ரு மனிதனின் வாழ்வு அவரது மரணத்தில் உணரப்படும். கலைஞரின் முதல் மகனான மு.க.முத்து மரணமடைந்த நிலையில், அவர் முன்னாள் முதலமைச் சரின் மகன் என்பதைவிட, இந்நாள் முதலமைச்சரின் அண்ணன் என்பதால் ஊடகச் செய்திகளில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால், மு.க.முத்து எனும் மனிதரை இந்தத் தலைமுறை அறிந்துகொண்டது.

கலைஞரின் குடும்பத்தில் மற்றவர்களைவிட நல்ல குரல்வளம் கொண்டவர் மு.க.முத்து. அது தனித்துவமான குரல். தி.மு.க. பிரச்சார மேடைகளில் அந்தக் குரல் ஒலிக்கும்போது அதைக் கேட்கும் கட்சிக்காரர்கள், “யாரு இவரு? நல்லா பாடு றாரே..”என யோசிக்க, “"இவர்தான் கலைஞரின் மகன் முத்து. பத்மாவதி அம்மையார் மகன்'’என ஒருவர் பதில் சொல்வார். "ஓ... சி.எஸ்.ஜெயராமன் மருமகனா? அப்படின்னா நல்லாத்தான் பாடுவாரு'’ என்று சொல்வார் இன்னொருவர். 

"காவியமா.. நெஞ்சில் ஓவியமா'’என்பது போன்ற பிரபலத் திரைப்பாடல்களை பாடிய பின்னணிப் பாடகரான "இசைச்சித்தர்' சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி பத்மாவதிதான் கலைஞரின் முதல் மனைவி. அவர்களின் ஒரே மகன் மு.க.முத்து. கலைஞர், தன் தந்தை முத்துவேலர் நினைவாக முத்து எனப் பெயர் சூட்டினார். பத்மாவதி அம்மையார் உடல்நலக் குறை வால் இறந்துபோனதால், தாயில்லாப் பிள்ளையான முத்து மீது, கலைஞருக்கு தனிப்பாசம் உண்டு. முத்துவின் திறமைகளை ஊக்கப்படுத்தினார். 

Advertisment

அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் பொருளாள ராக இருந்தார். அவருடைய தீவிர ரசிகராக இருந் தார் கலைஞரின் மகன் முத்து. நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். சாயலில் நடிப்பார். அதை எம்.ஜி.ஆரும் பார்த்துப் பாராட்டினார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் முத்துவுக்கு வந்தது. அஞ்சுகம் பிக்சர்ஸ் எனும் சொந்தப் பட நிறுவனத்தின் மூலம் கலைஞரின் கதை-வசனத்தில் மு.க.முத்து கதாநாயகனாகவும், லட்சுமி  நாயகியாகவும் நடித்த "பிள்ளையோ பிள்ளை' என்ற படம் உருவானது. "பராசக்தி' படத்தின் இயக்கு நர்களான கிருஷ்ணன்-பஞ்சுதான் இந்தப் படத்தை யும் இயக்கினர். படப்பிடிப்பை தொடங்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். 1972ல் படம் வெளியானபோது, “எம்.ஜி.ஆர் மாதிரியே இருக்குல்ல..” என்று முத்து வின் சாயலைப் பார்த்த ரசிகர்கள் பேசிக்கொண்டனர். தி.மு.க. தலைமையுடன் எம்.ஜி.ஆருக்கு சிறுசிறு உரசல்கள் இருந்த நிலையில், மு.க.முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை படம், கட்சிக்கு தொல்லையோ தொல்லையாக மாற்றம் பெற்றது. 

mkamuthu1

எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத்தான் முத்துவை கலைஞர் சினிமா துறையில் இறக்கிவிட்டிருக்கிறார்” என்ற கருத்து, வாட்ஸ்ஆப் இல்லாத அந்தக் காலத்திலேயே வைரல் ஆனது.  அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். உருவாக்குவதற்கு மு.க.முத்து நடித்த படமும் ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. 

