"சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற் குள் மூன்று குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடித் தோம்' என்று செய்தியாளர் களை அழைத்து கெத்து காட்டியது கோவை மாநகர காவல்துறை. ஆனால், "பீளமேடு போலீஸார், மாதம் ரூ.30 ஆயிரத் திற்கு ஆசைப்பட்டு அந்தப் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை ஊக்குவித்ததும், வழக்கமான பீட் ரோந்துப் பணியை செய்யாததுமே கோவை மாணவியின் பாலியல் பலாத்காரத் திற்கு காரணம்' என கோவை மாநகர காவல்துறையை வசைபாடுகின்றனர் பொதுமக்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவில், "வாளின் பின்பகுதியினைக் கொண்டு என்னை அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்திவிட்டு, என்னுடைய காதலியை தூக்கிச் சென்றுள்ளனர் மூவர் அடங்கிய கும்பல்'' என கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே அங்கு ஆஜரானது மாநகர காவல்துறை. "விமான நிலைய சுற்றுச்சுவர் அருகேயுள்ள காலியான மைதானம் அடங்கிய பாதை அது. விமான நிலையம் பின்புறமுள்ள காலனிக்கு செல்வோரால் உருவான ஒரு கரடுமுரடான மண் பாதை. அந்த பாதையில் எஸ்.ஐ.ஹச்.எஸ். காலனி, சிங்காநல்லூர் ரயில் நிலையம், ஹோப் காலேஜ் அருகேயுள்ள ராமானுஜ நகருக்கு செல்லலாம். இல்லையென்றால் 3 கி.மீட்டர்கள் தூரம் சுற்றிச் செல்லவேண்டும். இரவு 10 மணி நெருங்கிவிட்டாலே இந்த வழியை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு பக்கம் உடற்பயிற்சிக்காக பலரும் இந்தப்பக்கம் வந்தாலும்... இது பொறுக்கிகளும், கேடிகளும் உலவும் மகா மோசமான வழி. சமீபகாலங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள், விமானப் பணியாளர்கள் எல்லாரும் பிருந்தாவன் நகர் பகுதியைத் தாண்டி புதர் ஏரியாவினை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
சில வருடங்கள் முன்பு இந்த புதர்காட்டுக்கு நடுவேயுள்ளே ஒரேயொரு காலி குடோன் போன்ற இடத்தில் டாஸ்மாக் திறந்து வைத்தார்கள். சம்பவம் நடந்ததும் அருகேதான். இரண்டு வருடங்களுக்கு முன் மூடப்பட்ட டாஸ்மாக் இப்பொழுதுவரை இயங்கிக்கொண்டி ருக்கிறது. துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் தேவநாதன் தலைமையிலான டீம் அங்குலம் அங்குலமாக அந்தப்பகுதியை அலசினர். இருப்பினும், புதர்கள் அடர்ந்த பகுதி என்பதாலும், இருள் சூழ்ந்த பகுதி என்பதாலும், சுவரைத் தாண்டி மாணவியை கடத்திச் சென்றுவிட்ட தாலும் போலீஸ் பார்வையில் அவர்கள் படவில்லை. அதிகாலை 4 மணிக்குத்தான் மாணவியை மீட்க முடிந்தது'' என்றார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸ் ஒருவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/kovai-incident1-2025-11-07-11-51-11.jpg)
மீட்கப்பட்ட மாணவியிடமும், காயமடைந்த காதலனையும் விசாரிக்க, அருகிலுள்ள கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படிப்பதாகவும், காதலன் ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த வினீத் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், அம் மாணவி, "மதுரைதான் சொந்த ஊர். இரு சக்கர உதிரிபாகங்கள் விற்பனை மையம் நடத்திவரும் வினீத்தும் நானும் காதலர்கள். கல்லூரியின் புராஜெக்ட்டிற்காக வினீத்தை சந்தித்தேன். அது நட்பாகி காதலாகியது. சம்பவ நாளன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவருவதாக பொய் கூறிவிட்டு வினீத்துடன் மறைவான இந்தப் பகுதிக்கு வந்தேன். இதற்கு முன்பும் இந்தப் பகுதிக்கு வந்துள்ளோம். கார் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த நம்பிக்கையில்தான் வந்தோம். ஆனால், எங்கிருந்தோ வந்த மூன்று நபர்கள் காரின் கண்ணாடியை தட்டி இறங்கக் கூறினார்கள்... நாங்கள் மறுத்தோம். உடனே கையிலிருந்த வாள் போன்ற ஆயுதம் கொண்டு காரின் முன்பக்க கண்ணாடியை வெட்டினர். அலறியடித்து வினீத் இறங்க, அவரை வாளின் பின்பகுதியைக் கொண்டு தலையிலும், முதுகிலும் அடித்துக் காயப்படுத்தி னர். ரத்தம்கொட்டி அவர் அலற... அவர் முன்னா லேயே என்னை இழுத்தும், தூக்கிக்கொண்டும் இருட்டுக்குள் சென்றனர். ஆடையற்ற நிலை. இன்னொரு பக்கம் உயிர்ப்பயம். வலியால் துடித்தாலும் வாயைப் பொத்தி துன்புறுத்தினர். சிறிது நேரத்தில் போலீஸ் வந்தது. அருகில் டார்ச் வெளிச்சம் இருந்தாலும், அவர்களின் பேச்சு கேட்டாலும் அவர்கள் எங்களை நெருங்கவில்லை. ஒருகட்டத்தில் புதரைத் தாண்டி இடிந்த சுவர் அருகே சென்று, என்னையும் மேலே ஏற்றி, ஏறிக் குதிக்கவைத்து அங்கேயும் பயன்படுத்தினர். நீண்ட நேரத்திற்குப் பின் ரயில்வே இருப்புப்பாதையில் என்னை கிடத்திவிட்டு அங்கிருந்து மறைந்தனர். போதை மயக்கத்தில் மீண்டும் வந்துவிடுவார்கள் என்கின்ற பயம். மேலாடை மட்டும் நல்ல நிலையிலிருக்க, சுடிதாரின் நாடா அறுக்கப்பட்ட நிலையில், சுடிதாரை கையில் பிடித்துக்கொண்டு பயத்தோடு குடியிருப்புக்கள் இருக்கும் பகுதி நோக்கி விரைந்தேன். ஒரு குடும்பம் வேறொரு சுடிதாரை கொடுத்த நிலையில்... உடையை அணிந்து ஹாஸ்டலை நோக்கிச் சென்றேன். அங்குதான் போலீஸார் என்னை விசாரித்து மீட்டனர். தயைசெய்து என் பெற்றோர்களுக்கு தெரியவேண்டாம்'' என்றிருக்கிறார்.
காதலன் வினீத்தும், காதலியான மாணவியும் கூறிய அங்க அடையாளங்களைக் கொண்டும், கோவில்பாளையம் காவல்நிலைய எல்கைக்குட் பட்ட பகுதியில் டி.வி.எஸ். சூப்பர் எக்ஸெல்லை திருடிக்கொண்டு இங்கு வந்துள்ளனர் என்கிற தகவலைக் கொண்டும், துணை ஆணையர்கள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேட ஆரம்பித்தது கோவை மாநகர காவல்துறை. இதற்கிடையில் வீனீத்தின் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரை (பச37 ஊவ 4249) மீட்ட போலீஸார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து அதனை ஆவணப்படுத்தத் தொடங் கினர். இதேவேளையில், மாணவி பலாத்கார விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும், மாதர் சங்கங்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதியோ, சம்பவ இடத்திற்கு சென்று அரசியல் செய்தார். இதே வேளையில் அங்கு சட்டவிரோத பார் இயங்குவது அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கே சென்று, விற்பனைக்காக வைத்திருந்த சரக்கு பாட்டில்களை உடைத்து தங்களது கோபத்தை பதிவு செய்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/kovai-incident2-2025-11-07-11-51-27.jpg)
"இங்கு அருகில் 1800க்கும் அதிகமான கூலித்தொழிலாளிகள் வசிக்கின்றனர். அவர் களை குறி வைத்தும், இருள் கவ்வும் நேரத்தில் ஒதுங்கும் சட்டவிரோதக் கும்பலை குறிவைத்தும், இந்த சட்டவிரோத பார் இயங்கி வருகின்றது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த இந்த டாஸ்மாக்கை தி.மு.க. அரசு எடுத்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கடையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பீளமேடு போலீஸாரின் துணையோடு 24 மணி நேரமும் சரக்கு பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துவருகின்றனர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் சரவணன் தலைமையிலான டீம். நடுநிசி 1 மணிக்கு சென்று கேட்டாலும் இங்கு பாட்டில் கிடைத்துவிடும். இதற்காக பீளமேடு போலீஸிற்கு இவர்கள் கொடுக்கும் மாமூல் மாதம் ரூ.30 ஆயிரம் மட்டுமே. இதனை தடை செய்திருந்தாலே இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது'' என்கின்றனர் மாநகர உளவுப் போலீஸார்.
இது இப்படியிருக்க, இரவு 11 மணியளவில், வினீத்தை காயப்படுத்தி, மாணவியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த மூவர் அடங்கிய கும்பல் வெள்ளக்கிணறு பகுதியில் இருக்கின்றனர் என்கின்ற தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்றுள்ளது சரவணம்பட்டி, பீளமேடு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய டீம். இதில் சந்திரசேகர் என்கின்ற காவலரை தாக்க முயற்சித்த நிலையில், மூவரையும் சுட்டுப் பிடித்தது காவல் துறை. தொடர் விசாரணையில், "குற்றவாளிகள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன் மற்றும் இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி என உறுதியானது. இதில் சதீஷ், கார்த்தி ஆகியோர் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொலை வழக்கு, கே.ஜி.சாவடி, சூலூர், துடியலூர், பீளமேடு மற்றும் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதிகளில் திருட்டு வழக்குகளும் உள்ளன. சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு ஜாமீனில் வந்து 30 நாட்களாக 3 பேரும் ஒன்றாக சுற்றித்திரிந்து, இருகூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு, கூடுதல் மது தேவைக்காக கோவில்பாளையம் காவல் நிலைய எல்கைக் குட்பட்ட பகுதியில் டி.வி.எஸ். சூப்பர் எக்ஸெல்லை திருடிக்கொண்டு இந்தப் பகுதிக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்கின்றது விசாரணை.
