ள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பாக நடைபெற்ற அறிவுத் திருவிழா… இருவண்ணக் கொடிக்கு வயது 75, இருநாள் கருத்தரங்கில் இரண்டாவது அமர்வுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். அவர் பேசியபோது, "1949-ல் கழகம் தொடங்கப்பட்ட போது, கழகத்துக்கு தலைமை யேற்று தொடங்கிவைத்த அண்ணாவுக்கு வயது 40. அவருக்கு அடுத்து படை வரிசையிலிருந்த அத்தனை தளபதிகளுக்கும் முப்பதுக்கும் கீழ் தான் வயது. தலைவர் கலைஞருக்கு அப்போது வயது 25. பேராசிரியருக்கு வயது 27. நாவலருக்கு வயது 29. எல்லோ ரும் 30 வயதுக்கு கீழான இளைஞர்கள். ஒரு இயக்கத்தை கட்டமைத்து, 67-லே ஆட்சிக்கு வருகின்றபோது, அனைவரும் நடுத்தர வயதுக்கு வந்து, அந்த வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பெருமைக்குரியது இந்தியாவிலேயே திராவிட இயக்கம் தான். அதற்கடுத்ததாக வேறெந்த இயக்கமும் இந்தியாவில் இளைஞர்களால் இப்படி கட்டமைக்கப்படவில்லை. ஒரேயொரு மாற்று அசாமிலே நடந்தது. அசாமிலே 1985-லே அசாம் கணபரிசத், மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றிபெற்று, அதன் காரணமாக அவர்கள் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றிபெற்றபோது பிரபுல்ல குமார் மொஹந்தா 35 வயதிலே முதலமைச்சராகிறார். ஆனால் அந்த இயக்கம், இரண்டாவது முறை ஆட்சியமைத்து, தொண்ணூறுகளுக்கு பிறகு ஓய்ந்துபோனது! இப்போது பா.ஜ.க.வுக்கு துணைநிற்கும் அடியாள் கட்சியாக மாறிவிட்டது. ஆனால் இந்தியாவில் தோன்றி யதிலிருந்தே தன்னை புதுப்பித்துக்கொண்டு, உயிர்ப்பித்துக்கொண்டு இயங்குகிற இயக்கமாக இந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் இருக்கிறது'' என்று பெருமிதத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்ககால வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

Advertisment

அடுத்ததாக, ‘அச்சு முதல் காட்சி ஊடகங்கள் வரை… திராவிடம் என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் பேசினார். அப்போது, “"அண்ணாவின் 60-களில் பத்திரிகைகள் எப்படியிருந்தது என்று அண்ணாவே சொல்கிறார்... ‘பார்த்தசாரதி அய்யங்கார் நடத்துகிற பத்திரிகைய நாராயண சாஸ்திரி சுவாமிகள் படிச்சி, சுப்பிரமணிய ஐயர் கேட்டு, அதை யாரோவொரு வேணு சாஸ்திரிட்ட நல்லாருக்குன்னு பாராட்டுறாராம்! ஏன்னா பத்திரிகைய அவங்க மட்டும் தான் படிப்பாங்க! இப்படியாக பத்திரிகைகள் நடத்தப்பட்ட காலகட்டம்! அப்படியான சூழலிலிருந்து தமிழர்கள் படிச்சு வந்துகிட்டிருக்காங்க... படித்தவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பினாங்க... பத்திரிகையாளர்களை அமைச்சர்களாக்கினாங்க. ஒரு இயக்கம் ஆட்சியை பிடிப்பது, அதிகாரத்தை பிடிப்பது என்பதல்ல முக்கியம், இந்த இயக்கம், யாரை கொண்டுவந்தது? படித் தவர்களை... பத்திரிகையாளர்களை... ஊடகவியலாளர்களை... சிந்தனையாளர் களை கொண்டுவந்தது! கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி', "அண்ணா தம்பிகளுக்கு எழுதிய கடிதங்கள்' நூல்களை படித்தாலே போதும்... தேசிய அரசியல், உலக அரசியல், பூகோள அரசியல் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம். நெஞ்சுக்கு நீதியை, நீங்கள் படித்தீர்களென்றால் பிடல் காஸ்ட்ரோ வருவார்... சேகுவேரா வருவார்... இன் றைக்கு பேசப்படும் காஸா -இஸ்ரேல் அரசியலையும் எழுதியிருப்பார்''’என பேசினார். 

