Advertisment

அசத்தும் அயலகத் தமிழர் நலவாரியம்!

tamil

 

"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது முன்னோர் வாக்கு. அப்படி திரைகடல் கடந்து பொருளீட்டும் இந்தி யர்களின் பணம் அந்நியச் செலவாணியாக இந்தியாவுக்கும், அவரவர் சம்பந்தப்பட்ட மாநில வளர்ச்சிக்கும் உதவுகிறது. பதிலுக்கு சம்பந்தப்பட்ட அயலக இந்தியர்களுக்கும் நாமும் உதவ வேண்டுமல்லவா!

Advertisment

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அயலக தமிழர்களுக்கு என பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பொறியாளர்கள் மன்றம் சார்பாக ஏற் பாடு செய்யப்படட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அயலக நலத்துறையின் முன்னாள் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. அந்த அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், "நமது அண்டை மாநிலங்கள், வெளிநாட்டில் வாழும் மக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு என்று தனித் துறையை ஏற்படுத்தி செயல்படுத்திவந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். பத்தாண்டிற்குப் பின்பு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அயலகத் தமிழர் நல வா

 

"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது முன்னோர் வாக்கு. அப்படி திரைகடல் கடந்து பொருளீட்டும் இந்தி யர்களின் பணம் அந்நியச் செலவாணியாக இந்தியாவுக்கும், அவரவர் சம்பந்தப்பட்ட மாநில வளர்ச்சிக்கும் உதவுகிறது. பதிலுக்கு சம்பந்தப்பட்ட அயலக இந்தியர்களுக்கும் நாமும் உதவ வேண்டுமல்லவா!

Advertisment

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அயலக தமிழர்களுக்கு என பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பொறியாளர்கள் மன்றம் சார்பாக ஏற் பாடு செய்யப்படட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அயலக நலத்துறையின் முன்னாள் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. அந்த அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், "நமது அண்டை மாநிலங்கள், வெளிநாட்டில் வாழும் மக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு என்று தனித் துறையை ஏற்படுத்தி செயல்படுத்திவந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். பத்தாண்டிற்குப் பின்பு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அயலகத் தமிழர் நல வாரியம் அயலக நலத்துறையின்கீழ் அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அயலகத் தமிழர்களுக்கு  செயல்படுத்தப்பட்டன.  

இந்நிலையில் அயலகத் தில் இருக்கும் பொறியாளர்களால் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ்ப் பொறியாளர் மன்றம், 28 நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.  இந்த அமைப்பின் சார்பாக வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவுள்ள சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து அமைச்சர்கள், தொழில் வல்லுனர்கள், தொழில் முனைவோர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.  

பல்வேறு நாடுகளிலிருந்து கலந்துகொண்ட பொறியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற மனநிலையில் இருப்பது -குறிப்பாக அயலக நலத்துறையின் செயல்பாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது தமிழக அரசு செய்த பணிகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். சர்வதேச தமிழ்ப் பொறியாளர் மன்றத்தின் இந்த செயல்பாடு மிகப்பெரிய சமூக மாற்றத்தினைக் கொண்டுவரும். அயலகத் தமிழர்கள் குறித்து இதுவரை யாரும் அக்கறைசெலுத்தாமல் இருந்தபோது, அவர்களுக் கான நலத்துறை மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்களுக்கு மருத்துவக் காப்பீடு, அவர்கள் குடும்பத்தினர் கல்வி கற்க சலுகை, வேர்களைத் தேடி என்கிற திட்டத்தின் மூலம் பல தலைமுறை கள் தமிழகத்தின் தொடர்பில்லாமல் இருப்பவர்களை, தமிழக அரசின் செலவில் தமிழகம் அழைத்துவந்து முழுமையாக தமிழக கலாச்சாரம், தமிழக வளர்ச்சி தொடர்பாக சுற்றுலா அழைத்துச்செல்வது, அவர் களை அந்நாட்டில் நமது கலாச்சார தூதுவர்களாக நியமிப்பது போன்ற திட்டங்களால் அவர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அயலகத்தில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகளை மேற்கொள்ள சட்ட வல்லுனர் களை நியமித்துள்ளோம். நான் பஹ்ரைன் வந்துள் ளேன் என்றறிந்து என்னை விமான நிலையத்தில் வந்து சந்தித்த சுல்தான் இப்ராஹீம் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவிகள் செய்துவந்தவர். இவரை அயலக நலத்துறையின் சட்ட ஆலோசகராக தற்போது நியமித்துள்ளனர். இந்த அங்கீகாரத்தால் பணிகள் வேகமாக செயல்படுகிறது'' என்று தெரிவித்தார். 

Advertisment

tamil1

"தமிழர்களுக்கு வேறு என்னவிதமான உட னடித் தேவைகள் உள்ளன?'' என்று கேட்டபோது, "என்.ஐ.டி., ஐ.ஐ.டி. ஆகியவற்றில் சேர்ந்து படிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 5 சதவீத கூடுதல் இடங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு கட்டணமும் 40% குறைவு. அதேபோல் வெளிநாடு மாணாக்கர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று  கத்தார்வாழ் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சர்வதேச தமிழ்ப் பொறியாளர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளர் செல்வம், ‘"பொறியாளர் களுக்கு என்று தமிழில் எந்தவித அமைப்பும் தமிழகத்தில் சிறப்பாக இல்லை.  பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் தமிழர்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.  அவர் களில் பலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் இருந்தால் முதல் வாய்ப்பு தமிழர்களுக்குத் தருகின்றனர்.  அதேபோல் தற்போது தமிழக அரசின் டான்செம் -உலகளாவிய பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக் கான மையம், தமிழ்ப் பொறியாளர் மன்றத்துடன் இணைந்து சுமார் 3,000 பொறியாளர்களை பணிக்கு ஒப்பந்தம் செய்யவுள்ளனர்.  அபுதாபியி லுள்ள ஒரு நிறுவனம் கோவையிலிருக்கும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதனால் ஆயிரம் கோடியளவில் வர்த்தம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 450 கோடி வர்த்தகத்தைப் பெற்றுள்ளனர் நமது குழுவினர். இதன்மூலம் தமிழர்களின் பொருளா தார நிலை உயர்வதோடு பல தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நிலை எற்பட்டுள் ளது.  வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் எங் கள் மாநாட்டில் பல நாடுகளிலிருந்து அமைச்சர் கள், துறைசார்ந்த வல்லுனர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.  குறைந்தபட்சம் 2000-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க் கிறோம்’ என்று தன்னிடம் தெரிவித்தார்'' என கிருஷ்ணமூர்த்தி பெருமைப்பட்டார். 

சர்வதேச தமிழ்ச் சமூகத்திற்கு இதுபோன்ற அமைப்புகள் மூலம் பயனளிக்கும் என்றால் தமிழ்ச் சமூகம் பல தலைமுறைகளுக்கு சாதனைத் தமிழர்களாக திகழ்வார்கள் என்பதில் சந்தேக மில்லை. 

 

nkn030925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe