தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான கும்பகோணம் தொகுதியை இந்தமுறை கைப்பற்றிவிடவேண்டும் என்கிற முனைப்போடு அதிரடியாக தேர்தல் வேலைகளைப் பார்த்துவருகிறது பா.ஜ.க.
தஞ்சை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று கும்பகோணம். மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திலிருந்து இன்றுவரை தி.மு.க. கோட்டையாகவே இருக்கிறது. கடந்த 6 சட்டமன்றத் தேர்தல் களாக தொடர்ந்து தி.மு.க. வசமே இருக்கும் இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் இருந்துவருகிறார். பட்டியல் சமூகத்தினரும், வன்னியர் சமூகத்தினரும், முக்குலத்தோரும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மையாக இருந்தாலும் பிராமணர், சௌராஷ்டிரா மக்களும் கணிசமாக உள்ளனர். இவ்விரு சமூகத்தினரின் வாக்குகள் கடந்த காலங்களில் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருந்ததால் வெற்றி எளிதாக அமைந்தது.
தொடர்ந்து ஐந்துமுறை தி.மு.க.விடம் தோற்று அலுத்துப்போன அ.தி.மு.க., கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த ம
தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான கும்பகோணம் தொகுதியை இந்தமுறை கைப்பற்றிவிடவேண்டும் என்கிற முனைப்போடு அதிரடியாக தேர்தல் வேலைகளைப் பார்த்துவருகிறது பா.ஜ.க.
தஞ்சை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று கும்பகோணம். மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திலிருந்து இன்றுவரை தி.மு.க. கோட்டையாகவே இருக்கிறது. கடந்த 6 சட்டமன்றத் தேர்தல் களாக தொடர்ந்து தி.மு.க. வசமே இருக்கும் இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் சாக்கோட்டை அன்பழகன் இருந்துவருகிறார். பட்டியல் சமூகத்தினரும், வன்னியர் சமூகத்தினரும், முக்குலத்தோரும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மையாக இருந்தாலும் பிராமணர், சௌராஷ்டிரா மக்களும் கணிசமாக உள்ளனர். இவ்விரு சமூகத்தினரின் வாக்குகள் கடந்த காலங்களில் தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருந்ததால் வெற்றி எளிதாக அமைந்தது.
தொடர்ந்து ஐந்துமுறை தி.மு.க.விடம் தோற்று அலுத்துப்போன அ.தி.மு.க., கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு கொடுத்துவிட்டு சைலண்டாக ஒதுங்கிக் கொண்டது. மூ.மு.க.வின் தலைவரான ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிட்டதால் தி.மு.க.வுக்கு வெற்றி இலகுவாகவே அமைந்தது.
கும்பகோணம் அரசியலை நன்கறிந்த மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர், "முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தனது மக்கள் பணியால் கட்சிக்கு அப்பாற்பட்டு தொகுதி மக்களைக் கவர்ந்தவர். அதனாலேயே அனைத்துத் தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர். குறிப்பாக சௌராஷ்டிரா, பிராமண சமுகத்தவர்கள் அவருக்கு ஆதரவு கொடுத் தனர். கும்பகோணத்தில் அ.தி.மு.க. தொடர்ச்சியாக தோற்கக் காரணமே அவர் களுக்குள் இருக்கும் உட் கட்சிப்பூசலும் உள்குத்து வேலைகளும்தான். இந்தமுறை கூட்டணி பலம், தி.மு.க.வி லிருக்கும் மறைமுக கோஷ்டிப் பூசல் உள்ளிட்ட காரணங் களால் தங்களுக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பதை அறிந்து, வெற்றி பெற்றுவிடும் முனைப்பில் பா.ஜ.க. தேர்தல் வேலைகளைத் துவங்கி யிருக்கிறது.
அ.தி.மு.க. சமீபகாலமாக பல கோஷ்டிகளாகப் பிரிந்துகிடக்கிறது. முன்னாள் அமைச்சர்களான ஓ.எஸ்.மணி யன் அணி, ஆர்.காமராஜ் அணி என இரண்டு அணிகள் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பாரதிமோகன், பி.எஸ்.சேகர், முன்னாள் ஒன்றியச் சேர்மன் அழகு.த.சின்னையன் உள்ளிட்டோர் ஒரு அணியாகவும், அவர்களை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ.வும் நகரச் செயலாளருமான ராமநாதன், ஒன்றியச் செயலாளர்களான ஏ.வி.கே.அசோக்குமார், சோழபுரம் அறிவழகன் கருணாநிதி ஆகியோர் ஒரு அணியாகவும் எடப்பாடியிடம் பரஸ்பரம் புகார் வாசிக்கின்றனர்.
