்க திருச்சபை யின் தலைவர் கார்டினல் மோரன் மார்கிளிமீஸ் பாசெலோயிஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/chirstmas1-2025-12-18-18-22-43.jpg)
மேலும், தென்னிந்திய திருச்சபை, தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, மதுரை உயர்மறை மாவட்டம், பாளையங்கோட்டை மறை மாவட்டம், இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் அமைப்பு, இயேசுவின் சேனை ஊழியங்கள் அமைப்பு, நெல்லை துதியின் கோட்டை ஊழியங்கள் அமைப்பு, நல்லமரியான் ஊழியங்கள் அமைப்பு, ஆற்காடு லுத்திரன் திருச்சபை, அடைக்கல அன்னை சபை, மாநில சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், அன்னை வேளாங்கன்னி திருத்தலம், புனித பிரான்சிஸ்கன் அலோசியஸ் கொன்சாகா அமைப்பு, புனித அன்னாள் சபை, கிறிஸ்துவ தேவாலய உபதேசியர்கள் பணியாளர்கள் நல வாரியம், அசெம்ப்ளீஸ் ஆப் காட், சமாதான ஏ.ஜி. சபை, இருதய சகோதரர்கள் சபை, ஆத்ம நேசர் சபை உள்பட கிறிஸ்துவ மதத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த ஆயர்கள், சமயத் தலைவர்கள், போதகர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஏராளமானோர் இவ்விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
கிறிஸ்துவ பெருவிழாவாக இருந்தாலும், சமய நல்லெண்ண விழாவாக இதனை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், இஸ்லாமிய அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் இந்து சமயத்தை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகளின் தலைவர்களையும் விழாவில் சிறப்புரையாற்ற அழைத்துள்ளார் இனிகோ இருதயராஜ். தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நடக்கவிருக்கிறது. அந்த வகையில், இந்த பெருவிழாவை உற்றுக்கவனிக்கிறது பா.ஜ.க. தலைமை.
கிறிஸ்துமஸ் பெருவிழாவை இப்படி பிரமாண்டமாக தி.மு.க. நடத்துவதற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் உளவுத்துறையினர். இதுகுறித்து நாம் விசாரித்த போது, ‘’"முதல் காரணம் தேர்தல். இரண்டாவது காரணம் நடிகர் விஜய். சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. போட்டியிடுவதை அடுத்து, தமிழகத்தின் தேர்தல் களம் சற்று மாறித்தான் இருக்கிறது. அவரது வருகை தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக எங்கள் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தபடி இருக்கிறார்கள்.
நடிகர் விஜய், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் அதே மதத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் சுமார் 9 சதவீதம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. அந்த 9 சதவீத கிறிஸ்துவ மதத்தினரில் 60 சதவீதம் பேர் விஜய்யை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கிறார் கள். இதற்காக பல திட்டங்கள் போட்டு தி.மு.க. வுக்கு எதிரான அரசியலை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதனை உளவுத்துறையும், சபரீசனின் பென் அமைப்பும் தனித்தனியாக முதல்வர் ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளன.
தி.மு.க.வின் வாக்கு வங்கியான கிறிஸ்துவர்களிடம் விஜய் ஊடுறுவல்... அவர்களின் ஆதரவை முழுமையாகப்பெற முயற்சித்தல் ஆகியவை தி.மு.க.வின் வெற்றி சதவிகிதத்தில் சேதாரத்தை உருவாக்கும் என்பதாக அந்த ரிப்போர்ட் இருக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான், கிறிஸ்துவர் களின் ஆதரவும், வாக்குகளும் சிந்தாமல், சிதறாமல் முழுமையாக எப்போதும்போல தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டும் என திட்டமிட்டே மனிதநேய கிறிஸ்துமஸ் பெருவிழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.
இந்த விழா, ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களிட மும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இனிகோ இருதயராஜிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அடர்த்தி யாக இருக்கிறார்கள். இந்த மாவட்டங்களில் விஜய்க்கு ரசிகர் பட்டாளமும் ஏராளமாக இருக்கிறது. அதனாலேயே, விழாவை நெல்லையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தேர்தலில் 200 இடங்களை வெல்வதை இலக்காக முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்திருப்ப தால், ஒரு சின்ன விசயம் கூட எதிரிகளுக்கு சாதக மாகிவிடக்கூடாது என்கிற திட்டமிடலில் தான் வெற்றியை உறுதிசெய்ய இந்த கிறிஸ்துமஸ் விழாவில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்'' ’என்கிறார்கள் உளவுத்துறையினரும் தி.மு.க.வினரும்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us