"ஹலோ தலைவரே,… ஒவ்வொருவரின் கனவையும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ’"என் கனவு என் எதிர் காலம்'’ திட்டம் பரபரப்பா பேசப்படுறது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.''”

Advertisment

"ஆமாம்பா… அரசு சேவைகள் மக்களுக்கு தடையின்றியும் விரைவாகவும் கிடைக்கவேண் டும்ங்கிறதுக்காக "உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. அதோட அம்சம்தான் இது. அதுக்கென்ன இப்ப?''” 

Advertisment

"இல்லை தலைவரே, அதனை முடக்க முயற்சி செஞ்சாங்க. அதை முறியடித்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருது தி.மு.க. அரசு. இதனடிப்படையில், தனது தலைமையி லான நிர்வாகம் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில், "என் கனவு என் எதிர்காலம்' எனும் திட்டத் திற்கான இணைய தளத்தை ஸ்டாலின் தொடங்கி வச்சிருக்கார். இது, இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கிட்டி ருக்கு. இந்த இணைய தளத்தை பயன்படுத்துவதன் மூலம், அரசின் சேவைகள் அனைத்தும் சாமானியர் களின் கைகளுக்கு எளிமை யாக கிடைக்கும்னு அதி காரிகள் சொல்றாங்க.''…”   

"கவர்னர் ரவிக்கு சாதக மாக இருந்த தடையை உச்சநீதி மன்றம் உடைச்சி எறிஞ்சிருக்கே?''”

Advertisment

"பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் களை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னர் வெச்சிருந் தாரு. அவரோட நியமனங்கள் தமிழகத்துக்கு எதிரா இருந்ததால் சர்ச்சைகள் வெடிச்சது. இதுக்கு ஒரு முடிவுகட்டணும்னு நினைச்ச முதல்வர் ஸ்டாலின், கவர்னரிடம் இருந்த அதிகாரத்தை மாநில முதலமைச்சருக்கு மாத்தியமைக்கும் சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேத்தி னாரு. ஆனா, இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்பு தல் தராததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கேயுரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாவுக்கு உச்சநீதிமன் றம் ஒப்புதல் தந்துச்சு. இதனை கெஜட்டிலும் பதிவுசெய்தது தி.மு.க. அரசு. அதேசமயம், கவர்னருக்குரிய அதிகாரத்தை முதல்வருக்கு மாத்திய சட்ட மசோதாவுக்கு எதிரா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக் குப்போட, மசோதாவுக்கு தடைபோட் டது உயர்நீதிமன்றம். இதனால் கவர்னர் மாளிகை சந்தோசப்பட் டது. இந்த நிலையில, இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் தமிழக அரசு மேல்முறை யீடு செய்ய, வழக்கு பல மாதங் களாக கிடப்பில் கிடந்தது. இந்த நிலையிலதான், இந்த மேல் முறையீட்டு வழக்கை விசா ரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய முதன்மை அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதித்ததுடன், வழக்கை விசாரித்து 6 வாரத்தில் தீர்ப்பு வழங்கணும்னு உத்தரவிட்டிருக்கு. இதனால் தமிழக கவர்னர் மாளிகைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு.''” 

"இதேபோல், அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநருக்கு ஒரு மாணவர் அதிர்ச்சியளித்தாராமே?''

"ஆமாங்க தலைவரே, சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 87வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை கொடுத்தபோது, வரலாற்று துறை ஆராய்ச்சி மாணவர் புஷ்பராஜ், தன்னோட பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தமிழக முதல்வரின் படத்தை அவரது பட்டத்தின் மீது வைத்து, ஆளுநரின் கையால் வாங்கியிருக் கிறார். அதைப் பார்த்த ஆளுநருக்கு அதிர்ச்சி யாகியிருக்கு. உடனே, இதேபோல் வேறு யாரே னும் வச்சிருக்காங் களான்னு எல்லா மாண வர்களையும் சோதித்த தால அங்க பரபரப்பு ஏற்பட்டிருக்கு. இது குறித்து மாணவர் புஷ்ப ராஜிடம் விசாரித்த போது, அவர், விக்கிர வாண்டி அருகிலுள்ள ஆவுடையார்பட்டு கிரா மத்தை சேர்ந்தவராம். தமிழ்நாடு அரசோட கல்வி உதவித்தொகையை பெற்றும், தமிழக முதல்வர் கல்விக்காக அறிவித் துள்ள திட்டங்களை பயன்படுத்தியும் படிச்சு முன்னேறினாராம். துணைவேந்தரா தமிழக முதல் வரை நியமிக்கணும்கற சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் புறக்கணிச்சதால முதல்வர் கையால பட்டத்தை வாங்க முடியாத வருத்தத்தால தான் இந்த மாதிரி பண்ணினாராம். அந்த நிகழ்ச்சியில் முதலிலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப் பட்டு, அதுக்கப்புறமா தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்திருக்கு.''

"தமிழக காங்கிரஸ் சொத்தை கட்சியின் அகில இந்திய தலைமை கபளீகரம் செய்திருப்ப தாக காங்கிரஸ் சீனியர்கள் எல்லாம் கொந்தளிக் கிறாங்களேப்பா?''” 

"என் காதுக்கும் இந்த நியூஸ் வந்துச்சுங்க தலைவரே... தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமா தமிழகம் முழுக்க நிறைய சொத்துக்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கத்துக்கு அருகேயிருக்கும் காங்கிரஸ் திடல். இன்னைய தேதியில சுமார் 2,000 கோடி ரூபாய் சொத்து இது. காங்கிரஸ் கட்சிக்கு வருவாய் ஈட்டுவதற்காக, இந்த மைதானத்தில் வர்த்தகக் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடுறதுக்காக மார்வாடி ஒருத்தர் கிட்டே பல வருடங்களுக்கு முன்பு அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டாங்க, அறக்கட்டளை உறுப்பினர் களாக இருந்த கதர்ச்சட்டை தலைவர்கள். இதற்காக சில கோடிகள் கைமாறியிருந்தது. ஆனா, இடத்தை மார்வாடி எடுத்துக்க முயற்சித்தபோது பலரும் பிரச்சனை பண்ணதினால மார் வாடி அமைதியாக இருந்தாரு. இப்படியே பல வருடங்கள் கடந்த நிலையில, மார்வாடி கிட்டே இருந்து திடலை மீட்கும் எந்த முயற்சியையும் காங்கிரஸ் எடுக்கலை. அறக்கட்டளைமீது தமிழக காங்கிரஸுக்கு இருந்த அதிகாரத் தையும் உரிமையையும் அகில இந்திய தலை மைக்கு இருக்கிற மாதிரி கடந்த வருசம் மாத்திக்கிச்சு டெல்லியிலிருக்கும் காங்கிரஸ் மேலிடம். இதுக்கு பின்னணியில சோனியாவும், ராகுலும் இருந்தாங்க. சில மாதங்களுக்கு முன்பு, மார்வாடியிடமிருந்து திடலை மீட்கிறேங்கிற பேருல சட்டத்திற்குப் புறம்பா ஆக்சன் எடுத்தாரு செல்வப்பெருந்தகை. உடனே, காங்கிரஸுக்கு எதிராக கோர்ட்டுக்குப் போனாரு அந்த மார் வாடி. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வப்பெருந் தகையும், கட்சியின் பொருளாளர் ரூபி மனோ கரனும், மார்வாடியிடமிருந்து நாம கைப்பற்றி பெரிய மால் ஒன்றைக் கட்டலாம்னு திட்டமிட்டு மார்வாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக் காங்க. அந்த மார்வாடியோ, இன்னைய தேதிக்கு 2000 கோடி சொத்து இது. 500 கோடி கொடுத் திடுங்க. நான் திருப்பித்தந்துடுறேன்னு சொல்லி யிருக்காரு. இது ரொம்ப அதிகம்னு செல்வப் பெருந்தகை எதிர்வாதம் செஞ்சிருக்காரு.''” 

"எனக்குப் புரியுது. மேல சொல்லு''…” 