Advertisment

உடை, நடை, பாவனைகளில் எம்.ஜி.ஆர் ஸ்டை லை மு.க.முத்து பின்பற்றியது திரையில் அப்பட்ட மாகத் தெரிந்தது. ஆனால், அவருடைய தனித்துவ மாக வெளிப்பட்டது சொந்தக் குரலில் அமைந்த பாட்டுகள்தான். "சமையல்காரன்' என்ற படத்தில், "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...'’ என்று அவர் பாடிய பாட்டும், "அணையா விளக்கு' என்ற படத்தில், ‘நல்ல மனதில் குடியிருக்கும் "நாகூர் ஆண்டவா'’என்ற பாட்டும் மு.க.முத்துவின் திரையுலக முத்திரைகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன. 

கதாயாகனாக ஆறேழு படங்களில் நடித்தவர் பின்னர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங் களில் நடித்தார். 1987ல் கலைஞர் வசனமெழுதிய "வீரன் வேலுத்தம்பி' என்ற படத்தில், அவர் எழுதி -இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் பாடிய, "சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி..'’என்ற பாடல் காட்சி யில் மு.க.முத்து நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. 

தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையோ அரசியல் மேடைகளோ எதிர்பார்த்த அளவில் அமையாத நிலையில், விரக்தியடைந்த மு.க.முத்து மதுப்பழக்கத்திற்கு ஆளானார். குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் அவரிடம் இணக்கம் காட்டியபோதும் தனிப்பாதையில் பயணித்தார். எந்த மு.க.முத்துவை காரணமாகக் காட்டி, எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. தொடங்கப்பட்டதோ, அந்த அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஆட்சியில் இருந்தபோது, நேரில் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க உறுப்பினரான கலைஞரின் மகன் மு.க.முத்து, 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் பெற்றுக் கொண்டார். இது, தி.மு.க.வினர் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அதன்பின் மு.க.முத்து பற்றிய செய்திகள் பெரியளவில் வெளியாகவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்த காலங்களில் சென்னையிலும், திருவாரூரிலு மாக அவர் வசித்து வந்தார். மு.க.முத்து குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக, அவருடைய மகள் தேன்மொழியை, கவின்கேர் (சிக் ஷாம்பு) நிறுவனத் தின் சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்த நிகழ்வு அமைந் தது. கலைஞருடனும் குடும்பத்தினருடனுமான உறவு மு.க.முத்து குடும்பத்திற்கு மீண்டும் வலுப்பட்டது.

முத்துவின் மகன் அறிவுநிதி  திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக தடம் பதித்தவர். மு.க.முத்து வையும் "மாட்டுத்தாவணி' என்ற படத்தில் இசை யமைப்பாளர் தேவா  பாடவைத்தார். இப்படி அவ்வப் போது தன் இருப்பை மு.க.முத்து வெளிப்படுத்தி வந்த நிலையில்தான், ஜூலை 19 அன்று ஈஞ்சம் பாக்கம் வீட்டில் அவர் மரணமடைந்தார். உடனடியாக நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அவருடைய தம்பியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாங்கள் எல்லோரும் வளர்ந்த கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலேயே முத்துவின் உடலை இறுதி அஞ்சலிக்கு வைக்கச் செய்தார். 

மு.க.முத்துவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நமது நக்கீரன் ஆசிரியர், "இந்து' என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர் பாடிய பழைய பாடல்கள் செய்திச் சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒலிபரப் பாகின. ‘"தமிழரெல்லாம் மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? பெரியார் காரணம்'’ என திராவிடர் கழக மேடைகளில் அரை நூற் றாண்டுக்கு மேலாக ஒலிக்கும் பாடலை பாடியது மு.க.முத்து என்பதே அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது. மரண நாளில்தான் மறுபடியும் உயிர்த்தது மு.க.முத்து என்ற கலைஞனின் வாழ்வு!

-கீரன்