2021 தேர்தலில் தனது அமைச்சர் பதவிக்கு போட்டியாக வந்துவிடுவார் என கோவி.செழியனைத் தோற்கடிக்க திருவிடைமருதூரில் சுயேட்சைகளை களமிறக்கிவிட்டது, செழியன் வெற்றிபெற்று அரசு கொறடாவாக ஆனதும் கும்பகோணம் தொகுதிக்குள் நுழையவிடாமல் தனது ஆதரவாளர்களைக் கொண்டு பார்த்துக்கொண்டது எம்.எல்.ஏ. அன்பழகன் தரப்பு. தி.மு.க. தலைமைக்குத் தெரிந்தும் கண்டும்காணாமல் இருந்தது.
கோவி.செழியனை உயர்கல்வித்துறை அமைச்சராக்கியதால், 2026 தேர்தலில் வெற்றிபெற்றாலும் அமைச்சர் பதவி தனக்குக் கிடைக்காது, என கங்கணம்கட்டி மா.செ பொறுப்பைக் குறிவைத்து கே.என்.நேரு மூலமாக காய்நகர்த்தி கல்யாணசுந்தரத்திடமிருந்த மா.செ. பொறுப்பைப் பறித்து மாவட்டச் செயலாளரானார் அன்பழகன்.
இந்த கோபம் கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும், அவரது சமூகத்தினரிடத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது. தி.மு.க.வுக்கு பெரும் பலமாக இருந்த சௌராஷ்டிரா வாக்குகளும், பிராமணர் வாக்குகளும் பா.ஜ.க. களமிறங்கினால் இடம்மாறும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனோடும், சங்கர மடத்தோடும், ஆர்.எஸ்.எஸ். தலைமையோடு மிக நெருக்கமாக இருக்கும் நாராயணி நிதி நிறுவனத்தின் சேர்மன் கார்த்திகேயனை முன்னிறுத்தி பா.ஜ.க.வினர் வேலைகளைத் துவக்கியிருப்பது தி.மு.க.வுக்கு சவாலாக இருக்கும்'' என்கிறார் விரிவாக.
பா.ஜ.க. பிரமுகர்கள் கூறுகையில், "இந்த தொகுதியைக் கேட்பது என முடிவெடுத்து தீர்மானம் போட்டிருக்கிறோம். இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் அனைத் தும் ஒருமனதாக கும்பகோணம் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றி வேலைகளைத் துவங்கிட்டாங்க. தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் கார்த்திகேயனுக்குதான் சீட் கொடுப்பார்கள். கண்டிப்பான மனிதர், கல்விக்கு உதவி, தனது மருத்துவமனையில் இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சத்தமில்லாமல் உதவிகளைச் செய்துவருகிறார். நாராயணி கார்த்திகேயனும், அன்பழகனும் நெருங்கிய நண்பர்கள். கடந்த தேர்தல்களில் அன்பழகனுக்கு ஆதரவாக இருந்தவர், இந்தமுறை நண்பரை எதிர்த்து களம் காணப்போகிறார். பா.ஜ.க.வுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் 2028ல் மகாமகம் வரும்பொழுது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ. கட்சி யைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளைத் தொடங்கிட்டாங்க'' என்கிறார்கள்.
தி.மு.க. பிரமுகர்கள் கூறுகையில், "கும்பகோணம் எப்பவுமே தி.மு.க. கோட் டைதான். மறைந்த முன் னாள் அமைச்சர் கோ.சி. மணி அசைக்க முடியாத அளவுக்கு கட்டமைத்து வைத்துள்ளார்.
இந்தமுறை போட்டி கடுமையாக இருக்கலாம். எஸ்.ஐ.ஆர். துணையுடன் இஸ்லாமியர்கள், சிறுபான் மையினர் வாக்குகளைக் குறிவைக்கலாம். போட்டி கடுமையானாலும் வெற்றி தி.மு.க.வுக்குத்தான்'' என்கிறார்கள்.
அ.தி.மு.க. மா.செ. பாரதிமோகனோ, "இந்தமுறை நிச்சயம் கும்பகோணம் தொகுதியைக் கைப்பற்றுவோம். மக்கள் மத்தியில் தி.மு.க. எதிர்ப் பலை வீசுவது எங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருக்கு'' என்கிறார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us