"இந்த விவகாரம் மேலிடத் துக்கு தெரிஞ்சு, சொத்து முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக்குழு பொருளாளர் விஜய் இந்தர் சிங்லாவையும், கிரீஷ் ஷோடங்கரையும் களத்துல இறக்கிச்சு. சீக்ரெட்டாக நடந்த பேச்சுவார்த்தையில, 60 கோடி தந்திடுவதாக உடன்பாடு ஏற்பட்டிருக்கு. இதனையடுத்து, ரெண்டு நாளைக்கு முன்பு விஜய் இந்தர்சிங்லே, கிரீஷ் ஷோடங்கர், செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன், சுதர்சன நாச்சியப்பன் (அறக்கட்டளை பழைய உறுப்பினர் இவர் மட்டும்தான்) எல்லோரும் கூடி ஆலோசிச்சாங்க. காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை 30 கோடி வெள்ளையாகவும், 30 கோடி கறுப்பாகவும் தருவதாக முடிவு காணப்பட்டது. இதனையடுத்து, 60 கோடி மார்வாடிக்கு கைமாறியதாகவும், இதற்கான பணத்தை கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் ஏற்பாடுசெய்ததாகவும் சொல்றாங்க. தமிழக காங்கிரஸுக்கு உரிமையான சொத்தை சோனியா குடும்பம் கபளீகரம் செய்திருக்கு. விரைவில் இந்த திடலில் டி.கே.சிவக் குமார் ஆளுமை செலுத்துவாருன்னும், ரியல் எஸ்டேட்டிலுள்ள பிரைவேட் நிறுவனத்துடன் அக்ரிமெண்ட் போடுவாங்கன்னும், இதன் பின்னணியில் செல்வப்பெருந்தகையும், ரூபி மனோகரனும் இருக்காங்கன்னும் சொல்லி, சீனியர் கதர்ச்சட்டைகள் கொந்தளிக்கிறாங்க. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும் கவனிக்க ஆரம்பிச்சிருக்கு.''” 

rang1

"சாத்தான்குளம் தந்தை -மகன் படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து இன்ஸ் பெக்டர் ஸ்ரீதர் மேல் புகார் சொல்லப்படுதே?''”

"சாத்தான்குளம்  தந்தை -மகன்  படுகொலை  வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்களின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், எதிர்த்தரப்பு சாட்சியங்களின் விசாரணை துவங்கியுள்ளது. இதில் தற்பொழுது மெடிக்கல் கிரவுண்டில் ஜாமீன்பெற்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தரப்பு சாட்சியாக சாத்தான்குளம் அழுத்துண்ணாகுடி பரம்பரையைச் சேர்ந்த 8 நபர்கள் சாட்சி கூறுவதற்கு அனுமதி பெற்றுள்ளார். புதன் கிழமையன்று ஸ்ரீதருக்கு ஆதரவாக மாசாணமுத்து, குருசாமி, பாலசுந்தரம், ஓய்வுபெற்ற மருத்துவர் செங்குட்டுவன் ஆகியோர் சாட்சியமளிக்க மதுரை நீதி மன்றத்திற்கு வந்திருந்தனர். இதில் ஸ்ரீதருக்கு ஆதரவாக சாட்சியமளிக்க வந்த மருத்துவர் செங் குட்டுவன் சாட்சிய மளிக்காமலேயே தெறித்து ஓடினார். இதனால் மருத்துவர் செங்குட்டுவன் தரப்பு சாட்சிய மனுவை வாபஸ்பெற்றார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கிற்கு எதிராக, நீதிமன்ற நிபந்தனைக்கு எதிராக சாட்சியங்களை கலைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றார் என பாதிக் கப்பட்டோர் முறையிட ஆரம்பித்துள்ளனர்.''”

"அதேபோல மடப்புரம் அஜித்குமார் வழக்கிலும் காவல்துறையினர் மீது நீதிபதி அதிருப்தியை வெளிக்காட்டியிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாகப் பணிபுரிந்த காவலர் அஜித்குமார் கொலைவழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் ஜாமீன் வழங்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், ‘அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட் டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி "நகைத் திருட்டு புகாரளிக்கப்பட்டது உண்மையா?' என கேள்வியெழுப்பினார். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், "அது உண்மையில்லை, அறிக்கை தயாராகி வருகிறது'’என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ‘"ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகாரளித்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டி யதுதானே? அவர்தானே காரணம்?'’என கேள்வியெழுப்பினார். (அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை. அது காவல் மரணமென்று ஏற்கனவே 2025, ஜூலை 4, 8, 12 தேதியிட்ட  நக்கீரன் இதழ்களில் நாம் பதிவு செய்திருந்தோம்.) தொடர்ந்து, "முன்விரோதம் ஏதும் இருந்ததா?' என கேள்வியெழுப்பியபோது,  ‘"முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசா ரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள் ளது'’என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ‘"யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது, ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்'’என குறிப்பிட்டு, காவல்துறை மீதான அதிருப்தியுடன் வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.''”

