தி.மு.க. கூட்டணியைப் பொருத்தவரை உறுதியான கூட்டணி அதன் பலம் தான் என்றாலும், ‘தி.மு.க. அரசுக்கு எதி ராக சமூக வலைத் தளங்களில் அவ தூறு பரப்ப காங் கிரசின் பிரவீன் சக்ரவர்த்திக்கு ஆதவ்அர்ஜுன் மூன்றுகோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். பிரவீன் போடும் ட்வீட்டுகளுக்கு எதிரடி கொடுக்கும் பொறுப்பு தி.மு.க.வின் துணை கொள்கைப் பரப்புச் செயலாளரும் டாக்டர் அப்துல் சத்தாரின் மகனுமான அபீசுல்லாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரவீன் சக்ரவர்த்தியின் செயல்பாடுகள் பற்றி சோனியாகாந்தியின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கிறது தி.மு.க. தலைமை. ராகுலிடமும், கார்கேவிடமும் தி.மு.க.வுடன்தான் கூட்டணி என உறுதியாக சொல்லி யிருக்கிறார் சோனியா. அதனால் பிரவீன் சக்ரவர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்திவருகிறார். 

Advertisment

அ.தி.மு.க. கூட் டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரை இணைக்க வேண்டும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. வந்தால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வலு சேர்க்கலாம் என கணக்குப் போடு கிறார்கள். இந்த இணைப்பு முயற்சிகளின் பின்னணியில் சசிகலாவின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களான கே.சி.கருப்பண்ணன், தங்க மணி, வேலுமணி போன்றவர்கள் தினமும் சசிகலாவோடு போயஸ் கார்டன் வீட்டில் உட்கார்ந்து ரகசியப் பேச்சுக்கள் நடத்தி வருகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேச சசிகலா தனியாக ஒரு டீமையே களத்தில் இறக்கியுள்ளாராம். அ.தி.மு.க.வின் ஒருங் கிணைப்புக்கு எடப்பாடி முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனில் அவரையே மாற்றி விடலாம், அ.தி.மு.க.வின் பழைய வரலாறு போல கட்சியின் தலைமைக் கழகத்தை அதிரடியாகக் கைப்பற்றவும் சசிகலா தரப்பு ரகசியத் திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதன் பின்னணியில் பா.ஜ.க. விளையாட்டு உள்ளது என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக் கின்றனவாம்.    

Advertisment

அமித்ஷா வருகை யையொட்டி பா.ஜ.க. தரப்பில் நடிகர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகி அருண்ராஜிடம் கர்நா டகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் மூலம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்கள். ‘எனக்கு முதல்வர் பதவி கிடைக் கும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமைய வேண்டும், யார் 

முதல்வர் என அஎன அ.தி.மு.க.வின் எடப் பாடிக்கு அறிவுரை சொல்லுங்கள்’ என்று விஜய் கண்டிஷன் போட்டதால் பேச்சு வார்த்தை ஒரு கட்டத்திற்குமேல் போகாமல் நின்றுபோனது. நடிகர் விஜய், ஓ.பி.எஸ்., டி.டி.வி. மற்றும் எடப்பாடி ஆகிய அனைவரிட மும் கலந்து ஆலோசிக்கிறார் அமித்ஷா.. அதற்கு முன் விஜய்க்கு ஒரு எச்சரிக்கையாக, கரூர் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகளான புஸ்ஸிஆனந்த், ஆதவ்அர்ஜுன், நிர்மல்       குமார் ஆகியோரை டெல்லிக்கு விசாரணை என அழைத்துள்ளது சி.பி.ஐ. அடுத்த கட்டமாக விஜய்யை கூப்பிட்டு விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. கூட்டணி தலைமை விசயத்தில் தொடர்ந்து விஜய் முரண்டு பிடிப்பதால் டெல்லி சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய்யை அழைக்கத் திட்டமிட்டுள்ளது. விஜய் தாமதமாக வந்ததுதான் கரூர் சம்பவத்துக்கு காரணம் என்கிறது தமிழக அரசு. விஜய்க்கும் கரூர் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்கிறது” த.வெ.க. “தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை கூட்டணிதான் தீர்மா னிக்கும்” என்கிறார் அமித்ஷா. இதனால் அரண்டுபோய் இருக்கிறது த.வெ.க.

Advertisment

“மொத்தத்தில் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழுக்க தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து நிகழ்வு களில் கலந்து கொள் கிறார்.  9, 10ஆம் தேதி விசிட்டில் முழுக்க தமிழக அரசியல்கள சதுரங்க விளை யாட்டில் எடப்பாடியையும் விஜய்யையும் அடித்து ஆடப்போகும் அமித்ஷா, அவரது விசிட்டில் எந்தமாதிரி அணுகுண்டு வீசப்போகிறார் என எதிர்பார்த்து எடப்பாடியும் விஜய்யும்  மிரண்டுபோயிருக் கிறார்கள்”என்கிறது கமலாலய வட்டாரம். 

______________
இறுதிச்சுற்று! 

குடியரசுத் துணைத்தலைவர் வருகை!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார். ஜனவரி 2-ஆம் தேதி வரும் அவர் சென்னை, வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் கிறார். அவரது பயன்பாட்டுக்கு நான்கு ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட் டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டுள்ளன. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு!

தமிழக அரசின் பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்களுக்கு 3,000 ரூபாயும்,  தொகுப்பு ஊதியம், கால முறை ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறி வித்துள்ளார். இதற்காக 183 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது அரசு. ஏற்கனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 248 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

-இளையர்