திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 75வது ஆண்டு விழாவையொட்டி கேரள அரசு சார்பில் கடந்த 20ஆம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப சங்கமத்தை நடத்தினார் கேரளா முதல்வர் பினராய் விஜயன். இந்த சங்கமத்தில் நாடு முழுவதுமுள்ள ஐயப்ப பக்தர்கள் 5,000 பேர்வரை அமருவதற்கு ஏதுவாக பம்பை நதிக்கரையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சங்கமத்தில் 4,165 பேர் கலந்துகொண்டனர். இதில் வெளிநாடுகளிலிருந்து 182 பேரும், அதில் அதிகமாக இலங்கையிலிருந்து 39 பேரும் கலந்துகொண்டனர். கேரளாவில் மட்டும் 1819 பேரும், அதுபோக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா உட்பட மற்ற மாநிலங்களிலிருந்து 2,125 பேரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், தமிழ்நாட்டிலிருந்து அரசு சார்பாக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கமம் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு ஐயப்பன் பாடலுடன் தொடங்கி, மாலை 4 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நிறைவுபெற்றது.
முன்னதாக, சபரிமலை தந்திரி, மேல்சாந்தி இருவரும் ஐயப்பனின் மந்திரங்கள் ஓத, முதல்வர் பினராய் விஜயன், தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தமிழக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கேரள எஸ்.என்.டி.பி. தலைவர் வெள்ளாபள்ளி நடேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராய் விஜயன், “"ஐயப்பா சங்க மத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்றவர்களை சுப்ரீம் கோர்ட்டே எச்சரித்தது. நானும் நீயும் ஒன்றெனச் சொல்லும்போது அங்கு மூன்றாவது நபருக்கு இடமில்லை. அதுதான் சபரிமலை. அங்கு எல்லோரும் சமம்தான். கோவில் நிர்வாகத்தை பக்தர்களின் கையில் கொடுக்க வேண்டுமென்று ஒரு கூட்டம் சொல்லுது. பண்டைய காலங்களில் கோவில்கள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததுபோல் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் தான் கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார்கள். கொரோனா காலத்தில் சபரிமலை உட்பட பல கோவில்களுக்கு வருமானமில்லா நிலையில் பூஜைகள் செய்ய இந்த அரசு 140 கோடியை கொடுத்தது'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களில் 35 சத விகிதம் பேர் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறார் கள். சபரிமலையில் 5 ஏக்கர் நிலத்தை தாருங் கள், தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பாக அந்த இடத்தில் மேம்பட்ட வசதிகளை நாங்கள் உரு வாக்கித்தரத் தயாராக இருக்கிறோம்''’என்றார்.
இந்நிலையில், சேகர்பாபு பேசி முடிந்ததும் புரோட்டோகால் அடிப்படையில் பழனிவேல் தியாகராஜன்தான் பேசவேண்டும். ஆனால் எஸ்.என்.டி.பி. அமைப் பின் தலைவரான வெள்ளாபள்ளி நடே சனை பேச வைத்ததால் கடுப்பாகிப்போன, பழனிவேல் தியாக ராஜன் மேடையில் கோபத்துடன் இருந்தார். இறுதியில் அவர் பேச அழைக்கப்பட்டபோது, “"இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சாமியே சரணம் ஐயப்பா!''” எனக் கூறி பேச்சை முடித்து விட்டு, உடனே மேடையை விட்டு இறங்கி சபரிமலைக்கு புறப்பட்டார்.
ஒருபக்கம், ஐயப்பா சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றபோதும், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் புகைச்சல் இருக்கவே செய்தது. கேரள பா.ஜ.க. யுவ மோட்சா மாநில தலைவி ரம்யா கூறும் போது, “"பம்பையில் நடந்தது ஐயப்ப சங்க மம் அல்ல, எல்.டி.எப். (இடது சாரி) கூட் டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்''’என்று விமர்சித்தார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறும்போது, "சபரிமலையில் கோவில் நடை முகப்பில் இருந்த தங்கத்திலான துவாரக பாலகர் சிற்பத்தை சரிசெய்ய தேவசம் போர்டு சென்னைக்கு போயிட்டு வரும்போது, அதிலிருந்த 4 கிலோ தங்கத்தை காணவில்லை என்று உயர் நீதிமன்றம் சொல்லுது. அந்த தங்கத்தை கொள்ளையடித்தவர்கள் அரசு மற்றும் தேவசம்போர்டைச் சேர்ந்த முக்கிய நபர்கள்தான். அதை மறைக்கத்தான் இந்த சங்கமத்தை நடத்தி பாவத்தை போக்க நினைக்கிறார்கள் என்றார்.
பினராய் விஜயன் அரசின் ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியின் தாக்கம் அடுத்ததாக வரவுள்ள தேர்தலில் எதிரொலிக்கும்.