ஏழைகளின் ஏக்கத்தைப் போக்கிட அரசு பள்ளிகளில் தி.மு.க. அரசு செயல்படுத்திவரும் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத் தப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலினும், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானும் தொடங்கி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் சமூக நலத்திட்டங் களை செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில், காலை உணவு இல்லாததால் தமிழக ஏழைத் தாய்மார்கள் பலர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பு வதே இல்லை. இதனை உணர்ந்த ஸ்டாலின், காலை உணவுத்திட் டத்தை கொண்டு வந்தார்.
அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022, செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் துவக்கி வைத்தார் ஸ்டாலின். முதல்கட்டமாக 38 மாவட்டங்களிலுள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம், 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ -மாணவிகள் பயனடைந்தனர். அவர்களின் வயிறும் மனசும் நிறைந்தது. இதனையடுத்து இந்தத் திட்டம் 4 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 34,987 தொடக்கநிலை பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது வரை 20 லட்சத்து 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் முதலமைச்சரின் சத்தான காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய விரும்பினார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அரசின் தலைமைச்செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், முத
ஏழைகளின் ஏக்கத்தைப் போக்கிட அரசு பள்ளிகளில் தி.மு.க. அரசு செயல்படுத்திவரும் முதலமைச் சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத் தப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலினும், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மானும் தொடங்கி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் சமூக நலத்திட்டங் களை செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில், காலை உணவு இல்லாததால் தமிழக ஏழைத் தாய்மார்கள் பலர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பு வதே இல்லை. இதனை உணர்ந்த ஸ்டாலின், காலை உணவுத்திட் டத்தை கொண்டு வந்தார்.
அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கடந்த 2022, செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் துவக்கி வைத்தார் ஸ்டாலின். முதல்கட்டமாக 38 மாவட்டங்களிலுள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம், 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ -மாணவிகள் பயனடைந்தனர். அவர்களின் வயிறும் மனசும் நிறைந்தது. இதனையடுத்து இந்தத் திட்டம் 4 முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 34,987 தொடக்கநிலை பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது வரை 20 லட்சத்து 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் முதலமைச்சரின் சத்தான காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய விரும்பினார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அரசின் தலைமைச்செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், முதல்வரின் செயலாளர்கள், அரசின் செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்தினார். நிதி நிலைமை ஆராயப்பட்டது. நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்ய எவ்வளவு நிதிச்சுமை ஏற்படும் என்பதையும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.
நகர்ப்புறங்களிலும் காலை உணவுத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்; எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்; திட்டத்தை கொண்டு வருவதற்கான வழிகளை ஆராயுங்கள் என்று உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டார் ஸ்டாலின். இதனையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடந்தன. முதல்கட்டமாக நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்குத் திட்டத்தை விரிவாக்கம் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், திட்டத்தின் துவக்க விழாவுக்கு, தமிழகம் போலவே சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த்மானை அழைக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, முதல்வர் பகவந்த்மானின் கவனத்துக்கு இதனை எடுத்துச்சென்றது தி.மு.க. அரசு. தொடக்க விழாவில் கலந்துகொள்ள முதல்வர் பகவந்த்மான் சம்மதித்தார். விழாவுக்கான அழைப்பிதழ் தயாரானதும், அதனை முறைப்படி பகவந்த் மானுக்கு வழங்க தி.மு.க. எம்.பி. வழக்கறி ஞர் வில்சனை அனுப்பி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து தொடக்கவிழாவுக்காக சென்னை வந்த பகவந்த்மானுக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.