இதே வேளையில், சிங்கம்புணரி எஸ்.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களோ, "இந்த கிராமத்திலுள்ள செகுட்டு அய்யனார் கோவில் மிகவும் சக்திவாய்ந்த கோவில். இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் யாரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது கிடையாது. இவர்கள் இங்கு பிறந்ததை நினைத்து நாங்கள் வருத்தப்படுகிறோம். இந்த கொடூர செயலில் ஈடுபட்டு எங்கள் ஊர் பெயரை கெடுத்த இவர்களை சுட்டுக்கொன்றால் மிகவும் சந்தோசப்படுவோம்'' என்றது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை துணை ஆணையருடன் சந்தித்த கமிஷனர் சரவணசுந்தர், "கோவை விமான நிலையம் பின்புறம், பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறிவியல் ரீதியான ஆதாரங்களை போலீசார் திரட்டி யுள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை சீராக உள்ளார். அவருக்கு உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவர் மீதும் எவ்விதக் குற்றமும் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி போலீசார் ரோந்து சென் றுள்ளனர். சம்பவத்தன்று அப்பகுதிக்கு போலீசார் செல்லவில்லை. மூவரும் குற்றச் சம்பவத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சென்றுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்பது குறித்து அடுத்த விசாரணையில்தான் தெரியவரும். சம்பவம் நடந்த நேரம் 10.40. பாதிக்கப் பட்டவர் 100க்கு அழைத்தது 11.20. போலீஸ் 11.35க்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் சிறு புதரைத் தாண்டி இருந்ததால் கண்டறியத் தாமதமாகிவிட்டது. சம்பவம் நடந்த இடம் யாருடையது என்பது குறித்து வருவாய்த்துறையினருடன் ஆலோசித்து வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் "காவலன் ஆப்' அறிமுகம் செய்தார். அதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுபோன்ற அவசர நேரங்களில் பயன்படுத்த முடியும். 100க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுவரிருந்த பகுதி கும்மிருட்டாக இருந்ததால் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணே நேரடியாக வெளியே வந்தார். அந்தப்பகுதியில் செயல்பட்டுவந்த மதுபான பார் 2 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது'' என்றார் அவர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/kovai-incident3-2025-11-07-11-51-40.jpg)
"கடந்த 2018ஆம் ஆண்டு இப்பாதையில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், 2020 நவம்பர் 26ஆம் தேதி குடிப்பதற்கு பணம்கேட்டு தேனியைச்சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபரை ஒரு கும்பல் கழுத்தறுத்துக் கொன்றுள்ளது. இப்பாதை யில் தொடர் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போலீஸின் ரோந்து இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக் காது. சட்டவிரோத மதுபானக்கூடம் அங்கு இயங்கிவருவதால், வியாபாரத்திற்காக தாங்கள் வாங்கும் மாமூலிற்காக ரோந்தை தவிர்த்துள்ளனர் போலீஸார். அதுதான் காவல்துறைக்கே தலைவலி யாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை தகவல் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட காவல் நிலை யம் கண்டுகொள்வதாயில்லை. சரியாக ரோந்து சென்றிருந்தால், சட்டவிரோத மதுபானக்கூடத்தை அகற்றியிருந்தால் இது நடந்திருக்குமா? காதலன் வினீத் காவல்துறையை அணுகியதால் வெளியில் தெரிந்துள்ளது. இதுபோல் பாதிக்கப்பட்டு வெளி யில் கூறாதவர்கள் எத்தனை பேர்?'' என்கின்றார் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ஒருவர்.
இது இப்படியிருக்க, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் கூடுதல் விசாரணை மேற்கொள் வதற்கு ஏதுவாக லதா எனும் காவல் ஆய்வாளரை நியமித்துள்ளது மாநகர காவல்துறை. செய்தியாளர்களுக்கு செல்லும் செய்திகளைத் தடுக்கவே இவரின் நியமனம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
மாதாமாதம் கிடைக்கும் மாமூலுக்காக தலைகுனிந்தது ஒட்டுமொத்தக் காவல்துறையும் தானே?
__________________
இறுதி சுற்று!
ஆத்திச்சூடியைக் கூட அறியாத விஜய்! -வைகோ கடும் தாக்கு!
த.வெ.க. பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய். இது அரசியல் கட்சித்தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இது குறித்து வியாழக்கிழமை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு. க. பொதுச் செயலாளர் வைகோ, "கருரில் 41 பேர் பரிதாப மாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய விஜய், தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார். நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக மிக தவறான போக்காகும். பொதுவாழ்வில் ஆத்திச்சூடியைக் கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என தெரிவித்திருக்கிறார்.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/kovai-incident-2025-11-07-11-50-47.jpg)