வேற்று அணி முடிவில் எடப்பாடி கந்தலாகும் அ.தி.மு.க.

admk

 

‘கூட்டணி ஆட்சிதான்’ என அமித்ஷா அடித்துக்கூற, “தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்” என எடப்பாடி பழனிசாமி மறுத்துப்பேச, இதற்கெல்லாம் முடிவுகட்டத்தான் வருகிறார் பிரதமர் மோடி என சூசகமாக தகவல் கசிய விடுகிறது பா.ஜ.க.வின் கமலாலயம்! 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வோ, எடப்பாடி பழனிச்சாமியின் முடிவால் தனது கட்டமைப்பை மெல்ல இழந்து வருவதாகவும், பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்ததிலிருந்து, அ.தி.மு.க.வின் கொள்கைகள் காற்றில்  பறப்பதாகவும் ஆதங்கத்தில் தவித்து வரு கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, மக்களும், உண்மையான தொண்டர்களும் என் பக்கமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க, ‘"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'’ என்ற குரலோடு இம்மாதம் 7ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்கி, மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து வருகிறார் எடப்பா

 

‘கூட்டணி ஆட்சிதான்’ என அமித்ஷா அடித்துக்கூற, “தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்” என எடப்பாடி பழனிசாமி மறுத்துப்பேச, இதற்கெல்லாம் முடிவுகட்டத்தான் வருகிறார் பிரதமர் மோடி என சூசகமாக தகவல் கசிய விடுகிறது பா.ஜ.க.வின் கமலாலயம்! 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வோ, எடப்பாடி பழனிச்சாமியின் முடிவால் தனது கட்டமைப்பை மெல்ல இழந்து வருவதாகவும், பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்ததிலிருந்து, அ.தி.மு.க.வின் கொள்கைகள் காற்றில்  பறப்பதாகவும் ஆதங்கத்தில் தவித்து வரு கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, மக்களும், உண்மையான தொண்டர்களும் என் பக்கமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க, ‘"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'’ என்ற குரலோடு இம்மாதம் 7ஆம் தேதி முதல் கோவையிலிருந்து தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்கி, மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மின் கட்டண உயர்வு, வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட 4 லட்சம் கோடி கடன் என்று குற்றம்சாட்டி பேசிவரும் எடப்பாடிக்கு, அவ்வப்போது பதிலடி கொடுத்து திணறடிக்கிறார் மு.க.ஸ்டாலின். போதாக் குறைக்கு, "கூட்டணி ஆட்சிதான்' என்று தொடர்ச்சியாகப்பேசி வெறுப்பேற்றுகிறார் அமித்ஷா. அவருக்கு பதிலளிப்பதற்காக, "அ.தி.மு.க. தனித்துதான் ஆட்சியமைக்கும்' என்று எடப்பாடி கூறிவந்தாலும், சிலந்தி வலைக்குள் சிக்கிய அ.தி.மு.க. விரைவில் சிதறும்' என்று ஆருடம் கூறுகிறார்கள் எம்.ஜி.ஆர். காலத்து மூத்த அ.தி.மு.க.வினர் சிலர். 

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “"தமிழகத்தின் இரும்புப்பெண்மனி எனக்கூறப்பட்ட ஜெயலலிதா காலத்தில்கூட அ.தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது. பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி, அதன்பிறகுதான் கூட்டணி குறித்த முடிவுகளை எடுத்து வந்தார் ஜெயலலிதா. கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரும் அப்படித்தான். ஆனால், தற்போது எடப்பாடியின் தனிப்பட்ட முடிவுகளால்தான் இத்தனை குழப்பங்களும். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடப்பாடி அறிவித்தபோது எழுந்த எழுச்சி, தற்போது இல்லாமல் போனதற்கான காரணம் இதுதான். 

இதற்கிடையே, “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே தேசிய ஜனநாயகக்கூட்டணி அறிவிக்கும்” எனக்கூறி அதிரவைக்கிறார் டி.டி.வி.தினகரன். இப்போதுவரை முதலமைச்சர் வேட்பாளர் யாரென்று சொல்லாமல், தமிழக அமைச்சரவை யில் பா.ஜ.க. பங்கு வகிக்குமென்று அமித்ஷா சொல்லிவருகிறார். ஒருவேளை, அப்படியொரு குழப்ப சூழலில் தேர்தலை சந்தித்தால் வெற்றிபெறுவது கேள்விக்குறிதான். காரணம், ஜெயலலிதாவால் அடியோடு வெறுக்கப்பட்ட பா.ஜ.க.வை அரியணையேற்ற எந்த அ.தி.மு.க. தொண்டனும் தயாரில்லை. 

admk-amitsha

‘கூட்டணி ஆட்சி’ என்ற தேனைத் தடவி, சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்து, அழித்தொழிப்பதுபோல் இரட்டை இலைக்கு குறிவைக்கிறது பா.ஜ.க. அதற்கு, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி போன்றவர்களும் உடந்தையாக உள்ளனர். இப்படியான சூழலில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி விடுவதே அ.தி.மு.க. எதிர் காலத்துக்கு நல்லது.

தற்போது, த.வெ.க. தலைவர் விஜய், “பி.ஜே.பி. யோடு கூட்டணி இல்லை” எனத் தெளிவாகத் தெரி வித்துள்ளதால், அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்) ஆகியோர் ஓரணியில் இணைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, விஜய்யும், ஓ.பன்னீர்செல்வ       மும் சிங்கப்பூரில் சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்ற ஒரு கூட்டணி உருவாகும்பட்சத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், தற்போது கட்டுக்       கோப்பாக உள்ள தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக சிதறுவார்கள். அ.தி.மு.க.வை காப்பாற்ற அந்த ஆண்டவனால் கூட முடியாது''’என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

பா.ஜ.க.விடமிருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பது குறித்து, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.க.வின் எண்ண ஓட்டத்தை அறிய, மத்தியில் செல்வாக்கோடு இருப்பவரும், பா.ஜ.க.வின் தலைமையகமான கமலாலயத்திலுள்ள முக்கிய நிர்வாகியான ஒருவரை சந்தித்தோம். தன் தலையிலுள்ள         புதிய தொப்பியை சரிசெய்துகொண்டே புன்சிரிப்போடு பேசியவர், “"ஜூலை 8ஆம் தேதியே அமித்ஷா சென்னை வர இருந்தார். விரைவில் அவர் இங்கு வரும்போது இன்னும் சில முக்கியமான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமே தவிர, அ.தி.மு.க.  -பா.ஜ.க. கூட்டணி ஒருபோதும் உடையாது. தவிர, இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டத்திற்கு விசிட் அடிக்கிறார் பிரதமர் மோடி. அப்போது, நடைபெறவுள்ள கூட்டத்தில் எடப்பாடியும் கலந்து கொள்வார். அவர் முன்னிலையிலேயே, கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை மோடியே தெளிவாக தெரிவிப்பார். எங்களை பொறுத்தவரை, அவர் என்ன சொல்வார் என்பதை அமித்ஷா ஏற்கெனவே கூறி விட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை அதுதான் வேத வாக்கு''’ என்றார்.

ஆக, மொத்தத்தில், சல்லி சல்லியாக சிதறக் காத்திருக்கிறதா அ.தி.மு.க?

 

 

nkn160725
இதையும் படியுங்கள்
Subscribe