அந்த வகையில், ஐந்தாம் கட்டமாக, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் தொடங்கப் பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொடக்க விழா, கடந்த 26-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் இருக் கும் புனித சூசை யப்பர் பள்ளியில் நடந்தது. முதல்வர்கள் ஸ்டாலினும், பகவந்த் மானும் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இருவரும் இணைந்து பள்ளிக் குழந்தை களுக்கு காலை உணவை பரிமாறினர்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவி கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பள்ளிக்குழந்தைகளுடன் அமர்ந்த ஸ்டாலின், பகவந்த் மான், உதயநிதி ஆகியோர் காலை உணவை சாப்பிட்டனர். அப்போது, தங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த குழந்தை களிடம் ஸ்டாலினும் உதயநிதியும் சகஜமாகப் பேசினார்கள். காலை உணவின் சுவை குறித்து குழந்தைகளிடம் கேட்டனர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் முதல்வர் பகவந்த்மான், பஞ்சாப் -தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கான உறவுகளைச் சுட்டிக்காட்டி யவர், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட தி.மு.க. அரசு நிறைவேற்றிவரும் சமூகநலத் திட்டங் களையும், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு களுக்கான திட்டங்களையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தை கள் பயனடைவது பெருமையாக இருக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம் உன்னதமானது. சமுகப் பிரச்சனைகளைக் கையாள்வதிலும், பொதுநலன் களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது. குழந்தை களுக்கு ஆரோக்கியம் தருவது சத்தான காலை உணவு. அந்த உணவு இல்லாமல் பள்ளிக்கூடங் களுக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவ தில்லை. இதனால் அவர்கள் கவலையடைந் துள்ளனர். பெற்றோர்களின் அந்த கவலைகளைப் போக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
காலையில் சத்தான உணவு சாப்பிடுவதினால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி கற்றல் சூழல் அதிகரித்திருப்பது பாராட்டப்படவேண்டிய விசயம்! தமிழகத்தின் வளர்ச்சியை பார்க்கும்போது இதனையெல்லாம் உணரும்போது, தமிழ்நாட்டிற்கு உண்மையான ஒரு தலைவர் கிடைத்திருக்கிறார். ஒன்றிய அரசுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் முன் மாதிரி திட்டமாக இருக்கும் காலை உணவுத்திட் டத்தை பஞ்சாப் மாநிலத்திலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார் பகவந்த் மான்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என வான்புகழ் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அவரின் வாக்குக்கு இலக்கணமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில், அசோக்நகர் மகளிர் பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த மாணவிகளிடம் "காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?' என கேட்டேன். "டீ குடித்தேன்; பன் சாப்பிட் டேன்' என சொன்னார்கள். அப்போதுதான், காலை உணவுத் திட்டம் தேவை என்பதை உணர்ந்து அதனை கொள்கையாக அறிவித்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூலம் 20 லட்சம் குழந்தை கள் சத்தான, சூடான, சுவையான காலை உணவை சாப்பிட்டுவிட்டு வகுப்புகளுக்கு தெம்பாகச் செல்கிறார்கள். அதனைப் பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது. இதைவிட வேறு என்னவேண்டும்?
இந்த திட்டத்திற்காக வருடத்திற்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதைச் செலவு எனச் சொல்லக்கூடாது; செலவு என சொல்லவும் மாட்டேன். இது, எதிர்காலத்திற்கான சமூக முதலீடு என்பதாகவே பார்க்கிறேன். தமிழ்நாட்டின் மாணவ -மாணவிகளின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்திருக்கிறோம். நீங்கள் எல்லாம் நன்றாக படித்து, முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக் கும் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி. அந்த வெற்றியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்தான காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்துள் ளோம்.
இந்த திட்டத்தின் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது ; கற்றல் திறன் உயர்ந்துள்ளது; மருத்துவமனைக்கு குழந்தைகள் செல்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது; பள்ளிகளுக்கு குழந்தை களின் வருகையும் கூடுதலாகியிருக்கிறது; ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாம் நிறைவேற்றியுள்ள இந்த சத்தான காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங் கள் மட்டுமல்ல, பிற நாடுகள் கூட நடைமுறைப் படுத்தவும், தொடங்கவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தளவுக்கு முத்திரை பதிக்கும் திட்டமாக இருக்கிறது''’என்றார் மிக மகிழ்ச்சியாக.
காலை உணவுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நிறைவு பெறும் சூழலில், இத்திட்டத்தைப் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
திட்டத்தின் ஆய்வு முடிவுகள் குறித்து பேசிய தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., "அந்த ஆய்வில் ஊரக நகர்ப்புற பகுதி களைச் சேர்ந்த 100 பள்ளிகளும் 5,274 மாணவர் களும் பங்கேற்றனர். அந்த ஆய்வில், மாணவர் களின் வருகை சதவீதம் அதிகரித்திருக்கிறது, தாமத மாக பள்ளிகளுக்கு வருவதும் குறைந்துள்ளது, கற்றல் திறமை மற்றும் ஆரோக்கியம் கூடியிருக் கிறது.
மாணவர்கள் நோய்வாய்ப்படுவதும் மருத்துவ மனைகளில் அட்மிட்டாவதும் குறைந்துள்ளது, ஆசிரியரின் குறிப்புரைகளை பின்பற்றுவதும், எழுத்துப் பணிகளை அவ்வப்போது முடிப்பதும், கல்வி இணைச் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங் கேற்பதும், விளையாட்டுகளில் கலந்துகொள்வதும் அதிகரித்துள்ளன, முந்தைய பாடங்களை நினைவு கூர்வது 80 சதவீதம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட முன்னேற்றங்கள் இருப் பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், சீக்கிரத்தில் வேலைகளுக்குச் செல்லும் கிராமப்புற குடும்பங்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக் கிறது''” என்று சுட்டிக் காட்டினார்.