"ஐ.டி. விங்கோட யோசனையை, அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் புறக்கணிச்சிருக்காங்களாமே?''”

rang2

"அதைக் கேட்கிறீங்களா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பூத் ஏஜெண்டுகளையும் ஒருங்கிணைத்த அ.தி.மு.க. ஐ.டி. விங், "உங்களுக்கு ஒரு கையடக்க கருவி தருகிறோம். வீடு வீடாகப் போய் வீட்டி லுள்ளவர்களைச் சந்தித்து, அன்றைய நாளில் அவர்கள் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களின் விலைப்பட்டியலை அதில் பதிவுசெய்யுங்கள். அதனை பிரிண்ட் செய்து அதனுடன் அ.தி.மு.க. ஆட்சியின்பொழுது அப்போதைய விலைப் பட்டியலையும் கொடுத்து ஒப்பீடு செய்யுங்கள். விலைவாசி எவ்வளவு ஏறியிருக்குனு தெரியட்டும். இதுவும் ஒருவகையான பிரச்சாரமே' என்றது. 'சரி சார்... இதற்கு செலவுத் தொகையை யாரிடம் வாங்குவது?' என்றிருக்கின்றார்கள் பூத் ஏஜெண்டு கள். ‘"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, விவரம் சொல்லச் சொன்னார்கள், சொல்லிவிட்டோம்'’ என்றிருக்கிறது ஐ.டி. விங். "இவங்க சம்பாதிச்சுக் குவிப்பதற்கு நாங்க வேலை பார்க்கனுமா?'’ என மெஷினை வாங்காமலேயே புறக்கணிப்பு போராட் டத்தில் உள்ளனர் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள்.''”

"அ..மலை அப்பாவோட உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தல் வேலைகளைப் புறக்கணிக்கப்போறதா கூறுகிறாரே?''”

"நிஜம்தான் தலைவரே! ஆனா உண்மை யான காரணம் அதில்லை. வானதிக்கும் அ..மலைக்கும் இடையே ஒரு மிகப்பெரிய சண்டை நடக்கிறது. வானதி வெற்றிபெற்ற கோவை தெற்குத் தொகுதியை அ..மலை கேட்கிறார். இதை நயினாரும் மற்றவர்களும் கொடுக்கமறுக்கிறார்கள். இதனால்தான் நான் தொகுதி வேலையைப் பார்க்கமாட்டேன் என மாஜி தலைவர் ஒதுங்குவதற்குக் காரணம். இதைப் பற்றி பா.ஜ.க.வினரிடம் கேட்டால், ‘விஜய்யிடம் "உங்கள் கட்சிக்கு வந்துவிடுகிறேன்' என பேசிக் கொண்டிருக்கிறார். இதை ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் மூவரும் எதிர்க் கிறார்கள். எப்படியாவது த.வெ.க.வில் இணைந்து விட விஜய்யிடம் பேசி முயற்சிசெய்து கொண்டிருக்கிறார். விஜய் கட்சியின் கோவை தெற்கு வேட்பாளராக வானதியை எதிர்த்துப் போட்டியிடுவதுதான் இவரது திட்டம்.  தனிக்கட்சி தொடங்கக்கூடாதுன்னுதானே தலைமை எச்சரிச்சது. கட்சி மாறக்கூடாதுன்னு சொல்லலையேன்னு, அதற்காக சாக்குப் போக்குகளையும், காரணங்களையும் தேடிக் கொண்டிருக்கிறார்’ என்கிறார்கள்.''”

"சரி நானும் ஒரு தகவல் சொல்றேன்ப்பா... திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்பெற வைத்து ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்க நினைக்கிறாராம் சசிகலா. இதற்காக திவாகரன், செங்கோட்டையன் மூலமாக விஜய்யிடம் பேசி 25 தொகுதிகளைக் கேட்டிருக்கிறார். அ.தி.மு.க. தோற்ற பிறகு, எடப்பாடியை ஒரு கை பார்ப்பதற்கான வியூகங்களை இப்போதிருந்தே சசி வகுத்து வருகிறார். இதற்கிடையில், "அம்மா அ.தி.மு.க.' என்ற கட்சியை சசிகலா தொடங்குவதாகச் செய்தி வந்தது. ஏற் கெனவே திவாகரனால் பதிவு செய்யப்பட்ட கட்சி இருப்பதால், அண்ணா திராவிடர் கழகத்துக்குத்தான் உயிர்கொடுக்கப் போகிறாராம் சசிகலா.''’