2023, ஜூன் 18ஆம் தேதி கனடாவின் சர்ரே நகரத்தில் அமைந்துள்ள குருநானக் குருத்வாராவின் தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் குருத்வாராவின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்காக செயல்படும் முக்கிய புலம்பெயர் சீக்கிய தலைவராக நிஜ்ஜார் இருந்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜாரின் படுகொலைக்கு பின்னணியில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் இருப்பதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார். கனடாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தின் ‘ரா’ (த&ஆர) உளவு அமைப்பின் அதிகாரியை நாட்டைவிட்டு வெளி யேற்றியது. அதற்குப் பதிலடியாக கனடிய தூதரக அதிகாரியை வெளியேற்றியது ஒன்றிய மோடி அரசு.
இதே காலகட்டத்தில், அமெரிக்காவில் செயல்பட்டுவந்த நிஜ்ஜாரின் நெருங்கிய நண்பரான மற்றொரு சீக்கிய செயற்பாட்டாளர் குர்பட்வண்ட் சிங் பன்னுன் என்பவர் மீதான கொலைச் சதியை அமெரிக்க காவல்துறை முறியடித்தது. இந்த வழக்கில் இந்திய குடியுரிமை கொண்ட சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலைச் சேர்ந்த நிகில் குப்தாவை கைது செய்தது எஃப்.பி.ஐ., இவனை இந்தியாவிலிருந்து இயக்கியதாக ‘ரா’ உளவு அமைப்பின் விகாஷ் யாதவ் என்பவர் மீது குற்றஞ்சாட்டியது எஇஒ.
மோடி -அமித்ஷா மீது கனடாவும், அமெரிக்காவும் வைத்த கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டை விரிவாக "அமித்ஷாவுக்கு எதிராக கனடா சுமத்தும் கொலை குற்றச்சாட்டு' என்ற தலைப்பில் 2024 நவ. 23-26 தேதி நக்கீரன் இதழில் எனது கட்டுரை வெளியானது.
இந்நிலையில் 13ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு நியூயார்க் மாவட்டத்தின் நீதித்துறை விரிவான செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ‘ரா’ உளவு அமைப்பின் அதிகாரியான விகாஷ் யாதவ் உத்தரவின்பேரில், காலிஸ்தான் செயற்பாட்டாளர் குர்பட்வண்ட் சிங் பன்னுனை கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் எஇஒ கைது செய்த நிகில் குப்தா தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், "கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிஜ்ஜாரின் படுகொலை போன்று மேலும் பல ‘டார்கெட்டுகள்’ எங்களுக்கு உள்ளது. உடனே பன்னூன் கொலையை நடத்து'’ என்று ரா அதிகாரி விகாஷ் உத்தரவிட்டதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் நிகில்.
2024ல் மோடி - அமித்ஷா மீதான குற்றச்சாட்டை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையை கடும் எதிர்ப்புக் கிடையே துணிந்து வெளியிட்டது நக்கீரன் இதழ். அதனை பொய் - அவதூறு எனச்சொல்லி சங்பரிவார் பாசிச கும்பல் கொந்தளித்தது. ஆனால் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறது ஒன்றிய மோடி அரசு.
சிறுமிகளை கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள், சர்வதேச தலைவர்கள் ஆகியோருக்கு அச்சிறுமிகளை இரையாக்கினான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் கொடூரன். இதை வைத்து அவர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட்டை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்தான் அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதரும் தற்போதைய ஒன்றிய அமைச்சருமான ஹர்தீப்சிங் பூரி. மோடி தொடர்பாக எப்ஸ்டீன் மேற்கொண்ட உரையாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த பின்னணியில் தான் இந்திய விவசாயிகளையும், நாட்டின் இறையாண்மையையும் அடகு வைக்கும் அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்துக்கு உடன்பட்டுள்ளார் பிரதமர் மோடி.
இப்போது நேரடியாக இந்திய ஒன்றிய அரசு மீது கொலைக் குற்றச்சாட்டை வைத்துள்ளது அமெரிக்க அரசு. ஏற்கனவே மோடியின் முதலாளியான அதானி நிறுவனத்தின் மீதான முறைகேடு விசாரணையும் மற்றுமொரு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்நீதிமன்றம் அதானிக்கு அளித்த சம்மனை ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வருகிறது மோடி அரசு.
பிரதமர் மோடி தன்னையும் தன் முதலாளிகளையும் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவிடம் அடமானம் வைப்பதற்கு ஏழை இந்தியனின் கோவணம் தான் இன்னும் எஞ்சியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/vanniarasu-2026-02-19-18-09-30.jpg)