Advertisment

arivuthiruvilla1

அடுத்ததாக, ‘"கழகம்… மேடை    களில் நிகழ்த்திய கலகம்'’ என்ற தலைப் பில் செந்தில்வேல் பேசியபோது, “"மேடையிலே தி.மு.க. என்னவெல்லாம் கலகம் செய்தது என்று நான் பட்டியலிட்டால் அது பெரிய கலகமாகிடும். மேடையில் பரஸ்பரம் துண்டு போடுகிறார்கள் அல்லவா? அதுவே ஒரு கலகமாகத்தான் அன்றைக்கு பார்க்கப்பட்டது. ஏனென்றால் அன்றைக்கு தோளில் துண்டு போடக்கூடாது! மேடையில் சமமாக உட்கார வைக்கக்கூடாது! நாங்க உட்கார வைப்போம்! மேடைகளை விடுங்கள்… நாடாளுமன்றத்தில் அண்ணா மாநிலங்களவைக்கு சென்றபோது, அவர் உரையாற்றுகிறார். நான் திராவிட இனத்தை சேர்ந்தவன். நான் திராவிடன் என என்னை அழைத்துக்கொள்ள பெருமைப்படுகிறேன். இப்படி கூறுவதால் நான் வங்காளியருக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். நான் என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும்பொழுது, திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான தெளிவான, மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில செய்திகள் இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்கு சுய நிர்ணய உரிமை தேவை'யென்று அண்ணா பேசியபோது ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து திரும்பியது.

கலைஞர் காலத்தில் ராமர் கோவில் கட்டுவது குறித்த பிரச்சனை எழுந்தபோது, “"ராமருக்கு கோவில் கட்டுவதெல் லாம் எனக்கு பிரச்சனையில்லை. பாபர் மசூதியை இடிச்சுட்டு கட்டுவோம்னு சொல்வதுதான் பிரச்சனை'’என்றார் கலைஞர். "ராமன் என்று ஒருவன் இருந்ததாகவோ, அவன் பொறியியல் கல்லூரியில் படித்ததாகவோ ஏதேனும் சான்று இருக்கிறதா?'ன்னு துணிச்சலாகக் கேட்டார். கேட்டது ராமர் மீதான கோபத்தில் அல்ல. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சேது சமுத்திர கால்வாய் திட்டம் வந்தபோது அதை மதத்தின் பெயரால் சிலர் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது அவர் அந்த கேள்வியை கேட்டார்! தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு ஒரு பிரச்சனையென்று வந்தபோது அப்படி கலகக்குரலை எழுப்ப கலைஞரால் மட்டும் தான் முடிந்தது''’என்று குறிப்பிட்டார்.

Advertisment

அடுத்ததாக, ‘"தேசிய ஊடகங்களில் திராவிட முன்னேற்றக் கழகம்'’ என்ற தலைப்பில் உரையாற்றிய பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் பேசுகையில், “"கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகையுலகில் பெரிய மாற்றம் வந்தது. அவர் அதிகம் படிக்கவில்லையென் றாலும், அறிவிலும், எழுத் துத்திறமையிலும், பேச்சுத் திறமையிலும் அவரைவிட பெரிதாய் யாருமில்லை. இந்தியில் வாஜ்பாயை சொல்வார்கள்,…அதேபோல் தமிழில் கலைஞர். அவரிடம் ஈர்ப்பான விதத்தில் பத்திரிகைக்கு செய்திகள் கிடைக்கும். கதைகள் கிடைக்கும். கலைஞரை பற்றி பல விஷயங்களை சொல்லலாம். கலைஞரோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அவர் அணுகக்கூடிய தலைவராக இருந்தார். தமிழ்நாட்டிலுள்ள பல அரசியல் தலைவர்களை பத்திரிகையாளர்கள் எளிதில் அணுகமுடியாது. பேட்டி கிடைக்காது. பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த மாட்டார்கள். ஆனால் கலைஞரை கட்சி அலுவலகத்தில் தினமும் சந்திக்க முடியும். எதாவது ஒரு செய்தி கொடுப்பார். என்னுடைய அனுபவத்தில், ஹிந்து பத்திரிகைக்கு நான் எடிட்டராக இருந்தபோது ஆறு மணிக்கு முன்பாகவே போன் பண்ணிடுவார். எதாவது விமர்சனம் வந்தால், "என்ன இந்த மாதிரி எழுதிட்டீங்க?'ன்னு கேட்பார். உடனே அவரை போய் பார்த்தால், அவர் விளக்கமளித்ததும் அந்த கருத்தோட்டமே மாறிவிடும். இந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. 

arivuthiruvilla2

மிகப்பெரிய தலைவரான அவரிடம் சரித்திரத்தை பற்றி பேசலாம்… இலங்கை பிரச்சனையை பற்றி பலமுறை அவரோடு நான்  பேசியிருக்கிறேன். தேசிய பிரச்சனைகளைப் பற்றி, சர்வதேசப் பிரச்சனைகளைப் பற்றி பேசுவார். அவர், திராவிட இயக்கத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரிய சொத்து என்று சொல்வேன்! அவர் தலைமையில் தி.மு.க. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்கிருந்த ஒரு முதலமைச்சர்கூட பிரதமராகலாம்னு பார்த்தார். நான் பெயரை சொல்லல. ஆனால் தி.மு.க. தலைவர்களுக்கு என்றைக்கும் அதில் ஒரு தெளிவு இருந்தது. தேசிய அரசியலில் எங்களுக்கு பங்குண்டு. அங்குள்ள அரசை தீர்மானிக்கும் சக்தி எங்களுக்குண்டு. ஆனால் பிரதமராவதற்கு எனக்கு ஆர்வமில்லை. என்னுடைய வேலை இங்குதான் இருக்கிறது என்ற தெளிவோடு இருக்கிறார்கள்'' என்று பாராட்டினார்.

arivuthiruvilla3

அடுத்ததாக, ‘"சமகால ஊடகங்களில் சமூக நீதி உரையாட'’ என்ற தலைப்பில் பேசிய ஊடக வியலாளர் பா.ம.மகிழ்நன், "நான் பணியாற்றிய ஊடகங்கள் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்த தென்று பார்த்தால், நடுநிலை எனும்போது விளிம்புநிலை மக்கள், அவர்களின் உரிமைகள் சார்ந்த விஷயங்களை பேசணும்கறதோட,  திராவிட இயக்க வெறுப்போட விமர்சனங்களை நீங்கள் வைத்திருந்தால்தான் நீங்கள் நடுநிலை என்பதுதான். பின்பு, "சார்பட்டா பரம்பரை' படத்துல பணியாற்றினேன். அப்படத்துக்கான ஆய்வுக்காக அந்தக் கால முரசொலியை தேடத் தொடங்கினேன். 70களிலிருந்து 76 வரையிலான பத்திரிகைகளை தேடிப் படித்தேன். அதன்பின் திருநாவுக்கரசு ஐயா எழுதிய நூல்களை தீவிரமாகப் படித்தபோது எனக்கு ஒன்று தோன்றியது. நான் படத்துக்காக வேலை பார்த்தபோது அதற்குள் ஒரு சூப்பர் ஸ்டாரை பார்த்தேன். கேரியரின் உச்சத்திலிருக்கும்போது அதை விட்டுட்டு, அரசியல் என்பதை தேர்ந்தெடுத்து வந்து இந்த களத்தில் வலதுசாரிகளின் எழுச்சியை எதிர்கொள்வதற்காக ஒரு திராணியோடு வேலைபார்த்த ஒரு சூப்பர் ஸ்டார்... அவர் கலைஞர் என்பதை அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். திராவிட இயக்கங்கள், சமகால ஊடகங்களில் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமை கலைஞர், அண்ணா ஆகிய நம் காலத்து நாயகர்களை சூப்பர் ஸ்டார்களாகக் காட்டக்கூடிய வெப் சீரிஸ் வந்திருக்க வேண்டும்'' என்றார்.

(கருத்தரங்கம் தொடரும்)

-தொகுப்பு: தெ.சு.கவுதமன்